எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – ஆதார் – பான் இணைப்பு அவசியம்!

0
எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு - ஆதார் - பான் இணைப்பு அவசியம்!
எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு - ஆதார் - பான் இணைப்பு அவசியம்!
எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – ஆதார் – பான் இணைப்பு அவசியம்!

நாடு முழுவதும் அனைவரும் தங்களின் பான் எண்ணை ஆதார் எண்ணை இணைப்பதற்கு மத்திய அரசு செப்டம்பர் 30ம் தேதி வரை மத்திய அரசு அவகாசம் வழங்கியுள்ள நிலையில், SBI வங்கி தனது வாடிக்கையாளர்களை எச்சரித்துள்ளது.

ஆதார்- பான் இணைப்பு:

ஆதார் மற்றும் பான் அட்டையை இணைப்பதற்கு இதற்கு முன்னர் மத்திய அரசு பல முறை அவகாசம் அளித்துள்ள நிலையில், கொரோனா தொற்று நோயை கருத்தில் கொண்டு இதற்கு மேலும்,செப்டம்பர் 30ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதனால் இதுவரை பான் மற்றும் ஆதார் அட்டையை இணைக்காதவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா தனது வாடிக்கையாளர்களுக்கு தங்கள் பான் கார்டை ஆதார் உடன் இணைக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது. ஆதார் எண்ணுடன் பான் எண்ணை இணைக்கும் வழிமுறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஜீ தமிழ் செம்பருத்தி சீரியலில் இருந்து விலகும் ப்ரியா ராமன் – பிக் பாஸ் தான் காரணமா?

புதிய வருமான வரி இ-தாக்கல் இணையதளத்தில் நேரடியாக ஆதார் மற்றும் பான் எண்ணை இணைக்கும் முறை:

  • முதலில் நேரடியாக incometax.gov.in என்ற இணையதளத்திற்கு செல்லவும்.
  • ‘Our services’ என்பதை தேர்வு செய்ய வேண்டும்.
  • அதில், PAN மற்றும் ஆதார் விவரங்களை பதிவு செய்ய வேண்டும்.
  • இப்பொழுது, உங்கள் மொபைல் எண்ணை பதிவிட வேண்டும்.
  • எனது ஆதார் விவரங்களை சரிபார்க்க ஒப்புக்கொள்கிறேன் என்பதை தேர்வு செய்ய வேண்டும்.
  • அதில், LINK ஆதார் மீது கிளிக் செய்ய வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

எஸ்எம்எஸ் மூலம் பான் எண்ணுடன் ஆதார் இணைக்கும் முறை:

எஸ்எம்எஸ் மூலமும் பான் எண்ணை ஆதார் உடன் இணைக்க, உங்கள் தொலைபேசியில் UIDPAN என தட்டச்சு செய்து 12 இலக்க ஆதார் எண் மற்றும் 10 இலக்க PAN எண்ணை 567678 அல்லது 56161 என்ற எண்ணுக்கு செய்தி அனுப்ப வேண்டும். இப்பொழுது, உங்கள் பான் எண் ஆதார் உடன் இணைக்கப்பட்டு விடும்.

PAN- ஆதார் இணைப்பு நிலை சரிபார்ப்பு:

ஆவணங்கள் முறையாக இணைக்கப்பட்டுள்ளதா என்பதை அறிய நீங்கள் “இணைப்பு ஆதார் நிலையை” கிளிக் செய்து உங்கள் பான் மற்றும் ஆதார் எண்ணை உள்ளிட வேண்டும். இப்பொழுது உங்கள் இணைப்பு நிலை உங்களுக்கு தெரிவிக்கப்படும்.

அபராதம்:

அரசு அறிவித்துள்ள காலக்கெடுவிற்குள் ஒருவர் பான் மற்றும் ஆதார் இணைக்கத் தவறினால், அவர்கள் 1,000 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். உங்கள் பான் கார்டு செயலிழந்து விடும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!