TNPSC இந்திய அரசியலமைப்பு – மாநில நிர்வாகத்துறை

0
மாநில நிர்வாகத்துறை

ஆளுநர்

  • நமது இந்திய அரசியலமைப்பின் ஷரத்து 153ன் படி ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஓர் ஆளுநர் நியமிக்கப்பட வேண்டும்.
  • மாநில ஆளுநர் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகிறார். பாராளுமன்ற நடைமுறைக்கிணங்க ஆளுநர் மாநிலத்தின் பெயரளவு தலைவராவார்.
  • 1956-ஆம் ஆண்டின் 7-ஆவது அரசியலமைப்பு திருத்தம் ஒரே ஆளுநர் இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்ட மாநிலங்களுக்கு ஆளுநராக பதவி வகிக்கலாம் என்று வழி வகை செய்தது.
  • மாநிலத்தின் செயல்துறை அதிகாரம் ஆளுநரிடத்தில் உள்ளது. மாநிலத்தின் எல்லா செயல்துறை நடவடிக்கைகளும் ஆளுநரின் பெயராலேயே செயல்படுத்தப் படுகின்றன.
  • இந்தியக் கூட்டாட்சி முறையில் மாநிலத்தின் அரசியலமைப்புத் தலைவர், மத்திய அரசின் பிரதிநிதி ஆகிய இரட்டைத் தன்மையான பங்கினை ஆளுநர் பதவிக்கு அரசியலமைப்பு வழங்கியுள்ளது.

தகுதிகள்

  • அரசியலமைப்புப் படி 2 வித தகுதிகள் ஆளுநர் நியமனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன.

1. இந்திய குடிமகனாக இருக்க வேண்டும். 2. 35-வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும்.

  • மேலும் மரபுப்படி 2 தகுதிகள் பின்பறறுபடுகின்றன.
  • பதவி வகிக்கும் மாநிலத்தைச் சேர்ந்தவராக இருக்கக் கூடாது.
  • ஆளுநரை நியமிக்கும் போது குடியரசுத்தலைவர் சம்பந்தப்பட்ட மாநிலத்தின் முதலமைச்சரை கலந்து ஆலோசிக்க வேண்டும்.
  • ஆளுநர் பதவியேற்றதிலிருந்து 5 ஆண்டுக்காலம் பணியாற்றலாம். எனினும் 5 ஆண்டு பணிக்காலம் என்பது குடியரசுத் தலைவர் விரும்பும் வரை ஆகும்.
  • ஆளுநர் தான் விரும்பியபோது தனது பதவியை விட்டு விலகலாம். பதவி விலகல் கடிதத்தை குடியரசுத்தலைவரிடம் சமர்பிக்க வேண்டும்.

ஆளுநரின் அதிகாரம் மற்றும் பணிகள்

  1. நிர்வாக அதிகாரம்
  • ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஆளுநர் ஒருவர் இருத்தல் வேண்டும்.
  • ஒரு மாநிலத்தின் நிர்வாக நடவடிக்கைகள் அனைத்தும் ஆளுநரின் பெயரில்தான் எடுக்கப்பட வேண்டும்.
  • மாநில முதலமைச்சர்களையும் இதர அமைச்சர்களையும் ஆளுநர் நியமிக்கிறார்.
  • ஜார்க்கண்ட் மற்றும் சத்தீஷ்கர், மத்தியபிரதேசம், ஒரிசா போன்ற மாநிலங்களில் மலைவாழ் மக்களின் மேம்பாட்டுக்கான அமைச்சரை ஆளுநரே நியமிக்கிறார்.
  • மாநில அரசின் தலைமை வழக்குரைஞரையும், மாநிலதேர்தல் ஆணையரையும் நியமிக்கிறார். மேலும் அவர்களது பதவிக்காலம், ஊதியம், படி ஆகியவற்றையும் ஆளுநர் தீர்மானிக்கிறார்.
  • மாநில பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை ஆளுநர் நியமிக்கிறார்.
  • இவர் மாநில நிர்வாக சம்பந்தமான தகவல்களையும், மசோதாக்களையும் முதலமைச்சர் வாயிலாக பெற்றுக்கொள்கிறார்.
  • மாநிலத்தில் குடியரசுத்தலைவர் ஆட்சியை செயல்படுத்த குடியரசுத்தலைவருக்கு பரிந்துரைப்பர்.
  • மாநில பல்கலைக்கழகங்களின் தலைவராக ஆளுநர் உள்ளார். மேலும் பல்கரைக்கழகத் துணைத்தலைவர்களையும் ஆளுநர் நியமிக்கிறார்.
  1. ஆளுநரின் சட்டமியற்றல் சார்ந்த அதிகாரம்
  • மாநில ஆளுநர் மாநில சட்டமன்றத்துடன் ஒருங்கிணைந்தவர் ஆவார்.
  • மாநில சட்டமன்ற அவையை (அ) அவைகளை ஒத்திவைக்கவும், கலைக்கவும் ஆளுநருக்கு உரிமை உண்டு.
  • சட்டமன்றத்தில் ஆங்கில-இந்திய இனத்ததை சேர்ந்த ஒருவரை சட்டமன்ற உறுப்பினராக நியமிக்கிறார்.
  • சட்டமேலவையில் 1ஃ6 பங்கு உறுப்பினர்களை நியமிக்கிறார். கல்வி, அறிவியல், கலை, கூட்டுறவு மற்றும் சமூக சேவை ஆகியவற்றில் சிறந்த அனுபவம் வாய்ந்த சான்றோர்களை நியமிக்கிறார்.
  • சரத்து 213-ன் படி அவசர கால சட்டங்களை ஆளுநர் பிறப்பிக்கலாம்.
  1. ஆளுநரின் நிதிநிலை உறவுகள்
  • ஆண்டு நிதிநிலை அறிக்கையை ஆளுநர் சட்டமன்றத்தின் இரு அவைகளிலோ அல்லது அவையிலோ சமர்பிக்க வேண்டும் என சரத்து202(1) கூறுகிறது.
  • அவசர கால நிதியிலிருந்து தேவைப்படும் போது பணம் எடுக்க ஆளுநருக்கு உரிமை உண்டு.
  • 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை கிராம பஞ்சாயத்து மற்றும் நகர பஞ்சாயத்துக்கான நிதிகளை பங்கீடு செய்யும் மாநில நிதி ஆணையத்தை புதுப்பிப்பார்.
  • ஆரசியலமைப்பின்படி ஆளுநரின் நிலை
  • மாநிலத்தின் செயலாண்மை அதிகாரம் ஆளுநரின் மூலம் நேரடியாகவோ அல்லது அவரால் நியமிக்கப்படும் அலுவலர் மூலமாகவோ செயல்படுத்தப்பட வேண்டும். (சரத் 154)
  • ஆளுநருக்கு அறிவுரைகள் வழங்க முதலமைச்சர் உள்ளடங்கிய மந்திரிகள் சபை இருக்க வேண்டும். (சரத் 163)
  • மந்திரிகள் குழு, மாநில சட்டசபைக்கு கூட்டாக சேர்ந்து பொறுப்பு கொண்டலர்கள் (சரத் 164)
  • மேற்கண்டவைகளிலிருந்து ஆளுநரின் அரசியல் சட்டநிலை குடியரசுத்தலைவரிடமிருந்து இரு வழிகளில் வேறுபடுகிறது என்பதைக் காணமுடிகிறது.
  • ஆளுநர் சில தருணங்களில் அவரது சொந்த முடிவுகளைக் செயல்படுத்த அரசியலமைப்பில் இடம் உள்ளது. ஆனால் குடியரசுத் தலைவருக்கு அவ்வாறான அதிகாரங்கள் இல்லை.
  • 42வது சட்டதிருத்தத்திற்கு (1976) பிறகு, குடியரசுத்தலைவர் மந்திரிகள் சபையின் ஆலோசனைக்கு இணங்க வேண்டிய கட்டாயம் வந்ததது. ஆனால் ஆளுநருக்கு அப்படியொரு கட்டாயம் இல்லை.

ஆளுநரின் தன் விருப்ப அதிகாரங்கள் (Discretionary Powers)

  • குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்காக எந்த ஒரு மசோதாவையும் ஆளுநர் அனுப்பி வைக்கலாம்.
  • மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை பிரகடனப்படுத்த ஆளுநர் பரிந்துரைக்கலாம்.
  • மாநிலத்தின் நிர்வாகம் மற்றும் சட்டமியற்றுதல் தொடர்பான தகவல்களை முதலமைச்சரிடமிருந்து கேட்டுப் பெறலாம்.
  • பொதுத் தேர்தலுக்குப் பின்பு சட்டமன்றத்தில் எந்தக் கட்சிககும் தெளிவான அல்லது தனிப் பெரும்பான்மை இல்லாத போது எந்தக் கட்சியின் தலைவரையும் அமைச்சரவை அமைக்க அழைக்கலாம். அத்தகைய அமைச்சரவை குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் அவையில் நம்பிக்கைத் தீர்மானத்தை நிறைவேற்றுவும் உத்தரவிடலாம்.
  • அமைச்சரவை நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி அமைந்தால் ஆளுநர் அமைச்சரவையை நீக்கம் செய்யலாம், மற்றும்
  • அமைச்சரவை தனது பெரும்பான்மையை இழந்தால் ஆளுநர் சட்டசபையைக் கலைக்கலாம்.
  • அசாம், மேகாலயா, மிசோரம் மற்றும் திரிபுரா மாநிலங்களின் பழங்குடியினர் பகுதியில் வழங்கப்பட்ட கனிம உரிமங்களுக்காக மாவட்ட கவுன்சில்களுக்கு ராயல்டி தொகை வழங்குவது.
  • இத்தகைய தன்விருப்ப அதிகாரங்களில் ஆளுநர் தமது சொந்த அறிவையும், தன் விருப்புரிமையையும் பயன்படுத்திச் செயல்படுவார். அமைச்சரவையின் ஆலோசனைப் படி செய்ய வேண்டிய அவசியமில்லை.

இதர அதிகாரங்கள்

  • மாநிலப் பொதுப்பணி ஆணையத்தின் ஆண்டு அறிக்கையைப் பெறுதல் மற்றும் அதனை அமைச்சரவை, சட்டமன்றம் ஆகியவற்றின் விவாதத்திற்காக சமர்ப்பித்தல்.
  • மாநில அரசாங்கத்தின் பல்வேறு துறைகளால், மேற்கொள்ளப்பட்ட வரவு மற்றும் செலவினம் தொடர்பான இந்தியத் தலைமை கணக்காளர் மற்றும் தணிக்கையாளரின் அறிக்கையைப் பெறுதல்.

சிறப்பியல்புடைய பொறுப்புகள் (Special responsibilities)

  • குடியரசுத்தலைவரின் ஆணைப்படி சில விசேஷமான பொறுப்புகளையும் ஆளுநர் நிறைவேற்றுகிறார். இத்தகையவற்றில் அமைச்சரவையின் ஆலோசனையை ஆளுநர் பெற்றாலும் கூட இறுதி முடிவை அவரே எடுக்கிறார்.
  • மகாராஷ்டிரா– விதர்யா மற்றும் மராத்வாடா பகுதிகளுக்கென்று தனியான மேம்பாட்டு வாரியம் அமைத்தல்.
  • குஜராத் – சௌராஷ்டிரா மற்றும் கட்ச் பகுதிகளுக்கென்று தனியான மேம்பாட்டு வாரியம் அமைத்தல்.
  • நாகலாந்து– உள்நாட்டுக் கலகங்கள் தொடரும்வரை சட்டம் மற்றும் ஒழுங்கைப் பராமரிப்பது தொடர்பானவை.
  • அஸ்ஸாம் – பழங்குடியினர் பகுதிகளை நிர்வகித்தல்.
  • மணிப்பூர்– மலைப்பகுதிகளை நிர்வகித்தல்.
  • சிக்கிம் – பலதரப்பட்ட மக்களின் அமைதியையும் மற்றும் சமூக, பொருளாதார மேம்பாடுகளையும் உறுதிப்படுத்துதல்.
  • அருணாச்சல பிரதேசம் – சட்டம் மற்றும் ஒழுங்கைப்பராமரித்தல்.

மாநில முதலமைச்சர் மற்றும் மாநில அமைச்சரவை

  • நமது அரசியலமைப்பு சட்டத்தில் மாநில முதல் அமைச்சரை தேர்ந்தெடுக்கும் முறை பற்றி குறிப்பிடப்படவில்லை, இருப்பினும் ஷரத்து 164-ல் மாநில ஆளுநர் அவர்களால் முதல் அமைச்சர் நியமிக்கப்படுகிறார் என்று கூறப்பட்டுள்ளது.
  • இந்திய அரசியலமைப்புக்கு இணங்க, மாநில செயல்துறையில் பெயரளவுத் தலைவராக ஆளுநரும், உண்மையான தலைவராக முதலமைச்சரும் உள்ளனர்.
  • முதலமைச்சர் அரசாங்கத்தின் தலைவராவார். ஆளுநர் அரசின் தலைவராவார்.
  • முதலமைச்சர் மாநில நிர்வாகத்தின் தலைவராகவும் அமைச்சரவையின் தலைவராகவும் செயல்படுகிறார்.

அதிகாரம் மற்றும் பணிகள்

  1. அமைச்சரவையுடன் உள்ள தொடர்பு
  • முதலமைச்சரால் அறிவிக்கப்படும் நபர்களை ஆளுநர் அமைச்சர்களாக நியமிக்கிறார்.
  • முதலமைச்சரே அனைத்து அமைச்சர்களுக்கும் தனித்தனி இலாக்காக்களை ஒதுக்குகிறார்.
  1. ஆளுநரிடம் உள்ள தொடர்பு
  • முதலமைச்சர், ஆளுநருக்கும் இதர அமைச்சர்களுக்கும் இடையே முக்கிய பாலமாக செயல்படுகிறார்.
  • முக்கிய அரசு அதிகாரிகளை நியமிக்கும் போது முதலமைச்சரின் ஆலோசனைப்படி ஆளுநர் அவர்களை நியமிக்கிறார். (எ.கா.)    1. மாநில அரசின் வழக்குரைஞர்,          2. தமிழ்நாடு அரசு பணியாளர்கள்,
  • மாநில தேர்தல் ஆணையர்.
  1. மாநில சட்டமன்றத்துடன் உள்ள தொடர்பு
  • மாநில சட்டமன்ற கூட்டத்தொடரை நடத்துவதற்கும், ஒத்திவைப்பதற்கும் ஆளுநருக்கு ஆலோசனை வழங்குகிறார்.
  • எந்த நேரத்திலும் அமைச்சரவையை கலைக்குமாறு ஆளுநருக்கு சிபாரிசு செய்யலாம்.
  • அரசின் கொள்கைகளை சட்டமன்றத்தில் அறிவிக்கலாம்.
  1. இதர பணிகள் மற்றும் அதிகாரம்
  • மாநில திட்ட கமிஷனின் தலைவர்.
  • மாநிலங்களுக்கு இடையேயான கவுன்சில், தேசிய வளர்ச்சி கவுன்சில் போன்றவற்றில் உறுப்பினராக உள்ளார்.
  • மாநில அரசின் தலைமை கருத்து (செய்தி) அறிவிப்பாளராக உள்ளார்.
  • மாநில அரசாங்கத்தின் தலைவராக பல்வேறு பிரிவு மக்களிடமிருந்து அவர்களின் கருத்துகளையும் குறைகளையும் கேட்டறிபவராக உள்ளார்.

மாநில அமைச்சரவை

  • அரசியலமைப்பின்படி பாராளுமன்ற அரசாங்க முறையில் மத்திய அரசினை போல் மாநில அரசின் அமைச்சரவை முதமைச்சரை தலைவராக கொண்டு திகழ்கிறது.
  • அரசியலமைப்பின் ஷரத்து 163 மற்றும் 164 ஆகியன அமைச்சரவை குழு பற்றியும் அதன் நியமனம், பதவிக்காலம், பொறுப்புகள், தகுதிகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து கூறுகிறது.

அரசியலமைப்பு ஏற்பாடுகள்

சரத்து – 163

  • முதலமைச்சரை தலைவராக கொண்ட அமைச்சரவைக் குழுவின் ஆலோசனை மற்றும் உதவியின் பேரிலேயே ஆளுநர் பணியாற்ற வேண்டும்(ஆளுநரின் தன் விருப்பு அதிகாரம் தவிர)
  • ஆளுநருக்கு அமைச்சரவையால் வழங்கப்படும் ஆலோசனை குறித்து எந்த நீதிமன்றத்தில் கேள்வி எழுப்ப முடியாது.

சரத்து – 164

  • மாநில முதலமைச்சர் ஆளுநரால் நியமிக்கப்படுகிறார். மேலும் முதலமைச்சர் பரிந்துரைக்கும் நபரையே ஆளுநர் அமைச்சர்களாக நியமனம் செய்கிறார்.
  • அமைச்சரவை குழுவில் முதலமைச்சரையும் சேர்த்து அவையின் மொத்த உறுப்பினர்களில் 15சதவீதத்திதற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
  • ஆனால் முதலமைச்சர் உட்பட இதர அமைச்சர்களின் எண்ணிக்கை 12-க்கு குறையாமலும் இருக்க வேண்டும். இந்த ஏற்பாடு 2003-ஆம் ஆண்டு 91-வதுஅரசியலமைப்பு திருத்தம் வாயிலாக மேற்கொள்ளப்பட்டது.
  • ஆளுநர் விரும்பும் வரையில் அமைச்சர்கள் பதவியில் நீடிக்கலாம்.
  • அமைச்சரவைக் குழுவானது மாநில சட்டமன்றத்திற்குக் கூட்டுப் பொறுப்பு வாய்ந்ததாகும்.
  • சட்டமன்றத்தின் உறுப்பினர் அல்லாத நபர் அமைச்சராக பதவி ஏற்றால் 6-மாதகாலத்திற்குள் உறுப்பினராக வேண்டும்.
  • மைய அரசைப்போலவே மாநிலங்களிலும் அமைச்சரவை மூன்று வகையான அமைச்சர்களைக் கொண்டுள்ளது.

மேலும் கூடுதல் குறிப்புகளை அறிய கீழ் உள்ள இணைப்பில் PDF -பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

PDF Download 

Download TNPSC அரசியலமைப்பு பாடக்குறிப்புகள்

Download TNPSC பொது தமிழ் பாடக்குறிப்புகள்

TNPSC Current Affairs in Tamil 2018

WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்

Facebook  Examsdaily Tamil – FB ல் சேர – கிளிக் செய்யவும

Telegram Channel கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!