10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு இந்திய அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு – மார்ச் 10 கடைசி நாள்!

0
10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு இந்திய அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு - மார்ச் 10 கடைசி நாள்!
10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு இந்திய அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு - மார்ச் 10 கடைசி நாள்!
10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு இந்திய அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு – மார்ச் 10 கடைசி நாள்!

இந்திய அஞ்சல் துறையில் ஸ்டாப் கார் டிரைவர் பணியிடத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பணிக்கு தேவையான கல்வித்தகுதி, வயது வரம்பு உள்ளிட்ட தகவல்களை பற்றி விரிவாக பார்க்கலாம்.

வேலைவாய்ப்பு

இந்தியா முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பல்வேறு தொழில்களில் பாதிப்பு ஏற்பட்டது. அதனால் ஏராளமான இளைஞர்கள் தங்கள் வேலைவாய்ப்பை இழந்தனர். தற்போது நாடு முழுவதும் தொற்று பரவல் குறைந்த நிலையில் பல்வேறு வேலைவாய்ப்பை குறித்த அறிவிப்புகள் வெளியாகி வருகிறது. இதனை தொடர்ந்து அஞ்சல் மோட்டார் சேவைத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ஸ்டாப் கார் டிரைவர் பணியிடத்தில் காலியாக இருக்கும் பணியிடங்களை நிரப்ப உள்ளதாக இந்திய அஞ்சல் துறை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தின் 10 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை மையம் அறிக்கை!

மேலும் இந்த அறிவிப்பில், இப்பணிக்கு விண்ணப்பிக்க 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றதுடன் ஓட்டுநர் உரிமத்தையும் பெற்றவராக இருக்க வேண்டும். அத்துடன் இப்பணிக்கு கனரக மற்றும் இலகுரக வாகனங்களுக்கான ஓட்டுநர் உரிமத்தையும் பெற்றிருக்க வேண்டும். இதையடுத்து விண்ணப்பத்தார்கள் 3 வருட ஓட்டுநர் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். இதில் விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் 18 முதல் 56 வயது வரை உள்ளவராக இருக்க வேண்டும். இப்பணியில் நியமிக்கப்படுபவர்களுக்கு மாத சம்பளமாக ரூ. 19,900 முதல் ரூ.63,200 வரை வழங்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நாளை (பிப்.26) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

இதனை தொடர்ந்து, இப்பணிக்கு விண்ணப்பிக்க பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் பிறந்த தேதிக்கான சான்று, கல்வித் தகுதி, ஓட்டுநர் அனுபவச் சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களின் நகல்களை இணைத்து சமர்ப்பிக்க வேண்டும். இதனை The Manager, Mail Motor Service, Goods Shed Roads, Coimbatore, 641001 என்ற முகவரிக்கு அஞ்சல் மூலமாக வருகிற மார்ச் 10ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். மேலும் இது தொடர்பான தகவல்களை  பெற https://www.indiapost.gov.in/VAS/Pages/Recruitment/IP_13012022_MMS_Coimbatore_Eng.pdf என்ற  லிங்கை கிளிக் செய்ய வேண்டும்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here