SSC Stenographer Grade ‘C’ & ‘D’ தேர்வு முடிவுகள் 2022 – வெளியீடு!
மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது Stenographer Grade ‘C’ & ‘D’ தேர்வு முடிவுகளை தற்போது வெளியிட்டுள்ளது. தேர்வர்கள் அதை எங்கள் வலைப்பதிவின் மூலம் அறிந்து கொள்ளலாம்.
SSC Stenographer Grade ‘C’ & ‘D’ தேர்வு முடிவுகள்:
2022 ஆம் ஆண்டுக்கான ஸ்டெனோகிராபர் கிரேடு ‘சி’ & ‘டி’ தேர்வுக்கான கணினி அடிப்படையிலான தேர்வை 17.11.2022 மற்றும் 18.11.2022 ஆகிய தேதிகளில் நாடு முழுவதும் உள்ள பல்வேறு மையங்களில் பணியாளர் தேர்வாணையம் (SSC) நடத்தியது. இதற்கான தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளது. மேலும் இத்தேர்வின் இறுதி விடைக்குறிப்பு 27.01.2023 முதல் 10.02.2023 வரை SSC இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு இருக்கும். தேர்வர்கள் பெற்ற மதிப்பெண்கள் 25.01.2023 அன்று பதிவேற்றம் செய்யப்படும்.
மேலும் தங்கள் மதிப்பெண்களை தேர்வர்கள் 08.02.2023 அன்று வரை டவுன்லோட் செய்து கொள்ளலாம். இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் அடுத்த கட்டமாக நடைபெற உள்ள Skill Test-யில் பங்கேற்க வேண்டும். Skill Test ஆனது 15.02.2023 மற்றும் 16.02.2023 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இந்த திறன் தேர்வு பற்றிய விரிவான அட்டவணை உரிய நேரத்தில் சம்பந்தப்பட்ட மண்டல அலுவலகங்களின் இணையதளங்களில் கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.