SSC MTS தேர்வுக்கான அறிவிப்பு வெளியீடு – மார்ச் 21 ஆம் தேதி கடைசி நாள்!!

0
SSC MTC தேர்வுக்கான அறிவிப்பு வெளியீடு - மார்ச் 21 ஆம் தேதி கடைசி நாள்!!
SSC MTC தேர்வுக்கான அறிவிப்பு வெளியீடு - மார்ச் 21 ஆம் தேதி கடைசி நாள்!!
SSC MTS தேர்வுக்கான அறிவிப்பு வெளியீடு – மார்ச் 21 ஆம் தேதி கடைசி நாள்!!

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (SSC) சார்பில் MTS தேர்வுக்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இந்த தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்கள் பிப்ரவரி மாதம் 5 முதல் மார்ச் மாதம் 21 ஆம் தேதி வரை ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம்.

SSC – MTS தேர்வுகள்:

மத்திய அரசு பணிகளில் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்காக மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் MTC தேர்வு நடத்தப்படுகின்றது. 2021ம் ஆண்டுக்கான MTC தேர்வுக்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களும் அரசு வேலை பெறலாம் என்ற நம்பிக்கையில் இந்த தேர்வுகளை மாணவர்கள் ஆர்வத்துடன் எழுதுகின்றனர்.

TN Job “FB  Group” Join Now

இந்த தேர்வுக்கான விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலமாக பிப்ரவரி மாதம் 5 ஆம் தேதி முதல் மார்ச் மாதம் 21 ஆம் தேதி வரை நடத்தப்படுகின்றன. இந்த தேர்வுகள் எழுத விண்ணப்பதாரர்கள் 18 வயது முதல் 25 வயது வரை இருக்க வேண்டும். மேலும் SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகள் வரை சலுகை வழங்கப்படும். அதேபோல OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகள் வரை சலுகை வழங்கப்படும். PwD பிரிவினருக்கு 10 ஆண்டுகள் வரை சலுகை வழங்கப்படும்.

தமிழகத்தில் 356 முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் பணிநியமனம் – உச்சநீதிமன்றம் கண்டனம்!!

அதே போல மாற்றுதிறனாளிகளில் OBC பிரிவினருக்கு 13 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகள் SC/ST பிரிவினருக்கு 15 ஆண்டுகள் சலுகை வழங்கப்படும். மேலும் இந்த தேர்வுகளுக்கு கல்வி தகுதியாக அங்கீகரிக்கப்பட்ட வாரியத்திலிருந்து மெட்ரிகுலேஷன் தேர்வு அல்லது அதற்கு சமமான தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பொது பிரிவினர் மற்றும் OBC விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்ப கட்டணம் ரூ.100 வசூலிக்கப்படும். மற்றவர்களுக்கு விண்ணப்ப கட்டணம் இல்லை.

தமிழகத்தில் வாக்காளர்கள் அனைவருக்கும் கையுறை – தலைமை தேர்தல் அதிகாரி அறிவிப்பு!!

இந்த தேர்வு எழுத விருப்பமுள்ளவர்கள் www.ssc.nic.in என்ற இணையதளம் மூலமாக 05.02.2021 முதல் 21.03.2021 வரை விண்ணப்பிக்கலாம். இந்த தேர்வுகள் இரண்டு கட்டங்களாக நடத்தப்படும் Tier 1 – கணினி சார்ந்த தேர்வு (CBT) மற்றும் Tier 2 – Descriptive Type போன்ற முறைகளில் நடத்தப்படும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!