SSC துறையில் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு – 1,42,000 வரை ஊதியம்! விண்ணப்பங்கள் வரவேற்பு!

0
SSC துறையில் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு - 1,42,000 வரை ஊதியம்! விண்ணப்பங்கள் வரவேற்பு!
SSC துறையில் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு - 1,42,000 வரை ஊதியம்! விண்ணப்பங்கள் வரவேற்பு!
SSC துறையில் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு – 1,42,000 வரை ஊதியம்! விண்ணப்பங்கள் வரவேற்பு!

ஸ்டாஃப் செலக்ஷன் கமிஷன் துறையில் காலியாக உள்ள பணியிடம் குறித்தான விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. மேலும், இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஆகஸ்ட் 4 தான் கடைசி நாள் என்பதால் அதற்குள் விண்ணப்பிக்கும்படி அறிவிக்கப்பட்டுள்ளது.

காலிப்பணியிடம்:

ஸ்டாஃப் செலக்ஷன் கமிஷன் (SSC) தற்போது காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது, ஜூனியர் ஹிந்தி மொழிபெயர்ப்பாளர் (JHT), ஜூனியர் மொழிபெயர்ப்பாளர் மற்றும் மூத்த ஹிந்தி மொழிபெயர்ப்பாளர் பதவிக்கு ஆட்சேர்ப்புக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதாவது, இந்த SSC JHT தேர்வானது CPWD, MES, BRO போன்ற அரசு நிறுவனங்களில் குரூப் B அரசிதழ் பதிவு அல்லாத பணியிடங்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான தேசிய அளவிலான தேர்வாகும்.

Exams Daily Mobile App Download

மேலும், 10, 12 மற்றும் பட்டபடிப்புகளில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு SSC Exam Qualification முறையில் ஆட்சேர்ப்பு நடத்தப்படுகிறது. எப்போது SSC துறையில் காலிப் பணியிடங்கள் இருந்தாலும் உடனடியாக அதற்கான அறிவிப்பு ஆன்லைன் வழியாக வெளியிடப்படுகிறது. இந்நிலையில், SSC JHT கணினி அடிப்படையிலான தகுதித் தேர்வு வரும் அக்டோபர் மாதத்தில் நடத்த SSC கமிஷன் முடிவெடுத்துள்ளது. அதாவது, இந்த தேர்விற்கு விண்ணப்பிக்கும் தேர்வாளருக்கு வயது வரம்பு ஜனவரி 1, 2022 தேதியின்படி 18 முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும் எனவும், ஒதுக்கப்பட்ட பிரிவை சார்ந்த தேர்வாளர்களுக்கு அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மின் பயனர்கள் கவனத்திற்கு – விரைவில் ஸ்மார்ட் மீட்டர் திட்டம் அமல்!

மேலும், JHT,  ஜூனியர் மொழிபெயர்ப்பாளர் பணிக்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும் மற்றும் இந்தியில் இருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்ப்பில் அங்கீகரிக்கப்பட்ட டிப்ளமோ அல்லது சான்றிதழ் படிப்பு மற்றும் இரண்டு வருட அனுபவம் இருக்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல மூத்த ஹிந்தி மொழிபெயர்ப்பாளர் பணிக்கு மொழிபெயர்த்ததில் மூன்று வருட முன்அனுபவம் இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தகுதியும் விருப்பமும் வாய்ந்த விண்ணப்பதாரர்கள் ssc.nic.in என்கிற இணையதள முகவரி பக்கத்திற்கு சென்று வரும் ஆகஸ்ட் 4 ஆம் தேதி வரை விண்ணப்பித்துக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!