SSC Delhi Police Constable 2023 தேர்வுக்கான நுழைவுச்சீட்டு வெளியீடு – முழு விவரங்கள் இதோ!
அரசுப் பணியாளர் தேர்வாணையம் (SSC) ஆனது 2023ம் ஆண்டு நடைபெறவுள்ள Delhi Police Constable தேர்வுக்கான நுழைவுச் சீட்டை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த நுழைவுச்சீட்டை தேர்வர்கள் இப்பதிவின் மூலம் எளிமையாக பெற்றுக்கொள்ளலாம். இது குறித்த முழு விவரங்கள் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே வழங்கப்பட்டுள்ளது.
SSC Delhi PC 2023 நுழைவுச்சீட்டு:
டெல்லி காவல் துறையில் Police Constable பணிக்கு என ஒதுக்கப்பட்டுள்ள 7547 காலியிடங்களுக்கான அறிவிப்பானது 01.11.2023 அன்று SSC-யின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டு விண்ணப்பங்களும் பெறப்பட்டது. இப்பணிக்கான SSC Delhi PC 2023 எழுத்து தேர்வானது வருகின்ற நவம்பர் மாதம் 14ம் தேதி தொடங்கப்பட்டு டிசம்பர் மாதம் 03ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இத்தேர்வுக்கான நுழைவுச் சீட்டானது 04.11.2023 அன்று முதல் பகுதி வாரியான அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டு வருகிறது.
SSC Delhi PC 2023 தேர்வுக்கு விண்ணப்பித்த நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக ஆன்லைனில் பெற்றுக்கொள்ளலாம். இந்த நுழைவு சீட்டை பெற விரும்பும் விண்ணப்பதாரர்கள் நுழைவுப் பக்கத்தில் தங்களது பதிவெண், பிறந்த தேதியை போன்றவற்றை சரியாக உள்ளீடு செய்ய வேண்டும். மேலும் இத்தேர்வானது கணினி வழி தேர்வு முறையில் ஹிந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.