SSC Constable வேலைவாய்ப்பு 2022 – 2268 காலிப்பணியிடங்கள் || சம்பளம்: ரூ.81100/-

0
SSC Constable வேலைவாய்ப்பு 2022 1
SSC Constable வேலைவாய்ப்பு 2022 1

SSC Constable வேலைவாய்ப்பு 2022 – 2268 காலிப்பணியிடங்கள் || சம்பளம்: ரூ.81100/-

Constable (Driver) male, Head Constable {Assistant Wireless Operator (AWO)/Tele-Printer Operator (TPO)} ஆகிய பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பை பணியாளர் தேர்வு ஆணையம் ஆனது கடந்த வாரம் வெளியிட்டது. இந்த மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்க ஆன்லைன் செயல் முறை தற்போது தொடங்கி விட்டது. எனவே தகுதியானவர்கள் ssc.nic.in என்ற ஆன்லைன் இணைய தளம் மூலம் ஜூலை 29 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022

கட்டணம் செலுத்துவதற்கான காலக்கெடு ஜூலை 30-ஆம் தேதி இரவு 11 மணி வரை. விண்ணப்பத் திருத்தச் சாளரம் ஆகஸ்ட் 2 முதல் கிடைக்கும். அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, இந்த ஆண்டு அக்டோபர் மாதம் மேற்கண்ட பணியிடங்களுக்கான தேர்வு நடைபெறும். மேலும் கான்ஸ்டபிள் (ஓட்டுனர்) பதவிக்கு ஆண் விண்ணப்பதார்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

SSC காலிப்பணியிடங்கள்:
  • Constable (Driver) ஆண்கள் – 1411
  • Head Constable (AWO/TPO) ஆண்கள் – 573
  • Head Constable (AWO/TPO) பெண்கள் – 284
  • என மொத்தம் 2268 பணியிடங்கள் காலியாக உள்ளன.
SSC பணிக்கான தகுதி விவரங்கள்:

கான்ஸ்டபிள் (ஓட்டுனர்) ஆட்சேர்ப்புக்கு: ஜூலை 1, 2022 அன்று விண்ணப்பதார்கள் 21 முதல் 30 வயதுக்கு இடைப்பட்டவராக இருக்க வேண்டும். விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் அங்கீகரிக்கப்பட்ட வாரியத்திலிருந்து 10+2 அல்லது அதற்கு சமமான தகுதி பெற்றிருக்க வேண்டும்.

இவை தவிர, கனரக வாகனங்களை ஓட்ட தெரிந்திருக்க வேண்டும் மற்றும் கனரக மோட்டார் வாகனங்களுக்கான செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும் (ஆன்லைன் விண்ணப்பம் பெறப்படும் தேதியின்படி)

மற்ற கான்ஸ்டபிள் பணியிடங்கள்:

விண்ணப்பதாரர்கள் ஜூலை 1, 2022 தேதியின்படி 18 முதல் 27 வயதுக்குள் இருக்க வேண்டும். விண்ணப்பதாரர் 10+2 அல்லது அதற்கு இணையான அறிவியல் மற்றும் கணித பாடங்களில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது மெக்கானிக் வர்த்தகத்தில் தேசிய வர்த்தகச் சான்றிதழில் (NTC) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பள விவரங்கள்:

Constable (Driver) பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் Pay Level-3 (Rs. 21700- 69100) என்ற ஊதிய அளவின் படி மாத ஊதியம் பெறுவார்கள். Head Constable (AWO/TPO) பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் Pay Level-4 (Rs. 25500-81100) என்ற ஊதிய அளவின் படி மாத ஊதியம் பெறுவார்கள்.

SSC பணிக்கான விண்ணப்ப கட்டணம்:

விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் ரூ.100/- விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும். SC / ST பிரிவினர் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்களுக்கு விண்ணப்பக் கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

SSC கான்ஸ்டபிள் ஆட்சேர்ப்புக்கு விண்ணப்பிக்கும் வழிமுறைகள்:
  1. அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிடவும் – ssc.nic.in.
  2. பதிவு போர்ட்டலில் கிளிக் செய்து விவரங்களை உள்ளிடவும்.
  3. புகைப்படத்தைப் பதிவேற்றி கட்டணம் செலுத்தவும்.
  4.  சமர்ப்பி என்பதைக் கிளிக் செய்து எதிர்கால குறிப்புக்காக பிரிண்ட் அவுட் எடுத்து கொள்ளவும்.

Download SSC Constable Notification Pdf

Download SSC Head Constable Notification Pdf

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!