காவல் துறையில் 2000+ காலிப்பணியிடங்கள் – ரூ.81,100 வரை சம்பளம் || விண்ணப்பிக்க விரையுங்கள் !

0
காவல் துறையில் 2000+ காலிப்பணியிடங்கள் - ரூ.81,100 வரை சம்பளம் || விண்ணப்பிக்க விரையுங்கள் !
காவல் துறையில் 2000+ காலிப்பணியிடங்கள் - ரூ.81,100 வரை சம்பளம் || விண்ணப்பிக்க விரையுங்கள் !
காவல் துறையில் 2000+ காலிப்பணியிடங்கள் – ரூ.81,100 வரை சம்பளம் || விண்ணப்பிக்க விரையுங்கள் !

காவல் துறையில் வேலை தேடிக் கொண்டு இருப்பவர்களுக்கு மாபெரும் வேலைவாய்ப்பு அறிவிப்பை பணியாளர் தேர்வு ஆணையம் (SSC) ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. Constable (Driver), Head Constable (AWO/TPO) ஆகிய பணிகளுக்கு என மொத்தமாக 2,268 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக இந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு தகுதியும் திறமையும் உள்ள நபர்களின் விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்பட்டு வருகிறது. எனவே தகுதி உள்ள நபர்கள் இறுதி நாளுக்குள் (29.07.2022) விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை போன்றவை கீழ்வருமாறு தொகுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Staff Selection Commission (SSC)
பணியின் பெயர் Constable (Driver), Head Constable (AWO/TPO)
பணியிடங்கள் 2268
விண்ணப்பிக்க கடைசி தேதி 29.07.2022
விண்ணப்பிக்கும் முறை Online

 

காவல்துறை பணியிடங்கள்:

காவல் துறையில் காலியாக உள்ள Constable (Driver), Head Constable (AWO/TPO) ஆகிய பணிகளுக்கு என ஒதுக்கப்பட்டுள்ள பணியிடங்களுக்கு தகுதியான நபர்களை நியமிக்க அதற்கான தகுதித் தேர்வை நடத்த போவதாக பணியாளர் தேர்வு ஆணையம் (SSC) ஆனது தெரிவித்துள்ளது. இந்த தேர்வு மூலம் பின்வரும் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.

 • Constable (Driver) ஆண்கள் – 1411
 • Head Constable (AWO/TPO) ஆண்கள் – 573
 • Head Constable (AWO/TPO) பெண்கள் – 284
காவல் துறை கல்வி விவரம்:
 • இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற பள்ளி / கல்வி நிலையங்களில் பின்வரும் கல்வித் தகுதியை பெற்றவராக இருக்க வேண்டும்.
 • Constable (Driver) பணிக்கு 10 ஆம் வகுப்பு அல்லது 12 ஆம் வகுப்பு முடித்தவராக இருக்க வேண்டும்.
 • Head Constable (AWO/TPO) பணிக்கு 12 ஆம் வகுப்பு முடித்தவராக அல்லது Mechanic-cum Operator Electronic Communication System பாடப்பிரிவில் NTC சான்றிதழ் பெற்றவராக இருக்க வேண்டும்.
  Exams Daily Mobile App Download
காவல்துறை தகுதிகள்:
 • Constable (Driver):
  1. Constable (Driver) பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் கட்டாயம் கனரக வாகனங்கள் ஓட்டுவதற்கான ஓட்டுநர் உரிமம் (Driving License) வைத்திருக்க வேண்டும்.
  2. விண்ணப்பதாரர்கள் வாகனங்கள் ஓட்டுவதில் அனுபவம் உள்ளவராகவும் இருக்க வேண்டும்.
 • Head Constable (AWO/TPO):
  1. Head Constable (AWO/TPO) பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 15 நிமிடத்தில் 1000 வார்த்தைகளை word processing செய்யும் திறன் பெற்றவராக இருக்க வேண்டும்.
  2. விண்ணப்பதாரர்கள் Closing of PC, Printing, MS office usage, Saving & Modification in typed text, Paragraph setting & Numbering போன்றவற்றில் அனுபவம் உள்ளவராகவும் இருக்க வேண்டும்.
காவல்துறை வயது விவரம்:
 • Constable (Driver) பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 01.07.2022 அன்றைய நாளின் படி, குறைந்தது 21 வயது முதல் அதிகபட்சம் 30 வயதிற்குள் உள்ளவராக இருப்பது அவசியமானது ஆகும்.
 • Head Constable (AWO/TPO) பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 01.07.2022 அன்றைய நாளின் படி, குறைந்து 18 வயது முதல் அதிகபட்சம் 27 வயதுக்குள் உள்ளவராக இருப்பது அவசியமானது ஆகும்.
 • SC/ ST – 5 ஆண்டுகள், OBC / Ex-Servicemen – 03 ஆண்டுகள், Sports Person – 05 முதல் 10 ஆண்டுகள் வரை வயது தளர்வுகளும் வழங்கப்பட்டுள்ளது. கூடுதல் தகவலை அறிவிப்பில் காணலாம்.
காவல் துறை ஊதிய விவரம்:
 • Constable (Driver) பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் Pay Level-3 (Rs. 21700- 69100) என்ற ஊதிய அளவின் படி மாத ஊதியம் பெறுவார்கள்.
 • Head Constable (AWO/TPO) பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் Pay Level-4 (Rs. 25500-81100)) என்ற ஊதிய அளவின் படி மாத ஊதியம் பெறுவார்கள்.
காவல் துறை தேர்வு செய்யும் முறை:

விண்ணப்பதாரர்கள் பின்வரும் தேர்வு முறையின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

 • Computer Based Examination
 • Physical Endurance and Measurement Test (PE&MT)
 • Trade Test
 • Medical Examination (Constable)
 • Typing Test & Basic Computer Function Test (Head Constable)
காவல் துறை விண்ணப்பக் கட்டணம்:
 • இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் ரூ.100/- விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.

அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now

 • SC / ST பிரிவினர் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்களுக்கு விண்ணப்பக் கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
காவல்துறை விண்ணப்பிக்கும் வழிமுறை:

இந்த காவல்துறை பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் விருப்பமுள்ள நபர்கள் இப்பதிவின் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ இணையதள இணைப்பின் மூலம் விண்ணப்பத்தை எளிமையாக Online-ல் பதிவு செய்து கொள்ளலாம். இறுதி நாளுக்குள் (29.07.2022) பதிவு செய்யப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.

காவல்துறை முக்கிய நாட்கள்:
 • Online Application தொடக்க நாள் – 08.07.2022
 • Online Application இறுதி நாள் – 29.07.2022
 • Offline Challan சமர்ப்பிக்க இறுதி நாள் – 29.07.2022
 • Online Fees Payment இறுதி நாள் – 30.07.2022
 • Window for Application Form Correction இறுதி நாள் – 02.08.2022
 • தேர்வு நடைபெறும் நாள் – அக்டோபர் 2022

SSC Constable Notification Link

SSC Head Constable Notification Link

SSC Online Application Link

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here