12வது முடித்தவர்களுக்கு 5000+ அரசு காலிப்பணியிடங்கள் – முக்கிய அறிவிப்பு..!

0
12வது முடித்தவர்களுக்கு 5000+ அரசு காலிப்பணியிடங்கள் - முக்கிய அறிவிப்பு..!
12வது முடித்தவர்களுக்கு 5000+ அரசு காலிப்பணியிடங்கள் - முக்கிய அறிவிப்பு..!
12வது முடித்தவர்களுக்கு 5000+ அரசு காலிப்பணியிடங்கள் – முக்கிய அறிவிப்பு..!

மத்திய பணியாளர்கள் தேர்வு ஆணையம் ஆனது Combined Higher Secondary Level Exam எனப்படும் ஒருங்கிணைந்த உயர் நிலைத் தேர்வை நடத்த திட்டமிட்டுள்ளது. இந்த தேர்வின் மூலம் இந்தியா முழுவதும் 5000 + க்கு மேற்பட்ட பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் கல்வி தகுதி, வயது வரம்பு, தேர்வு செயல்முறை என அனைத்து விவரங்களையும் அறிந்து உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் 07-032022ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:

Combined Higher Secondary Level தேர்வின் மூலம் Lower Division Clerk (LDC)/ Junior Secretariat Assistant, Postal Assistant (PA)/ Sorting Assistant (SA) மற்றும் Data Entry Operator (DEO) ஆகிய பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
இதற்கு இந்தியா முழுவதும் 5000 + க்கு மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன.

01-01-2022 தேதியின் படி, விண்ணப்பதார்கள் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 27 க்குள் இருக்க வேண்டும். அதாவது, 02-01-1995 க்கு முன் மற்றும் 01-01-2004 க்குப் பிறகு பிறந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

LDC/ JSA, PA/ SA, DEO (C&AG இல் உள்ள DEOக்கள் தவிர): விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட வாரியம் அல்லது பல்கலைக்கழகத்தில் 12 ஆம் வகுப்பு அல்லது அதற்கு சமமான தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Data Entry Operator (DEO Grade ‘A’): அங்கீகரிக்கப்பட்ட வாரியத்தில் கணிதத்துடன் அறிவியல் பாடத்தில் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் கணினி அடிப்படையிலான தேர்வு மற்றும் Descriptive Paper மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.100/- விண்ணப்ப கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ஊதியமாக மாதம் ரூ.81,100/- வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SSC தேர்வு விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் 01-02-2022 முதல் 07-03-2022 க்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டு இருந்தது. இருப்பினும் விண்ணப்பிக்கும் கால அவகாசம் நீட்டிக்கப்படுமா என எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில் SSC அதிகாரபூர்வமாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி நீட்டிக்கப்படாதது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது 07.03.2022 ம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாள் ஆகும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!