SSC CHSL தேர்வர்கள் கவனத்திற்கு – தேர்வு முடிவுகள் வெளியீடு!

0
SSC CHSL தேர்வர்கள் கவனத்திற்கு - தேர்வு முடிவுகள் வெளியீடு!
SSC CHSL தேர்வர்கள் கவனத்திற்கு - தேர்வு முடிவுகள் வெளியீடு!
SSC CHSL தேர்வர்கள் கவனத்திற்கு – தேர்வு முடிவுகள் வெளியீடு!

இந்தியாவில் மத்திய அரசு பணியிடங்களுக்கு பணியாளர் தேர்வாணையம் நடத்திய SSC CHSL தேர்வுக்கான இறுதி கட்ட முடிவு இன்று வெளியாகியுள்ளது. தேர்வானவர்களின் பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

SSC CHSL :

இந்தியாவில் மத்திய அரசு துறையில் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் செயலக உதவியாளர், கீழ்ப்பிரிவு எழுத்தர், தபால் உதவியாளர் உள்ளிட்ட பதவிகளுக்கான காலிப்பணியிடங்களை நிரப்ப SSC தேர்வாணையம் CHSL தேர்வுகளை நடத்தி வருகிறது. இப்பணிகளுக்கு 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு 27க்குள் இருக்க வேண்டும். இதில் பட்டியல் இனத்தவர்களுக்கு தளர்வுகள் உண்டு.

Exams Daily Mobile App Download

ஆண்டுதோறும் இந்த தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. தற்போது 2020ம் ஆண்டு அறிவிப்பு வெளியிடப்பட்ட SSC CHSL தேர்வின் இறுதி கட்ட முடிவுகள் வெளியாகியுள்ளது. இந்த தேர்வானது பல கட்டங்களாக நடத்தப்படுகிறது. அதன்படி 2020ம் ஆண்டு வெளியான CHSL தேர்வுக்கான Tier -1 கடந்த 2021 ஆகஸ்ட் மாதம் நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக 2022 ஜனவரி 9ம் தேதி Tier – 2 நடத்தப்பட்டது.

இந்தியாவில் ஆன்லைன் கேம்களுக்கான விளம்பரங்களுக்கு தடை – கூகுளுக்கு மத்திய அரசின் எச்சரிக்கை!

Follow our Instagram for more Latest Updates

இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான Tier – 3 கடந்த ஜூலையில் நடத்தப்பட்டது. இந்த மூன்று கட்ட தேர்வுகளிலும் தேர்ச்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியல் அக்.18ம் தேதி இணையதளத்தில் வெளியிடப்பட்டது. அதன் தொடர்ச்சியாக தற்போது SSC CHSL தேர்வின் இறுதி கட்ட முடிவுகள் மற்றும் பணிக்கு தகுதி பெற்றவர்களின் பெயர் பட்டியல் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியாகியுள்ளது.

Download Notification Link

Download Final Result

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!