SSC CHSL தேர்வு மாதிரி (Exam Pattern)

0

SSC CHSL தேர்வு மாதிரி (Exam Pattern)

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (SSC)  கீழ் பிரிவு எழுத்தர் (Lower Division Clerk), டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் (DEO), Assistant/Sorting மற்றும் Assistant & Court Clerk ஆகிய பணியிடங்களுக்கான ஒருங்கிணைந்த உயர்நிலைப்பள்ளி CHSL (10th, 12th) தேர்வை நடத்துகின்றது. கீழே உள்ள ஒருங்கிணைந்த உயர்நிலைப்பள்ளி CHSL (10 +2) க்கான மதிப்பெண் அட்டவணை தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு மிக பயனுள்ளதாக இருக்கும்.

1. கணினி சார்ந்த தேர்வு : Tier – I (Objective Type)

பகுதி பாடம் கேள்விகள் எண்ணிக்கைஅதிகபட்ச மதிப்பெண்
Iஆங்கிலம் 2550
IIபொது நுண்ணறிவு ( General Intelligence)2550
IIIQuantitative Aptitude (Basic Arithmetic Skill)2550
IVபொது விழிப்புணர்வு (General Awareness)2550

2. Tier – II டிஸ்க்ரிப்ட்டிவ் பேப்பர் (Descriptive Paper)

Tier II தேர்வானது டிஸ்க்ரிப்டிவ் பேப்பர் முறையில் 100 மதிப்பெண்கள் கொண்டதாக இருக்கும். மேலும், இது பேப்பர் மற்றும் பென் முறையில் ஒரு மணி நேரம் கால அவகாசம் கொண்ட தேர்வாக இருக்கும். குறைந்தபட்சம் 200 – 250 எழுத்துக்கள் கொண்ட கட்டுரை மற்றும் letter /application தோராயமாக 150-200 எழுத்துக்கள் கொண்டவையாக இருக்க வேண்டும். Tier II தேர்வில் தேர்ச்சி பெற குறைந்த பட்ச மதிப்பெண் 33% ஆகும்.

3. Tier – III (டைப்பிங் டெஸ்ட் / ஸ்கில் டெஸ்ட்)

டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டர் க்கான திறன் தேர்வு (Skill Test)

15 நிமிடத்தில் கொடுக்கப்பட்ட 8000 வார்த்தைகளை டைப் செய்ய வேண்டும். பத்தி (Passage) இல் கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளில் சரியானதாக எவ்வளவு வார்த்தைகள் டைப் செய்கின்றனரோ அதன் அடிப்படையிலேயே தேர்வு செய்யப்படுவார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!