SSC CGL 2022 – 20,000 காலிப்பணியிடங்கள் | விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு!

0
SSC CGL 2022 - 20,000 காலிப்பணியிடங்கள் | விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு!
SSC CGL 2022 - 20,000 காலிப்பணியிடங்கள் | விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு!
SSC CGL 2022 – 20,000 காலிப்பணியிடங்கள் | விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு!

Staff Selection Commission எனப்படும் பணியாளர் தேர்வு ஆணையம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இதில் காலியாக உள்ள CGL பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • Combined Graduate Level தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படும் உதவி கணக்கு அலுவலர், உதவி தணிக்கை அலுவலர், அசிஸ்டெண்ட் செக்ஷன் ஆபீசர், வருமான வரி ஆய்வாளர், உதவி ஆய்வாளர், இளநிலை புள்ளியியல் அலுவலர் போன்ற பல்வேறு பணிக்கென மொத்தம் 20,000/- காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 18 என்றும் அதிகபட்ச வயதானது 32 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
Exams Daily Mobile App Download
  • அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் ஏதேனும் ஒரு டிகிரி தேர்ச்சி பெற்ற அல்லது இறுதியாண்டு பட்டப்படிப்பில் உள்ளவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
  • இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் Computer Based Examination (Tier-I), Tier-II, Tier-III (Descriptive Paper), Tier-IV (Skill Test) மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழில் எழுத, படிக்க தெரிந்தால் போதும் ரூ.50400/- சம்பளத்தில் அரசு வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

  • SC, ST, மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினர்,பெண்கள் தவிர மற்றவர்களுக்கு ரூ.100/- விண்ணப்ப கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 8.10.2022ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!