SSC CGL 2021 இறுதி தேர்வு முடிவுகள் வெளியீடு – பதிவிறக்கம் செய்யும் வழிகள் இதோ!!

0
SSC CGL 2021 இறுதி தேர்வு முடிவுகள் வெளியீடு -
SSC CGL 2021 இறுதி தேர்வு முடிவுகள் வெளியீடு -
SSC CGL 2021 இறுதி தேர்வு முடிவுகள் வெளியீடு – பதிவிறக்கம் செய்யும் வழிகள் இதோ!!

பணியாளர் தேர்வாணையம் (SSC) ஒருங்கிணைந்த பட்டதாரி நிலை (CGL) தேர்வுக்கான இறுதி முடிவுகளை இன்று (மார்ச் 17) வெளியிட்டுள்ளது. இந்த முடிவுகளை தேர்வர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

தேர்வு முடிவுகள் வெளியீடு

மத்திய அரசுத்துறையில் காலியாக இருக்கும் பல்வேறு இடங்கள், பணியாளர் தேர்வாணையம் (SSC) நடத்தும் போட்டித் தேர்வுகள் மூலம் நிரப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில், மத்திய அரசின் உயர்மட்ட அமைச்சகங்களில் உள்ள பல்வேறு பதவிகளில் காலியாக இருக்கும் குரூப் பி மற்றும் சி அதிகாரிகளை நிரப்புவதற்கான ஒருங்கிணைந்த பட்டதாரி நிலை தேர்வு (CGL) 2021 கடந்த ஆண்டில் நடத்தப்பட்டிருந்தது. இதையடுத்து SSC ஆணையம் கடந்த ஆண்டு டிசம்பர் 22 ஆம் தேதியில் தேர்வு முடிவுகளை வெளியிட்டது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

தமிழகத்தில் நவீன மயமாகும் அரசு பேருந்துகள் – தானியங்கி கதவுகள் அமைப்பு! அமைச்சர் அறிவிப்பு!

இந்த முடிவுகளுக்கு பிறகு, தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் திறன் தேர்வு மற்றும் ஆவண சரிபார்ப்புக்காக அழைக்கப்பட்டனர். இந்த நிலையில், ஒருங்கிணைந்த பட்டதாரி நிலை (CGL) தேர்வின் இறுதி முடிவுகளை SSC ஆணையம் இன்று (மார்ச் 17) வெளியிட்டுள்ளது. இந்த முடிவுகளை விண்ணப்பதாரர்கள் https://ssc.nic.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் பெற்றுக்கொள்ளலாம்.

SSC CGL 2021 தேர்வு முடிவை பதிவிறக்கம் செய்ய:

  • முதலில் https://ssc.nic.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தை திறக்கவும்.
  • இப்போது, SSC CGL 2021 இறுதி முடிவு தொடர்பான இணைப்பை தேர்வு செய்யவும்.
  • கேட்கப்படும் விவரங்களை உள்ளிடவும்.
  • தேர்வு முடிவுகள் திரையில் தோன்றும்.
  • DOWNLOAD RESULT

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!