அரசு ஊழியர்களுக்கு 5 வருடங்கள் விடுமுறை? பொருளாதார நெருக்கடி எதிரொலி!

0
அரசு ஊழியர்களுக்கு 5 வருடங்கள் விடுமுறை? பொருளாதார நெருக்கடி எதிரொலி! அரசு ஊழியர்களுக்கு 5 வருடங்கள் விடுமுறை? பொருளாதார நெருக்கடி எதிரொலி!
அரசு ஊழியர்களுக்கு 5 வருடங்கள் விடுமுறை? பொருளாதார நெருக்கடி எதிரொலி!

உலகமே உற்று நோக்கும் விஷயமாக இலங்கையின் பொருளாதார நெருக்கடி உருவாகி உள்ளது. அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு, பொதுமக்களின் தன்னெழுச்சி போராட்டம் என இலங்கையில் பரபரப்பான சூழல் நிலவுகிறது. இந்நிலையில் அரசு ஊழியர்களுக்கு 5 வருடங்கள் விடுமுறை வழங்க முடியுமா? என்பதை கண்டறிவதற்கு குழு நியமிக்கப்பட்டு உள்ளது.

5 வருடங்கள் விடுமுறை:

இலங்கை, கடந்த 70 வருடங்களில் இல்லாத அளவுக்கு பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவுக்கு சரிந்துள்ளது. அந்நிய செலாவணி கையிருப்பு குறைந்துள்ளதால் பெட்ரோல், டீசல் மற்றும் மருந்துப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்ய முடியாமல் இலங்கை அரசு திணறி வருகிறது. இதனிடையே செலவுகளை கட்டுப்படுத்தவும் பொருளாதார நெருக்கடியை சமாளிக்கவும் அந்நாட்டு அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. மேலும் எரிபொருள் தட்டுப்பாட்டால் அரசு அலுவலகங்கள், பள்ளிகள், நாடாளுமன்றம் ஆகியவற்றுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

விஜய் டிவி “ராஜா ராணி 2” சீரியலில் என்ட்ரி கொடுத்த பிரபல நடிகர் – ப்ரோமோ ரிலீஸ்!

இதையடுத்து இலங்கையிலிருந்து அரசு ஊழியர்கள் வெளிநாட்டு வேலைக்காக செல்வதற்காக வழங்கப்படும் 5 வருட விடுமுறை தொடர்பான சுற்றறிக்கை அண்மையில் வெளியிடப்பட்டுள்ளது. பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு இந்த சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது. ஓய்வூதியம் பாதிக்காத வகையில் அதிகபட்சமாக 5 வருட விடுமுறையானது அரசு ஊழியர்களுக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 35 வயதுக்குட்பட்ட அரசு ஊழியர்களுக்கு தகவல் தொழில்நுட்ப அறிவு, ஆங்கிலம் அல்லது வேறு ஏதேனும் மொழி அறிவை வளர்த்துக் கொள்ள அல்லது அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் தொழிற்பயிற்சியை முடிக்க அதிகபட்சம் ஒரு வருட விடுமுறை வழங்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வெளிநாடுகளுக்கு வேலைக்காக செல்லும் அரசு ஊழியர்கள் ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட தொகையை, அவர்களின் பெயரில் தொடங்கப்பட்ட குடியுரிமை இல்லாதோர் கணக்கு மூலம் இலங்கைக்கு அனுப்ப வேண்டும் என அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு ஊழியர்களுக்கு வாரத்தில் 4 நாட்கள் வேலை , PF உயர்வு – விரைவில் அமலுக்கு வரும் புதிய விதிகள்!

இந்நிலையில் தனியார் துறையில் பணியாற்ற அரசு ஊழியர்களுக்கு 5 வருடங்கள் விடுமுறை வழங்க முடியுமா? என்பதை கண்டறிவதற்கு குழு நியமிக்கப்பட்டு உள்ளது. இதன் அடிப்படையில் மேற்படி குழு, தங்கள் அறிக்கையினை 2 வாரங்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இதை பொது நிர்வாக அமைச்சகத்தின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here