செப்டம்பர் மாதம் முதல் குழந்தைகளுக்கான Sputnik V தடுப்பூசி – ரஷ்யா சோதனை!
குழந்தைகளுக்கான புதிய வகை கொரோனா தடுப்பூசிகளை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்த ரஷ்யா அதற்கான சோதனை முயற்சியில் இறங்கியுள்ளது. அதன் படி ஸ்பூட்னிக் வி தடுப்பூசிகளை, 8 முதல் 12 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு நாசி வழியாக செலுத்தி சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஸ்புட்னிக் வி
ரஷ்யாவில் 8 முதல் 12 வயது வரையுள்ள குழந்தைகளுக்காக பிரத்யேகமான வகையில் கொரோனா தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த மருந்துகளை குழந்தைகளின் நாசி வழியாக செலுத்துவதற்காக தற்போது பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முன்னதாக ரஷ்யாவில் கொரோனாவுக்கு எதிரான தடுப்பு மருந்துகளாக ஸ்புட்னிக் வி என்ற தடுப்பூசிகள் மக்கள் பயன்பாட்டில் இருந்து வருகிறது.
தமிழகத்தில் மேலும் 39 ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம் – தலைமை செயலர் உத்தரவு!!
இந்த நிலையில் அதிக திறன் கொண்ட மருந்துகளை குழந்தைகளுக்கு செலுத்த முடியாத காரணத்தால், அவர்களுக்கென புதிய தடுப்பு மருந்துகளை கண்டுபிடிப்பதில் ரஷ்யா ஈடுபட்டு வந்தது. இது குறித்து ரஷ்ய செய்தி நிறுவனம் அளித்துள்ள தகவலின் படி, ஸ்புட்னிக் வி கொரோனா தடுப்பூசிகளை தயாரித்த கமலேயா இன்ஸ்டிடியூட்டில் குழந்தைகளுக்கு பயன்படுத்துவதற்காக தடுப்பூசிகளை தயாரிக்கும் பணிகள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.
மேலும் இம்மருந்துகள் செப்டம்பர் 15 ஆம் தேதிக்குள் பொது விநியோகத்திற்கு தயாராக இருக்கும் என அந்நிறுவனத்தின் தலைவர் அலெக்சாண்டர் கின்ட்ஸ்பர்க் கூறியுள்ளார். ரஷ்யாவில் மேற்கொள்ளப்பட்ட இதற்கான பரிசோதனையில், தடுப்பூசி செலுத்தியவர்களின் உடல் வெப்பநிலை அதிகரிப்பு உட்பட எந்த எதிர்மறையான விளைவுகளும் இதுவரை கண்டுபிடிக்கபடவில்லை.
TN Job “FB
Group” Join Now
மேலும் இத்தடுப்பூசிகள் சிறிய அளவிலான நோய் கிருமியை அழிப்பதோடு, உடலில் நோயெதிர்ப்பு சக்தியை மேலும் அதிகரிக்க செய்கிறது. தவிர SARS-CoV-2 என்ற ஒரு புதிய வகை கொரோனா வைரஸ் தாக்கப்பட்ட ஒருவரது உடலில், அவை மேலும் வளர்வதற்கு எடுக்கும் நேரத்தை குறைக்கும் ஆற்றலுடையது என கண்டறியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.