
தமிழகத்தில் விளையாட்டு வீரர்களுக்கு ரூ. 2 லட்சம் மதிப்பிலான காப்பீட்டுத் திட்டம் – அமைச்சர் அறிவிப்பு!
செஸ் ஒலிம்பியாட் போட்டியில் கலந்துகொள்ளும் வீரர்களுக்கு ரூ. 2 லட்சம் மதிப்பிலான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் வழங்க இருப்பதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.
மருத்துவ காப்பீட்டு திட்டம்
இந்தியாவில் முதன் முறையாக செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற இருக்கிறது. அதாவது, நாளை முதல் வரும் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வரைக்கும் சென்னைக்கு அருகிலுள்ள மாமல்லபுரத்தில் நடைபெற இருக்கிறது. கிட்டத்தட்ட 180க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து 2000க்கும் மேற்பட்ட செஸ் வீராங்கனைகள் இந்த போட்டியில் கலந்துகொள்ள இருக்கின்றனர். அதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் தடபுடலாக நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்நிலையில், செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறும் அரங்கத்தினை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் பார்வையிட்டார்.
Exams Daily Mobile App Download
அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், செஸ் ஒலிம்பியாட் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் ஏதெனும் உடல்நல குறைவு ஏற்பட்டு உள்நோயாளிகளாக சிகிச்சை பெற நேரிடும் சமயங்களில் அவர்களுக்கான மருத்துவ செலவினை தமிழக அரசே ஏற்றுக்கொள்ளும் என அறிவுறுத்தியுள்ளார். அதாவது, மருத்துவ காப்பீட்டு திட்டத்தின்படி ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்கும் வீராங்கனைகளுக்கு அடையாள அட்டை வழங்கப்படவுள்ளது. மேலும், அந்த வீராங்கனைகளுக்கு ஏதேனும் அவசர சிகிச்சை தேவைப்படும் சமயங்களில் மாமல்லபுரத்தை சுற்றியுள்ள 13 மல்டி சிறப்பு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
TET தேர்வுக்கு தயாராகுபவர்கள் கவனத்திற்கு – நாளை (ஜூலை 28) ஆன்லைன் மாதிரி தேர்வு!
அதாவது, 2 லட்சம் வரைக்கும் இலவசமாக சிகிச்சை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 2 லட்சத்திற்கும் கூடுதலாக மருத்துவச்செலவு ஆகும் பட்சத்தில் அதற்கான நடவடிக்கையும் எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது வரைக்கும் 2000 க்கும் மேற்பட்ட வீரர்களுக்கு மருத்துவ காப்பிட்டு திட்டம் உறுதி செய்யப்பட்டுள்ளது. அதே போல, 108 நாடுகளில் இருந்து செஸ் ஒலிம்பியாட் போட்டியில் கலந்துகொள்ள வரும் வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை, குரங்கம்மை பரிசோதனை முதலான அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.