விளையாட்டு செய்திகள் – செப்டம்பர் 2018

0

விளையாட்டு செய்திகள் – செப்டம்பர் 2018

மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் – செப்டம்பர் 2018

இங்கு செப்டம்பர் மாதத்தின் முக்கியமான ஒப்பந்தங்கள் பற்றிய விவரங்களை வழங்கியுள்ளோம். இது அணைத்து வகையான போட்டித்தேர்வுகளுக்கும் முக்கியமான விவரங்கள் ஆகும். இதை படித்தால் UPSC, TNPSC, SSC, RRB தேர்வுகளில் பொது அறிவு – நடப்பு நிகழ்வுகள் பிரிவில் கேட்க படும் கேள்விகளுக்கு எளிதில் பதில் அளிக்கலாம்.

விளையாட்டு செய்திகள்:

 • கிரிக்கெட்
 • டென்னிஸ்
 • கால்பந்து
 • துப்பாக்கிசுடுதல்
 • மற்றவை

கிரிக்கெட்

இங்கிலாந்து அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை கைப்பற்றியது

 • 4-வது டெஸ்ட் போட்டியில் 60 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோல்வி அடைந்ததால் இங்கிலாந்து அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 3-1 என கைப்பற்றியது.

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து இங்கிலாந்தின் அலஸ்டெய்ர் குக்ஓய்வு

 • இங்கிலாந்தின் அலஸ்டெய்ர் குக் இந்தியாவுடனான ஐந்து டெஸ்ட் கொண்ட தொடருடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

இந்தியா Vs இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட்

 • இந்தியாவிற்கு எதிரான ஐந்தாவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டியில்118 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வென்று 4-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. 143 ஆட்டங்களில் 564 விக்கெட்டுகளை வீழ்த்தி ஜேம்ஸ் ஆண்டர்சன் ஆஸ்திரிலேயாவின் மெக்கிராத்தை பின்னுக்குத்தள்ளி டெஸ்ட் போட்டியில் அதிக விக்கெட் வீழ்த்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனை படைத்தார்

இந்தியா–இலங்கை மகளிர் டி20 கிரிக்கெட் தொடர்

 • இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி இலங்கைக்கு எதிரான டி20 தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

இந்தியா ஆசியா கோப்பையை கைப்பற்றியது

 • இந்தியா வங்கதேசத்தை 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோற்கடித்து ஆசியா கோப்பையை ஏழாவது முறையாக கைப்பற்றியது.

துலீப் டிராபி

 • இந்திய ப்ளூ ஒரு இன்னிங்ஸ் மற்றும் 187 ரன்கள் வித்தியாசத்தில் சாம்பியன் இந்திய ரெட் அணியை வீழ்த்தி துலீப் டிராபியை கைப்பற்றியது

டென்னிஸ்

யு.எஸ் ஓபன் டென்னிஸ்

 • அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் செரீனா வில்லியம்ஸை தோற்கடித்து ஜப்பானின் நவோமி ஒசாகா தனது முதல் கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்றார்.

முன்னாள் இங்கிலாந்து கேப்டன் பவுல் காலிங்வுட் ஓய்வு பெறுகிறார்

 • முன்னாள் இங்கிலாந்து கேப்டன் பவுல் காலிங்வுட் அனைத்து விதமான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுகிறார்.

இந்திய மகளிர் கிரிக்கெட் அணி இலங்கையை வீழ்த்தி ஒருநாள்தொடரை கைப்பற்றியது

 • இந்திய மகளிர் கிரிக்கெட் அணி இரண்டாவது ஒருநாள் போட்டியில் இலங்கையை வீழ்த்தி, மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் 2-0 என முன்னணி வகிக்கிறது.

6 அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடக்கம்

 • 14-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் அபுதாபியில் தொடங்குகிறது. இந்த போட்டியில் 6 அணிகள் [இந்தியா, பாகிஸ்தான், ஹாங்காங், இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான்] பங்கேற்கின்றன.

கால்பந்து

SAFF சாம்பியன்ஷிப்

 • டாக்காவில் தெற்காசிய கால்பந்து கூட்டமைப்பு சாம்பியன்ஷிப் போட்டியில் இறுதி ஆட்டத்தில் மாலத்தீவை எதிர்கொள்ள உள்ளது இந்தியா.

தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப்

 • தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவை வீழ்த்தி மாலத்தீவு சாம்பியன்.

துப்பாக்கி சுடுதல் 

ISSF உலக சாம்பியன்ஷிப்

 • ஓம் பிரகாஷ் மிதர்வால் சர்வதேச துப்பாக்கி சூடு விளையாட்டு கூட்டமைப்பு உலக சாம்பியன்ஷிப்பில் 50 மீட்டர் பிஸ்டல் பிரிவில் தனது முதல் தங்கப் பதக்கத்தை வென்றார்.
 • தென் கொரியாவின் சாங்வொன் சர்வதேச துப்பாக்கி சூடு விளையாட்டு கூட்டமைப்பு உலக சாம்பியன்ஷிப்பில் நடைபெற்ற 10 மீட்டர் ஏர் ரைபிள் கலப்பு அணி ஜூனியர் போட்டியில் திவ்யான்ஸ் சிங் பன்வார் மற்றும் ஸ்ரேயா அகர்வால் வெண்கலத்தை வென்றனர்.
 • சர்வதேச துப்பாக்கி சூடு விளையாட்டு கூட்டமைப்பு உலக சாம்பியன்ஷிப்பில் நடைபெற்ற 10 மீட்டர் ஏர் பிஸ்டல் ஜூனியர் போட்டியில் இந்தியாவின் சவுரப் சவுதரி தங்கமும் அர்ஜுன் சிங் சீமா வெண்கலமும் வென்றனர்
 • சர்வதேச துப்பாக்கி சூடு விளையாட்டு கூட்டமைப்பு உலக சாம்பியன்ஷிப்பில் நடைபெற்ற 10 மீட்டர் ஏர் ரைபிள் ஆண்கள் ஜூனியர் போட்டியில் இந்தியாவின் ஹ்ரிதெய் ஹசாரிகா தங்கம் வென்றார்
 • ஐ.எஸ்.எஸ்.எப் உலக சாம்பியன்ஷிப்பில் ஆண்கள் இரட்டைப் பொறி பிரிவில் தங்கப் பதக்கத்தை அன்குர் மிட்டல் வென்றார்.
 • உலக துப்பாக்கி சூடு சாம்பியன்ஷிப்பில் ஜுனியர் 25 மீ. ஆண்கள் பிஸ்டல் பிரிவில் உதயவீர் சிங் தங்கம் வென்றார்.
 • ஐ.எஸ்.எஸ்.எஃப் உலக சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் ஜூனியர் துப்பாக்கிச் சூடு வீரர்கள் நாட்டின் முதல் ஸ்கீட் பதக்கங்களை வென்றனர்.
 • கர்னிஹால், அனன்ஜீத் சிங் நருகா, ஆயுஷ் ருத்ரராஜூ அடங்கிய ஆண்கள் அணி வெள்ளி வென்றது.
 • குர்னிஹால் சிங் கர்சா தனிநபர் பிரிவில் வெண்கலத்தை வென்றார்.

52 வது உலக துப்பாக்கிச்சூடு சாம்பியன்ஷிப்

 • 52 வது உலக துப்பாக்கிச்சூடு சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற அஞ்சம் மௌத்கில், ஒலிம்பிக் போட்டியில் பெண்களுக்கான ஏர் ரைபிள் பிரிவில் இடம் பிடித்தார்.

2020 ஒலிம்பிக்கிற்கான ஒதுக்கீட்டு இடங்களை இந்திய துப்பாக்கிச்சுடுவீரர்கள் பெற்றுள்ளனர்

 • 2020 ஒலிம்பிக்கிற்கான ஒதுக்கீட்டு இடங்களை இந்திய துப்பாக்கி சுடும் வீரர்களான அஞ்சம் மௌத்கில் மற்றும் அபுர்வி சண்டேலா பெற்றுள்ளனர்.

உலக துப்பாக்கி சுடுதல் போட்டி

 • ஜூனியர் ஆண்களுக்கான 25 மீட்டர் பிஸ்டல் பந்தயத்தில் உதய்வீர் சித்து தங்கப்பதக்கத்தை வென்றார்.
 • 25 மீட்டர் பிஸ்டல் ஜூனியர் அணிகள் பிரிவில் உதய்வீர் சித்து, விஜய்வீர் சித்து, ராஜ்கன்வார் சிங் சந்து ஆகியோர் அடங்கிய இந்திய அணி தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றது.

மற்றவை

முதல் சர்வதேச கோ கோ சாம்பியன்ஷிப்பில் பங்கேற்கவுள்ளது இந்திய கோ கோ அணி

 • இந்திய அரசின் நிதியுதவியுடன் இங்கிலாந்தில் முதல் சர்வதேச கோ கோ கோப்பை சாம்பியன்ஷிப்பில் இந்திய கோ கோ அணி பங்கேற்க இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை (ஐ/சி) மத்திய அமைச்சர் ராஜ்யவர்தன் ராத்தோர் ஒப்புதல் அளித்துள்ளார்.

பார்முலா-1 இத்தாலி கிராண்ட் ப்ரிக்ஸ்– லெவிஸ் ஹாமில்டன் சாம்பியன்

 • பார்முலா-1 இத்தாலி கிராண்ட் ப்ரிக்ஸ்- லெவிஸ் ஹாமில்டன் சாம்பியன். இதன்மூலம் மைக்கேல் ஸ்குமேக்கரின் ஐந்து இத்தாலி கிராண்ட் ப்ரிக்ஸ் வென்ற சாதனையை சமன் செய்தார்.

ராகுல் MRF F1600 பட்டத்தை பெற்றார்

 • ராகுல் ரங்கசாமி MRF ஃபார்முலா 1600 பிரிவின் சாம்பியன் ஆனார்

AAF கான்டினென்டல் கோப்பை

 • செக் குடியரசின் ஒஸ்ட்ராவாயில் நடைபெற்ற IAAF கான்டினென்டல் கோப்பை போட்டியின் ஆண்கள் ட்ரிபிள் ஜம்பில் அர்பிந்தர் சிங் வெண்கலப்பதக்கம் வென்றார்.

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் நோவக் ஜோகோவிக் வெற்றி

 • ஆண்கள் ஒற்றையர் இறுதிப் போட்டியில் செர்பியாவின் நோவக் ஜோகோவிக் அர்ஜென்டினாவின் ஜுவான் மார்ட்டின் டெல் போட்ரோவை தோற்கடித்து வென்றார். இது ஜோகோவிக்கின் 14 வது கிராண்ட் ஸ்லாம் பட்டம், மூன்றாவது அமெரிக்க ஓபன் பட்டம் ஆகும்.

சர்தார் சிங் ஓய்வு அறிவிப்பு

 • சர்வதேச ஹாக்கி போட்டியில் இருந்து முன்னாள் இந்திய கேப்டன் சர்தார் சிங் ஓய்வு பெறுகிறார்.

அஹ்மெத் கொமெர்ட் போட்டி

 • இந்திய குத்துச்சண்டை வீரர்கள் சிம்ரன்ஜித் கவுர், மோனிகா மற்றும் பாக்யபதி கச்சாரி துருக்கி இஸ்தான்புல்லில் நடந்த அஹ்மெத் கொமெர்ட் போட்டியில் தங்க பதக்கங்களை வென்றனர்.

மெட்வெட் சர்வதேச போட்டி

 • பெலாரஸ், ​​மின்ஸ்கில் நடக்கும் மெட்வெட் சர்வதேச போட்டியின் 62 கிலோ பிரிவில் இறுதிப்போட்டியில் சாக்சி மாலிக் ஹங்கேரியின் மரியன்னா சாஸ்தினை எதிர்கொள்கிறார்.

பெண்கள் சிலேசியன் ஓபன் குத்துச்சண்டை போட்டி

 • எம்.சி மேரி கோம் 48 கிலோ பிரிவில் இந்த ஆண்டின் மூன்றாவது தங்கப் பதக்கத்தை வென்றார். போலந்தில் உள்ள க்லிவைஸ் நகரில் பெண்கள் சிலேசியன் ஓபன் குத்துச்சண்டை போட்டியில் 51 கிலோ இளைஞர் பிரிவில் ஜோதி குலியா தங்கம் வென்றார்.

மாரத்தானில் கென்ய வீரர் உலக சாதனை

 • ஜெர்மனி தலைநகர் பெர்லினில் நேற்று நடந்த மாரத்தான் ஓட்டப்பந்தயத்தில் ஒலிம்பிக் சாம்பியனான கென்யாவின் எலியாட் கிப்சோஜ் 2 மணி ஒரு நிமிடம் 39 வினாடிகளில் இலக்கை கடந்து புதிய உலக சாதனையுடன் தங்கப்பதக்கம் வென்றார்.

டாட்டா மும்பை மராத்தனுக்கு IAAF கோல்டு லேபிள் அங்கீகாரம்

 • 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 20 ஆம் தேதி நடைபெறவிருக்கும் டாடா மும்பை மராத்தானுக்கு, சர்வதேச தடகள கூட்டமைப்பு (IAAF) கோல்டு லேபிள்க்கான அங்கீகாரம் அளித்தது.

மெட்வெட் சர்வதேச மல்யுத்தம்

 • மின்ஸ்க், பெலாரஸில் மெட்வெட் சர்வதேச மல்யுத்த போட்டியில் 62 கிலோ பிரிவில் ஹங்கேரியின் மரியானா சஸ்டின் தோல்வியடைந்து சாக்ஷி மாலிக் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
 • பூஜா தண்டா 57 கிலோ பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றார்.

உலக சாம்பியன் கெவின் மேயர் டெகாத்லானில் புதிய உலக சாதனைபடைத்தார்

 • டலென்ஸ், பிரான்சில் நடைபெற்ற டெகாஸ்டார் போட்டியில் உலக சாம்பியன் கெவின் மேயர் 9,126 புள்ளிகள் பெற்று புதிய உலக சாதனையை படைத்தார். டெகாத்லானில் 9,000 புள்ளிகளைக் கடக்கும் மூன்றாவது வீரரானார்.

ஆசிய அணி ஸ்னூக்கர் சாம்பியன்ஷிப்

 • கத்தார் டோகாவில் ஆசிய அணி ஸ்னூக்கர் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியா 2-3 என்ற வித்தியாசத்தில் பாகிஸ்தானிடம் தோல்வியடைந்து வெள்ளி பதக்கம் வென்றது.

டிராக் ஆசியா கோப்பை

 • புது தில்லியில் 5வது டிராக் ஆசிய கோப்பை சைக்கிள் ஓட்டத்தின் தொடக்க நாளில் இந்தியா 3 தங்கம், 3 வெள்ளி மற்றும் ஒரு வெண்கலப் பதக்கத்தை வென்றது. மயூரி லுட் மகளிர் ஜூனியர் 500 மீட்டர் பந்தயத்தில் நாட்டின் முதல் தங்கப்பதக்கத்தை வென்றார்.

ஜூனியர் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப், ஸ்லோவாகியா

 • 86 கிலோ ஃப்ரீஸ்டைல் ​​பிரிவில் இந்தியாவின் தீபக் பூனியா வெள்ளி பதக்கம் வென்றார்.
 • நவீன் சிஹாக் 57 கிலோ ஆண்கள் ஃப்ரீஸ்டைல் பிரிவில் தங்கப் பதக்கத்திற்கான இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

சீன ஓபன் பேட்மிண்டன்

 • இந்தோனேசியாவின் ஆன்டோனி சினிசுகா கின்டிங் ஜப்பானின் கெண்டோ மொமோட்டாவை தோற்கடித்து ஆண்கள் ஒற்றையர் சீன ஓபன் பட்டத்தை வென்றார். ஸ்பெயினின் கரோலினா மரின் சீனாவின் சென் யூபெய்யை தோற்கடித்து பெண்கள் ஒற்றையர் பட்டத்தை வென்றார்.

செர்பியா ஜூனியர் & கேடட் ஓபன்

 • பெல்கிரேடில் 2018 செர்பியா ஜூனியர் மற்றும் கேடட் ஓபனில் டேபிள் டென்னிஸில் பெண்கள் அணி மற்றும் கேடட் சிறுவர்கள் அணி பட்டங்களை இந்தியா கைப்பற்றியுள்ளது.

வில்வித்தை உலக கோப்பை

 • துருக்கியில் சாம்சனில் நடந்த வில்வித்தை உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா மூன்று பதக்கங்களை வென்றது.
 • தீபிகா குமாரி பெண்களுக்கான பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றார். அபிஷேக்வர்மா ஆண்கள் பிரிவில் வெண்கலப் பதக்கத்தை வென்றார்.
 • அபிஷேக் வர்மா & ஜோதிசுரேகா வென்னெம் கலப்பு அணி பிரிவில் வெள்ளி வென்றனர்.ஆசியஜூனியர் ஸ்குவாஷ் சாம்பியன் போட்டி.
 • யுவராஜ்வத்வானி 25வது ஆசிய இளையயோர் ஸ்குவாஷ் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.

ஃபார்முலா ஒன் சாம்பியன்ஷிப்

 • லூயிஸ் ஹாமில்டன் ஃபார்முலா ஒன் சாம்பியன்ஷிப்பில் ரஷியன் கிராண்ட் பிரிக்ஸ்பட்டத்தை வென்றுள்ளார்.

கோல்ஃப் ரைடர் கோப்பை

 • ஐரோப்பா அமெரிக்காவை வீழ்த்தி கோல்ஃப் ரைடர் கோப்பையை மீண்டும் வென்றது.

PDF Download

2018 முக்கிய தினங்கள் PDF Download

நடப்பு நிகழ்வுகள்  2018

நடப்பு நிகழ்வுகள்  WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்

Telegram Channel  கிளிக் செய்யவும்

Facebook  Examsdaily Tamil – FB ல் சேர – கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here