விளையாட்டு செய்திகள் – நவம்பர் 2018

0

விளையாட்டு செய்திகள் – நவம்பர் 2018

மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் – நவம்பர் 2018
நவம்பர் மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் Quiz PDF Download

இங்கு நவம்பர் மாதத்தின் விளையாட்டு செய்திகள் பற்றிய விவரங்களை வழங்கியுள்ளோம். இது அணைத்து வகையான போட்டித்தேர்வுகளுக்கும் முக்கியமான விவரங்கள் ஆகும். இதை படித்தால் UPSC, TNPSC, SSC, RRB தேர்வுகளில் பொது அறிவு – நடப்பு நிகழ்வுகள் பிரிவில் கேட்க படும் கேள்விகளுக்கு எளிதில் பதில் அளிக்கலாம்

விளையாட்டு செய்திகள்

கிரிக்கெட்

இந்தியா Vs வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட்

 • வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் இந்தியா 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரை 3-1 என கைப்பற்றியது.

இந்தியா Vs வெஸ்ட் இண்டீஸ் டி20 தொடர்

 • மேற்கிந்தியத் தீவுகள் அணியை 2 வது டி20 போட்டியில் 71 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வென்றது. இதன்மூலம் 2-0 என்ற கணக்கில் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் முன்னிலை வகிக்கிறது.

ஐசிசி மகளிர் உலக டி20 போட்டி

 • கயானாவில் நடைபெறும் ICC மகளிர் உலக டி20 போட்டியில் நியூசிலாந்துக்கு எதிராக இந்தியா துவக்க ஆட்டத்தில் விளையாடுகிறது.

ஹர்மன்பிரீத் கவுர் சதம் விளாசி சாதனை

 • பெண்களுக்கான 6-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வெஸ்ட் இண்டீசில் தொடங்கியது. நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் சதம் விளாசி சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் சதம் அடித்த முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனைக்கு சொந்தக்காரர் ஆனார்.
 • அத்துடன் 20 ஓவர் உலக கோப்பையில் சதம் கண்ட 3-வது வீராங்கனை என்ற சிறப்பையும் ஹர்மன்பிரீத் கவுர் பெற்றார்.

20 ஓவர் போட்டிகளில் அதிக சதம் எடுத்து சாதனை 

 • டி20 கிரிக்கெட் போட்டியில் அதிக ரன்கள் குவித்த இந்தியர் பட்டியலில் விராட் கோலியை முந்தி சாதனை படைத்தார் ரோகித் சர்மா. சர்வதேச அளவில் நான்கு சதங்கள் விளாசிய முதல் வீரர் என்ற பெருமையை ரோகித் சர்மா பெற்றுள்ளார்.

இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் இடையே கிரிக்கெட் T20 தொடர்

 • கடைசி போட்டியில் இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணியை ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதன் மூலம் T20 தொடரை 3-0 என முழுமையாக கைப்பற்றி கோப்பை வென்றது.

ஐசிசி ஒருநாள் தரவரிசையில் விராத் கோலி, ஜஸ்ப்ரித் பூம்ரா முதலிடம்

 • ஐசிசி ஒருநாள் தரவரிசைப் பட்டியலில் இந்திய கேப்டன் விராட் கோலி மற்றும் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரித் பூம்ரா ஆகியோர் முறையே முதலிடத்தில் உள்ளனர்.

ஐசிசி மகளிர் உலக டி 20 கிரிக்கெட்

 • ஐ.சி.சி. மகளிர் உலக டி 20 கிரிக்கெட்டில் இந்தியா 52 ரன்கள் வித்தியாசத்தில் அயர்லாந்தை வீழ்த்தி அரை இறுதிப் போட்டிக்கு தகுதி.

இந்தியா Vs ஆஸ்திரேலியா டி20

 • இந்தியா Vs ஆஸ்திரேலியா 3 வது டி20யில் ஆஸ்திரேலியாவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா. இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 1-1 என சமன் செய்தது.

ஐசிசி மகளிர் உலக டி 20

 • இறுதிப் போட்டியில் இங்கிலாந்தை எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலியா தனது நான்காவது மகளிர் உலக டுவென்டி 20 சாம்பியன்ஷிப் கோப்பையை வென்றது.

ஹர்மன்பிரீத் கவுர் ஐசிசி மகளிர் உலக ட்வென்டி 20 அணி XI கேப்டனாக தேர்வு

 • ஹர்மன் பிரீத் கவுர் ஐசிசி மகளிர் உலக டி 20 XI அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார், அதில் ஸ்மிருதி மந்தனா மற்றும் லெக் ஸ்பின்னர் பூனம் யாதவ் ஆகியோரும் இடம்பெற்றிருந்தனர்.

பிசிசிஐ வயது மோசடிகளுக்கு தடையை இரட்டிப்பு ஆக்கியது

 • இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) வயது மோசடிகளுக்கு தடையை இரட்டிப்பு ஆக்கியது.
 • இதற்கு முன்னதாக, கிரிக்கெட் வீரர் ஒரு ஆண்டு காலம் தடை விதிக்கப்படுவர்.

டென்னிஸ்

ஏடிபி பாரிஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டி

 • ஏடிபி பாரிஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் அரை இறுதிப் போட்டியில் ரோஜர் ஃபெடரருடன் நோவாக் ஜோகோவிக் மோதவுள்ளார்.

பாரிஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ், 2018

 • ரஷ்யாவின் கரேன் கச்சனோவ் உலகின் நம்பர் ஒன் வீரரான ஜோகோவிச்சை வீழ்த்தி பாரிஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பட்டத்தை வென்றார்.

ITTF சேலன்ஞ் பெலாரஸ் ஓபன் டேபிள் டென்னிஸ்

 • சர்வதேச டேபிள் டென்னிஸ் பெடரேசன் சேலன்ஞ் பெல்கோஸ்ட்ராக் பெலாரஸ் ஓபன் டேபிள் டென்னிஸ் தொடரின் U-21 ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் மனவ் தாக்கர் வெண்கலம் வென்றார். 

மற்றவை

SAFF U-15 சாம்பியன்ஷிப்

 • காத்மாண்டுவில் நடைபெற்ற SAFF U-15 ஆண்கள் சாம்பியன்ஷிப் போட்டியில் நேபாளை 1-0 என்ற கணக்கில் வீழ்த்தி இந்திய அணி வெண்கலப் பதக்கத்தை வென்றது.
 • பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் தங்கப்பதக்கத்திற்கான போட்டியில் விளையாடும்.
 • பங்களாதேஷ் 3-2 என்ற கணக்கில் பெனால்டி ஷூட் முறையில் பாகிஸ்தானை வென்றது.

தனி நபர் வால்ட் போட்டி

 • கத்தாரில் நடைபெற்ற தனி நபர் வால்ட் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றதன் மூலம் 13 உலக சாம்பியன்ஷிப் தங்க பதக்கம் வென்ற முதல் ஜிம்னாஸ்ட் எனும் சாதனை படைத்தார் சூப்பர்ஸ்டார் சிமோன் பைல்ஸ்.

சார்லோர்லக்ஸ் ஓபன் பேட்மிண்டன்

 • ஜெர்மனியில் நடைபெற்ற சார்லோர்லக்ஸ் ஓபன் பேட்மிண்டன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு போட்டியில் பிரிட்டனின் ராஜீவ் ஓசீப்பை தோற்கடித்து இந்தியாவின் சுபாங்கர் டே வென்றார்.

சீனா ஓபன் மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டி

 • சீனா ஓபன் மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டி சீனாவின் புழோவில் தொடங்கியது.

ஆசிய ஷாட்கண் துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப்

 • குவைத்தில் நடைபெற்ற ஆசிய ஷாட்கண் துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் ஆண்கள் ஸ்கீட் பிரிவில், அங்கட் வீர் சிங் பாஜ்வா தங்கம் வென்றார்.
 • கான்டினென்டல்[கண்டம் அளவிலான] அல்லது உலக அளவிலான போட்டியில் வெல்லும் முதல் இந்திய ஸ்கீட் துப்பாக்கி சுடுதல் வீரர் எனும் சாதனை படைத்தார்.

உலக மல்யுத்தம் தரவரிசை- இந்திய வீரர் பஜ்ரங் புனியா முதல் இடம் பிடித்து சாதனை

 • இந்தியாவின் முன்னணி மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா. காமன்வெல்த் மற்றும் ஆசிய விளையாட்டில் தங்கப்பதக்கம் வென்றார். உலக சாம்பியன்ஷிப் தொடரில் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
 • இதன்மூலம் ஒருங்கிணைந்த உலக மல்யுத்தம் தரவரிசையில் முதல் இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார்.

பெண்கள் உலக குத்துச்சண்டை போட்டி டெல்லியில் தொடக்கம்

 • 10-வது பெண்கள் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி தலைநகர் டெல்லியில் நடக்கிறது. இதில் 72 நாடுகளை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள்.
 • 2006-ம் ஆண்டுக்கு பிறகு தற்போது தான் இந்த போட்டி இந்தியாவில் நடத்தப்படுகிறது. இந்திய அணிக்கு மேரிகோம் தலைமை தாங்கி தேசிய கொடியை ஏந்தி சென்றார்.
 • மேரி கோம் தற்போது ஐந்து தங்கப்பதக்கங்கள் வென்று கேட்டி டெய்லருடன் சம நிலையில் உள்ளார், மேலும் ஒரு பதக்கம் வெல்லும் நிலையில் அவர் வரலாற்றின் மிகவும் வெற்றிகரமான பெண் குத்துச்சண்டை வீரர் என்று சாதனையாளர் ஆவார்.
 • புது தில்லி மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் பெண்கள் 48 கிலோ எடை லைட் ஃப்ரீவெயிட் பிரிவின் இறுதிப் போட்டியில் 5-0 என்ற கணக்கில் உக்ரைனின் ஹன்னா ஓகோட்டாவை தோற்கடித்து மேரி கோம் வரலாற்றில் இடம் பிடித்தார்.
 • இதன் மூலம், மணிப்பூர் மாநிலத்தின் 35 வயதான இந்திய குத்துச்சண்டை வீரர் ஆறு உலக சாம்பியன்களை வென்ற வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான குத்துச்சண்டை வீரர் எனும் சாதனை படைத்தார்.

சீனா ஓபன் பேட்மிண்டன்

 • உலக சாம்பியன் கெண்டோ மோமோடா ஃப்யூகூவோகாவில் நடைபெற்ற சீனா ஓபன் பேட்மிண்டன் பட்டத்தை வென்றார்.

ஆசிய ஏர்கண் சாம்பியன்ஷிப்

 • குவைத்தில் நடைபெற்ற 11வது ஆசிய ஏர்கண் சாம்பியன்ஷிப் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு அணி ஜூனியர் பிரிவில் இந்திய ஜோடி மனு பேகர் மற்றும் சௌரப் சவுதரி ஆகியோர் உலக சாதனை படைத்து தங்கம் வென்றனர்.

ஐபிஎஸ்எப் பில்லியர்ட்ஸ்

 • பங்கஜ் அத்வானி தொடர்ந்து மூன்றாவது முறையாக ஐபிஎஸ்எப் பில்லியர்ட்ஸ் பட்டத்தை 150-அப் பிரிவில் வென்றார். இது அவரின் 20வது உலகப் பட்டம் ஆகும்.

உலக ஜூனியர் சாம்பியன்ஷிப் பேட்மின்டன்

 • கனடாவில் நடைபெறும் உலக ஜூனியர் சாம்பியன்ஷிப் பேட்மின்டன் போட்டியின் காலிறுதிக்கு லக்ஷ்ச சென் முன்னேறினார்.

ஏடிபி வேர்ல்ட் டூர்

 • ஜெர்மனியின் அலெக்ஸாண்டர் ஸ்வரேவ் லண்டனில் நடைபெற்ற ஏடிபி இறுதிப் போட்டியில் நோவக் ஜோகோவிக்கை வீழ்த்தி கோப்பையை வென்றார்.
 • ஒரே தொடரில் இறுதிப்போட்டியில் ஜோகோவிக் மற்றும் ஃபெடரர் ஆகிய இருவரையும் தோற்கடித்த முதல் வீரர் எனும் சாதனை படைத்தார்.

உலக ஜூனியர் சாம்பியன்ஷிப்  பாட்மிண்டன்

 • கனடாவின் மார்க்கம் நகரில் நடைபெற்ற உலக ஜூனியர் சாம்பியன்ஷிப் பாட்மிண்டன் போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் லக்ஷயா சென் அரைஇறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார்.

சுப்ரோதா சர்வதேச கால்பந்துக் கோப்பை

 • 59 வது சுப்ரோதா சர்வதேச கால்பந்து கோப்பை ஆண்களுக்கான U-17 இறுதிப்போட்டி புதுதில்லியில் நடக்க உள்ளது.

அக்ரோபாட்டிக் ஜிம்னாஸ்டிக்ஸ் உலக கோப்பை

 • ஆண்கள் [பிரின்ஸ் அரிஸ் மற்றும் ரெஜிலேஷ் சுரிபாபு] மற்றும் பெண்கள் [அயுஷி கோதேஸ்வர், ப்ரச்சி பர்க்ஹி மற்றும் ம்ருண்மயி வால்டே] குழுப்பிரிவில் இந்தியா இரண்டு வெண்கலப் பதக்கங்களை வென்றன.

உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்

 • உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் தங்கத்திற்கான இறுதிப்போட்டியில் மகளிர் 48 கிலோ எடை பிரிவில் எம்.சி மேரி கோம் மற்றும் 57 கிலோ எடை பிரிவில் சோனியா சஹால் ஆகியோர் விளையாட உள்ளனர்.

சையத் மோடி சர்வதேச சாம்பியன்ஷிப்

 • லக்னோவில் நடைபெறும் சையது மோடி சர்வதேச சாம்பியன்ஷிப் பாட்மிண்டன் தொடரில், சாய்னா நேவால், உட்பட ஏழு இந்திய வீரர்கள் அரை இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றனர்.

கோல்ப் உலகக்கோப்பை

 • மெல்போர்னில் நடைபெற்ற கோல்ப் உலகக் கோப்பையில் அனிர்பன் லாஹிரி மற்றும் ககன்ஜீத் புல்லர் ஆகியோர் 10-வது இடம் பிடித்தனர்.

சையத் மோடி சர்வதேச பேட்மின்டன்

 • சையத் மோடி சர்வதேச உலக டூர் சூப்பர் 300 போட்டியின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் சீனாவின் லு குவாங்சுவை சமீர் வர்மா தோற்கடித்து பட்டத்தைக் கைப்பற்றினார் .
 • இது அவருக்கு மூன்றாவது பட்டம் ஆகும், இதற்கு முன் சுவிஸ் ஓபன் மற்றும் ஹைதராபாத் ஓபன் போட்டிகளில் பட்டம் பெற்றுள்ளார்.
 • மகளிர் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் சீன வீரர் ஹான் யுவிடம் சாய்னா நேவால் தோல்வி அடைந்தார்.

2018 ஹாக்கி உலக கோப்பை

 • புவனேஸ்வரில் நடைபெறும் 2018 ஹாக்கி உலகக் கோப்பை போட்டியில் விளையாட பாகிஸ்தான் அணி இந்தியாவுக்கு வந்து சேர்ந்தது.

கலை ஜிம்னாஸ்டிக்ஸ் உலக கோப்பை

 • ஜெர்மனியில் உள்ள காட்பஸ்ஸில் நடைபெற்ற கலை ஜிம்னாஸ்டிக்ஸ் உலகக் கோப்பையின் வால்ட் பிரிவு போட்டியில் இந்திய ஜிம்னாஸ்ட் தீபா கர்மாகர் வெண்கலப் பதக்கத்தை வென்றார்.
 • பிரேசில் நாட்டின் ரெபேக்கா ஆண்ட்ரேட் தங்கம் வென்றார் , அமெரிக்காவின் ஜேட் கேரி வெள்ளி வென்றார்.

காமன்வெல்த் ஃபென்சிங் சாம்பியன்ஷிப்

 • கான்பெர்ராவில் நடைபெறும் சீனியர் காமன்வெல்த் ஃபென்சிங் சாம்பியன்ஷிப்பில் தங்க பதக்கம் வென்ற முதல் இந்திய வீரர் என்ற சாதனை படைத்தார் சி.ஏ.பவானி தேவி.

செஸ் உலக சாம்பியன்ஷிப்

 • செஸ் உலக சாம்பியன்ஷிப் பட்டம் லண்டனில் வேகமான டைபிரேக்கர் விளையாட்டு மூலம் முடிவு செய்யப்படும், உலக சாம்பியனான நார்வேயின் மேக்னஸ் கார்ல்சன் மற்றும் அமெரிக்க போட்டியாளர் பேபியானோ கருவானா இடையே இந்த போட்டி நடைபெறும்.

ஆண்கள் ஹாக்கி உலக கோப்பை

 • பூபனேஸ்வரில் நடைபெறும் ஆண்கள் ஹாக்கி உலகக் கோப்பை போட்டியில் தென் ஆப்பிரிக்காவுடன் இந்தியா மோதுகிறது.

PDF Download

2018 முக்கிய தினங்கள் PDF Download

நடப்பு நிகழ்வுகள்  2018

நடப்பு நிகழ்வுகள்  WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்

Telegram Channel  கிளிக் செய்யவும்

Facebook   Examsdaily Tamil – FB ல் சேர – கிளிக் செய்யவும் 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here