விளையாட்டு செய்திகள் – மார்ச் 2019

0

விளையாட்டு செய்திகள் – மார்ச் 2019

மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் – மார்ச் 2019

இங்கு மார்ச் மாதத்தின் விளையாட்டு செய்திகள் பற்றிய விவரங்களை வழங்கியுள்ளோம். இது அனைத்து வகையான போட்டித்தேர்வுகளுக்கும் முக்கியமான விவரங்கள் ஆகும். இதை படித்தால் UPSC, TNPSC, SSC, RRB தேர்வுகளில் பொது அறிவு – நடப்பு நிகழ்வுகள் பிரிவில் கேட்க படும் கேள்விகளுக்கு எளிதில் பதில் அளிக்கலாம்.

மார்ச் மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் Quiz PDF Download

கிரிக்கெட்

இந்திய கிரிக்கெட் வீரர்கள் தேசிய பாதுகாப்பு நிதிக்கு போட்டிகட்டணத்தை நன்கொடையாக வழங்கினர்

  • புல்வாமா பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த சி.ஆர்.பீ.எஃப் அதிகாரிகளுக்கு மரியாதை அளிக்கும் வகையில், இந்திய கிரிக்கெட் வீரர்கள் ராஞ்சியில் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் சிறப்பு இராணுவத் தொப்பி அணிந்து விளையாடினர், அவர்களது போட்டி கட்டணத்தை தேசிய பாதுகாப்பு நிதியத்திற்கு நன்கொடையாக வழங்கினர்.

இந்தியா Vs இங்கிலாந்து பெண்கள் டி20 தொடர்

  • மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரின் கடைசி ஆட்டத்தில் ஒரு ரன் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது இங்கிலாந்து. இதன்மூலம் இங்கிலாந்து 3-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.

இந்தியா Vs ஆஸ்திரேலியா ஒருநாள் தொடர்

  • 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரின் இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 35 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வென்றது. இதன் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட தொடரை 3-2 என்ற கணக்கில் கைப்பற்றியது.

 ஆப்கானிஸ்தான் முதல் டெஸ்ட் வெற்றி பெற்றது

  • உத்தராகாண்ட் டெஹ்ராடூனில் நடைபெற்ற ஆட்டத்தில் அயர்லாந்து அணியை ஏழு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆப்கானிஸ்தானின் கிரிக்கெட் அணி தனது முதல் டெஸ்ட் வெற்றியை பதிவு செய்தது.

அபுதாபியில் ஐந்து ஆண்டுகளுக்கு டி10 கிரிக்கெட் லீக் போட்டி நடத்த ஒப்பந்தம்கையெழுத்தானது

  • அபுதாபியில் உள்ள சயீத் கிரிக்கெட் அரங்கில் 2019ம் ஆண்டு முதல் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு டி10 கிரிக்கெட் லீக் போட்டி நடத்த ஒப்பந்தம் கையெழுத்தானது.

பிசிசிஐக்கு ரூ.11 கோடி இழப்பீடு தொகையை பிசிபி செலுத்தியது

  • சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் சர்ச்சை தீர்ப்புக் குழுவிடம் தொடுத்த வழக்கில் தோல்வியுற்றதைத் தொடர்ந்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (PCB) 1.6 மில்லியன் அமெரிக்க டாலர்களை [இந்திய ரூபாய் மதிப்பில் பதினொரு கோடிக்கு மேல்] இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு (BCCI) இழப்பீடாக செலுத்தியது.

கால்பந்து

5 வது SAFF மகளிர் சாம்பியன்ஷிப்

  • ஐந்தாவது தெற்காசிய கால்பந்து சம்மேளனத்தின், SAFF, மகளிர் சாம்பியன்ஷிப் போட்டி நேபாளத்திலுள்ள பிராட்நகரில் தொடங்கியது.
  • SAFF மகளிர் கால்பந்து சாம்பியன்ஷிப் கால்பந்து போட்டியில்   நேபாளை 3-1 என்ற கணக்கில் வென்று இந்தியா ஐந்தாவது முறையாக சாம்பியன்ஷிப் பட்டம் பெற்றது. இது 2010 ல் துவங்கியதில் இருந்து சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் 23 வது நேர்த்தியான வெற்றியாகும்.

 2020 ஆம் ஆண்டில் யு -17 மகளிர் கால்பந்து உலகக் கோப்பை போட்டிகளை இந்தியா நடத்தவுள்ளது

  • யு -17 மகளிர் கால்பந்து உலகக் கோப்பை 2020 போட்டிகள் இந்தியாவில் நடக்கவுள்ளது. இது 2017 ல் U-17 ஆண்கள் உலகக் கோப்பைக்குப் பிறகு இந்தியாவில் நடைபெறும், இரண்டாவது FIFA போட்டியாகும்.

டென்னிஸ்

ரோஜர் ஃபெடரர் 100 வது ATP பட்டத்தை வென்றுள்ளார்

  • ரோஜர் ஃபெடரர், துபாயின் டென்னிஸ் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் 6-4, 6-4 என்ற கணக்கில் கிரேக்க ஸ்டீபனோஸ் சிசிபியாஸை தோற்கடித்து தனது 100 வது ATP பட்டத்தை வென்றுள்ளார்.
  • 100 பட்டத்தை வென்ற அமெரிக்கன் ஜிம்மி கான்னர்ஸ்க்கு பிறகு, 20 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியன் ரோஜர் ஃபெடரர் இரண்டாவது நபராவார்.
  • ஃபெடரர் 109 பட்டங்கள் வென்ற ஜிம்மி கான்னர்ஸ்ஸின் சாதனையை முறியடிக்க 10 பட்டங்களை வெல்ல வேண்டும், மார்டினா நவரத்திலோவா தனது காலப்பகுதியில் 167 பெண்கள் ஒற்றையர் பட்டங்களை வென்று சாதனை படைத்துள்ளார்.

துபாய் டென்னிஸ் சாம்பியன்ஷிப்

  • துபாய் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில், சுவிட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர், மார்ட்டன் ஃபுக்சோவிக்ஸ்க்கு எதிரான அரை இறுதிப் போட்டியில் வென்றார். இதன் மூலம் 100வது பட்டம் வெல்லப்போகும் வாய்ப்பை பெற்றார்.

இந்தியன் வெல்ஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டி

  • 4-6, 6-1, 8-10 என்ற செட் கணக்கில் இந்திய-கனடா ஜோடியான ரோஹன் போபண்ணா மற்றும் டெனிஸ் ஷாபலோவ் ஆகியோர் செர்பிய-இத்தாலிய ஜோடியான நோவக் ஜோகோவிக் மற்றும் ஃபேபியோ போக்னினியிடம் தோல்வி அடைந்தனர்.
  • ஒற்றையர் பிரிவில், பிரஜ்னேஷ் குன்னேஸ்வரன் குரோஷியாவின் இவோ கார்லோவிக்கால், 3-6, 6-7 என்ற நேர் செட்களில் வீழ்த்தப்பட்டார்.

இந்தியன் வெல்ஸ் ஏடிபி மாஸ்டர்ஸ்

  • அமெரிக்காவில் நடைபெறும் இந்தியன் வெல்ஸ் ஏடிபி மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில், இந்திய வீரர் பிரஜ்னேஷ் குன்னேஸ்வரன் உலகத் தரவரிசையில் 18வது இடத்தில் உள்ள நிகோலொஸ் பஸிலாஷ்விலியைத் தோற்கடித்து மிகப்பெரிய வெற்றியைப் பெற்றார்.

இன்டியன் வெல்ஸ் டென்னிஸ்

  • அமெரிக்காவில் நடைபெற்ற இன்டியன் வெல்ஸ் டென்னிஸ் இறுதிப் போட்டியில் ரோஜர் பெடரரை வீழ்த்தி ஆஸ்திரியா வீரர் டொமினிக் தியெம் சாம்பியன் பட்டம் வென்றார். பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் ஏஞ்சலிக் கெர்பரை வீழ்த்தி அண்ட்ரீஸ்கு சாம்பியன் பட்டம் வென்றார்.

ஹாக்கி

சுல்தான் அஸ்லான் ஷா கோப்பை

  • 28 வது சுல்தான் அஸ்லான் ஷா ஹாக்கி கோப்பைக்கு செல்லும் 18 பேர் கொண்ட இந்திய அணியின் கேப்டனாக மன்ரிபீத் சிங், துணை கேப்டனாக சுரேந்தர் குமார் நியமிக்கப்பட்டுள்ளனர். இது மலேசியாவின் இபோவில் நடந்தது.
  • மலேசியாவில் உள்ள ஐபோவில் சுல்தான் அஸ்லான் ஷா கோப்பை ஹாக்கி இறுதிப் போட்டியில் தென் கொரியா 4-2 என்ற கணக்கில் இந்தியாவை தோற்கடித்தது.

மலேசியாவில் நடைபெறவுள்ள இந்திய பெண்கள் ஹாக்கி அணிக்கு சவிதா புனியா தலைமை தாங்குகிறார் 

  • மலேசியாவுக்கு எதிரான ஐந்து போட்டிகளுக்கு 18 பேர் கொண்ட இந்திய பெண்கள் ஹாக்கி அணிக்கு கோல்கீப்பர் சவீதா புனியா தலைமைதாங்குகிறார்.

மற்றவை

சர்வதேச கடற்கரை கைப்பந்து (volleyball) போட்டி

  • விசாகப்பட்டினம் அதன் முதல் சர்வதேச கடற்கரை கைப்பந்து (volleyball) போட்டியை நடத்தியது. FIFB கடற்கரை கைப்பந்து போட்டி நடத்தும் உலக நாடுகள் பட்டியலில் இந்தியா 50 வது நாடு ஆனது. பங்கேற்கும் நாடுகள் – ரஷ்யா, போலந்து, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரியா, செக் குடியரசு, அமெரிக்கா மற்றும் ஜப்பான் ஆகியவை அடங்கும்.

மக்ரான் கோப்பை

  • ஈரான், சபாஹாரில் நடைபெற்ற மக்ரான் கோப்பையில் தேசிய சாம்பியன் தீபக் சிங் (49 கிலோ) தங்கப் பதக்கத்தை வென்றார். பி. லலிதா பிரசாத் (52 கிலோ), மணிஷ் கௌஷிக் (60 கிலோ), துரியோதன் சிங் நேகி (69 கிலோ), சஞ்சித் (91 கிலோ) மற்றும் சதீஷ் குமார் (91 கிலோ) வெள்ளிப் பதக்கம் வென்றனர்.

நேபாளத்தின் COAS ஓபன் மராத்தான் மற்றும் ரன் ஃபார் ஃபன்

  • இந்தியாவின் சாஷாங் சேகர் காத்மாண்டுவில் நடைபெற்ற 10 கிலோ மீட்டர் தூர நேபாள (COAS) ஓபன் மராத்தான் மற்றும் ரன் ஃபார் ஃபன் போட்டியில் வெற்றி பெற்றார். மத்திய தொழில்துறை பாதுகாப்பு படையின் (சிஐஎஸ்எஃப்) சேகர் காத்மாண்டுவில் இந்தியாவின் தூதரகத்தில் போட்டியிட்டு முதல் இடத்தைப் பெற்றார்.

டான் கொலோவ்-நிகோலா பெட்ரோவ் போட்டி

  • தங்க பதக்கம் – 65 கிலோகிராம் ஃப்ரீஸ்டைல் பிரிவில் பஜ்ரங் புனியா, பெண்கள் 59 கிலோ பிரிவில் பூஜா தந்தா.
  • வெள்ளி பதக்கம் – பெண்கள் 59 கிலோ பிரிவில் சரிதா மோர், 65 கிலோ பெண்கள் ஃப்ரீஸ்டைல் பிரிவில் சாக்ஷி மாலிக் , 61 கிலோ ஆண்கள் ஃப்ரீஸ்டைல் பிரிவில் சந்தீப் தோமர்

யோனெக்ஸ் அனைத்து இங்கிலாந்து பாட்மிண்டன் சாம்பியன் 2019

  • பேட்மின்டனின் மிகப் பெரிய விளையாட்டான யோனெக்ஸ் அனைத்து இங்கிலாந்து பாட்மிண்டன் சாம்பியன் 2019 பர்மிங்காம் நகரில் தொடங்குகிறது. பாட்மிண்டன் உலகக் கூட்டமைப்பு (BWF) தரவரிசையில் சிறந்த 32 வீரர்கள் மட்டுமே போட்டியில் பங்கேற்கின்றன.

அனைத்து இங்கிலாந்து சாம்பியன்ஷிப் – பேட்மின்டன்

  • பர்மிங்ஹாமில் நடைபெற்ற அனைத்து இங்கிலாந்து சாம்பியன்ஷிப் – பேட்மின்டன் போட்டியில் சாய்னா நேவால் 15-21, 19-21 என்ற செட் கணக்கில் தாய் ட்சூ யிங்கிடம் தோல்வி அடைந்தார். 2015 ஆம் ஆண்டிலிருந்து தாய் ட்சூ யிங்கிடம் சாய்னா அடையும் 13 வது நேர்த்தியான தோல்வி இதுவாகும்.

பின்லாந்து குத்துச்சண்டை போட்டி

  • பின்லாந்து ஹெல்சின்கியில் நடைபெறும் 38வது கீபீ குத்துச்சண்டை போட்டியில் 56 கிலோ பிரிவில் கவீந்தர் சிங் பிஷ்த் தங்கம் வென்றார்; சிவா தாபா 60 கிலோ பிரிவில், கோவிந்த் சஹானி, முகமது ஹூசுமுதின் மற்றும் தினேஷ் தாகர் வெள்ளிப் பதக்கங்களை வென்றனர். சுமித் சங்வான், சச்சின் சிவாச் மற்றும் நவீன் குமார் ஆகியோர் வெண்கலப் பதக்கங்களை வென்றனர்.

சிறப்பு ஒலிம்பிக்ஸ் உலக விளையாட்டு 2019

  • மார்ச் 14 முதல் மார்ச் 21 வரை ஐக்கிய அரபு எமிரேட்ஸில் சிறப்பு ஒலிம்பிக்ஸ் உலக விளையாட்டு 2019 நடைபெறும், இந்த விளையாட்டுப்போட்டிகளில் பங்கேற்க 200 நாடுகளை அழைத்து சாதனை படைத்துள்ளது. 200 நாடுகளில், 195 நாடுகள் போட்டியில் பங்கேற்கும், ஐந்து நாடுகள் பார்வையாளராக இருக்கும். இது முதல் முறையாக மேற்கு ஆசியாவில் நடைபெறுகிறது.

தீபா கர்மாகர் ஜிம்னாஸ்டிக்ஸ் உலகக் கோப்பை இறுதிச்சுற்றுக்கு தகுதி

  • அசர்பெய்ஜானில் நடைபெற்ற தகுதிச்சுற்றுப் போட்டியில் 3வது இடம் பிடித்து ஆர்டிஸ்டிக் ஜிம்னாஸ்டிக்ஸ் உலகக் கோப்பை ‘வால்ட்’ பிரிவு இறுதிச்சுற்றுக்கு இந்தியாவின் தீபா கர்மாகர் தகுதிபெற்றார்.

கமல்ப்ரீத் கவுர் பெண்கள் தட்டெறிவதில் தங்கம் வென்றார்

  • பாட்டியாலாவில் நடைப்பெற்ற கூட்டமைப்பு கோப்பை தடகளத்தில், கமல்ப்ரீத் கவுர் தட்டெறியும் போட்டியில் 60.25 மீட்டர் எறிந்து தங்கப்பதக்கத்தை வென்றதன் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார், இதன் மூலம் ஆசிய சாம்பியன்ஷிப்பிற்கு தகுதி பெற்றார்.பாட்டியாலாவில் நடைப்பெற்ற கூட்டமைப்பு கோப்பை தடகளத்தில், கமல்ப்ரீத் கவுர் தட்டெறியும் போட்டியில் 60.25 மீட்டர் எறிந்து தங்கப்பதக்கத்தை வென்றதன் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார், இதன் மூலம் ஆசிய சாம்பியன்ஷிப்பிற்கு தகுதி பெற்றார்.

ஆசிய இளைஞர் தடகள சாம்பியன்ஷிப்

  • ஹாங்காங்கில் நடைபெற்ற ஆசிய இளைஞர் தடகள சாம்பியன்ஷிப்பில் இந்தியா இரண்டு தங்கம் உட்பட ஐந்து பதக்கங்களை வென்றது.

தரவரிசையில் 84 வது இடத்திற்கு உயர்ந்துள்ளார் இந்தியடென்னிஸ் வீரர் பிரஜ்னேஷ் குணேஸ்வரன்

  • இந்தியன் வேல்ஸ் தொடரில் சிறப்பாக விளையாடி அனைவரது கவனத்தையும் பெற்ற இந்திய வீரர் பிரஜ்னேஷ் குணேஸ்வரன் தனது டென்னிஸ் வாழ்க்கையில் முதன்முறையாக தரவரிசையில் முன்னேறி 84வது இடத்ததை பிடித்துள்ளார்.

மகளிர் ஐரோப்பிய டூர் பட்டம்

  • தென்னாப்பிரிக்க ஓபன் தொடரில் வெற்றி பெற்றதன் மூலம் ஐரோப்பிய டூர் பட்டத்தை வெல்லும் இரண்டாவது இந்தியப் பெண் கோல்ப் வீராங்கனை எனும் சாதனை படைத்தார் தீக்ஷா டாகர்.

கோபி தொனக்கால் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதிபெற்றுள்ளார்

  • இந்தியாவின் ஆசிய சாம்பியனான கோபி தொனக்கால் 2019 செப்டம்பர்-அக்டோபர் மாதங்களில் கத்தாரின் தோஹாவில் நடைபெறவுள்ள உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். சியோல் சர்வதேச மராத்தான் போட்டியில் 11 வது இடத்தை பிடித்ததன் மூலம் இவர் தகுதி பெற்றார்.

சிறப்பு ஒலிம்பிக் உலக விளையாட்டு

  • அபுதாபியில் நடைபெறும் சிறப்பு ஒலிம்பிக் உலக விளையாட்டுப் போட்டியில் இந்தியா மொத்தம் 188 பதக்கங்களை வென்றுள்ளது. 50 தங்கம், 63 வெள்ளி மற்றும் 75 வெண்கலப் பதக்கங்கள் இதில் அடங்கும்.
  • ஐக்கிய அரபு எமிரேட்ஸ், அபுதாபியில் நடைபெற்ற சிறப்பு ஒலிம்பிக் உலக விளையாட்டுப் போட்டி 2019ல் 368 பதக்கங்களை இந்தியா வென்றது. 85 தங்கம், 154 வெள்ளி மற்றும் 129 வெண்கலப் பதக்கங்கள் இதில் அடங்கும்.

2020ஆம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு இந்தியாவின் இர்பான்தகுதி

  • ஜப்பானில் நடைபெற்ற ஆசிய ரேஸ் வாக்கிங் சாம்பியன்ஷிப் போட்டியில் நான்காவது இடத்தைப் பிடித்ததன் மூலம் இந்தியாவின் இர்பான் அடுத்த ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்றுள்ளார். 20 கிலோ மீட்டர் தூரத்தை, 1 மணி நேரம் 20 நிமிடங்கள் மற்றும் 57 வினாடிகளில் இர்பான் நடந்து ஒலிம்பிக்கிற்கான தகுதியை பெற்றார்.

ஐஎஸ்எஸ்எஃப் ஷாட்கண் துப்பாக்கிச்சூடு உலகக் கோப்பை

  • மெக்ஸிகோவின் அசபுல்கோவில் நடைபெறும் ஐஎஸ்எஸ்எஃப் ஷாட்கண் துப்பாக்கிச்சூடு உலகக் கோப்பை ஆண்கள் டிராப் இறுதிப்போட்டிக்கு இந்தியாவின் பிரித்விராஜ் தொண்டைமான் தகுதி பெற்றார்.

டோக்கியோ 2020 ஒலிம்பிக் ஜோதி கோப்பை அறிமுகம்

  • 2020ம் ஆண்டு ஜப்பானின் டோக்கியோ நகரில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு ஒலிம்பிக் ஜோதி கோப்பையை டோக்கியோ ஒலிம்பிக் நிர்வாகிகள் நேற்று அறிமுகம் செய்து வைத்தனர். ஜப்பானில் பிரபலமான சக்குரா (செர்ரி பிளாசம்) வடிவத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

ஆசியா கலப்பு அணி பேட்மின்டன் சாம்பியன்ஷிப்

  • ஹாங்காங்கில் நடைபெற்ற ஆசியா கலப்பு அணி பேட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இருந்து 2-3 ரன்கள் வித்தியாசத்தில் சீன தைபேயிடம் தோற்று இந்தியா வெளியேறியது.

இந்தியா ஓபன் சூப்பர் 500 பேட்மின்டன்

  • புது தில்லியில் இந்தியாவின் சூப்பர் 500 பேட்மின்டன் தொடங்கப்பட்டது. ஆண்கள் ஒற்றையர் பிரிவில் டென்மார்க்கின் விக்டர் ஆக்ஸெல்ஸனுக்கு எதிரான இறுதி போட்டியில் கிடாம்பி ஸ்ரீகாந்த் தோல்வியுற்றார்.
  • இந்தியா ஓபன் பேட்மின்டனில், 4வது இடத்தில் உள்ள இந்தோனேசியாவை சேர்ந்த டாமி சுஜியாரோவை இந்தியாவின் சுபாங்கர் டீ தோற்க்கடித்தார்

2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் கூடுதல் விளையாட்டுகள் சேர்க்க  IOC பரிந்துரை

  • சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி (ஐ.ஓ.சி.) யின் நிர்வாக குழு, ஜூன் மாதத்தில் முழு உறுப்பினர்கள் சந்திக்கும் போது, ​​2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் கூடுதலாக breakdancing, skateboarding, sport climbing and surfing போட்டிகளை ஆகியவற்றை சேர்க்க முடிவு எடுக்கவுள்ளது.

12வது ஆசிய ஏர்கன் துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப்

  • ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் 10 மீட்டர் ஏர்பிஸ்டல் கலப்பு அணிகள் பிரிவின் இறுதி சுற்றில் இந்தியாவின் மானுபாகெர்-சவுரப் சவுத்ரி ஜோடி உலக சாதனையுடன் தங்கம் வென்றது.
  • அபிஷேக் வர்மா ஆண்கள் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் ஒற்றயர் பிரிவில் வெள்ளி பதக்கம் வென்றார்.
  • பெண்கள் அணி வெண்கல பதக்கத்தை வென்றது.

PDF Download

To Follow  Channel –கிளிக் செய்யவும்
Whatsapp குரூப்பில் சேர – கிளிக்செய்யவும்
Telegram Channel ல் சேர – கிளிக்செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!