விளையாட்டு செய்திகள் – ஜூலை 2019

0

விளையாட்டு செய்திகள் – ஜூலை 2019

இங்கு ஜூலை 2019 மாதத்தின் முக்கியமான விளையாட்டு செய்திகள் பற்றிய விவரங்களை வழங்கியுள்ளோம். இதை படித்தால் UPSC, TNPSC, SSC, RRB தேர்வுகளில் பொது அறிவு – நடப்பு நிகழ்வுகள் பிரிவில் கேட்க படும் கேள்விகளுக்கு எளிதில் பதில் அளிக்கலாம்.

மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் –ஜூலை 2019

மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் Quiz PDF – ஜூலை 2019

கிரிக்கெட்

ஐ.சி.சி கிரிக்கெட் உலகக் கோப்பை 2019.

  • லண்டனில் ஒரு வியத்தகு சூப்பர் ஓவர் வழியாக முடிவு செய்யப்பட்ட விறுவிறுப்பான இறுதிப் போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி இங்கிலாந்து அணி தனது முதல் ஐ.சி.சி கிரிக்கெட்  உலகக் கோப்பையை கைப்பற்றியது .

இந்தியாவின் அடுத்த தலைமை பயிற்சியாளரை தேர்வு செய்ய கபில் தேவ் தலைமையில் சிஏசி குழு

  • கபில் தேவ், அன்ஷுமான் கெய்க்வாட் மற்றும் சாந்தா ரங்கசாமி ஆகியோர் அடங்கிய குழு, இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக ஆசைப்படும் வேட்பாளர்களின் நேர்காணலை ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்குள் முடிக்கவுள்ளது.

ஐ.சி.சி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரை அறிமுகப்படுத்தியது

  • சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) முதல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரை 2013ம் ஆண்டு நடத்த  வேண்டும் என்று 2009 ஆம் ஆண்டு திட்டம்மிட்டது. ஆனால் அந்தத்தொடர் 2017 க்கு ஒத்திவைக்கப்பட்டு பின்னர் ரத்து செய்யப்பட்டது. இறுதியாக, ஐ.சி.சி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் அடுத்த மாதம் 1 முதல் 2021 ஏப்ரல் 30 வரை நடைபெறும் என்று  சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது.

ஊக்கமருந்து விதிமீறலுக்காக பி.சி.சி.ஐ பிருத்வி ஷாவை இடைநீக்கம் செய்தது    

  • இந்திய டெஸ்ட் தொடக்க ஆட்டக்காரர் பிருத்வி ஷா ஊக்கமருந்து விதிமீறலுக்காக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தால் (பிசிசிஐ) 2019 நவம்பர் 15 வரை இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவரது சிறுநீர் மாதிரி பரிசோதிக்கப்பட்டு அதில் டெர்பூட்டலின் இருப்பது உறுதியானதைத் தொடர்ந்து இடைநீக்கம் செய்யப்பட்டார்.

டென்னிஸ்

ஜோகோவிச் ஃபெடரரை வீழ்த்தி ஐந்தாவது விம்பிள்டன் பட்டத்தை வென்றார்

  • டென்னிஸில், சுவிஸ் டென்னிஸ் ஏஸ் ரோஜர் பெடரரை வீழ்த்தி செர்பிய நோவக் ஜோகோவிச் தனது ஐந்தாவது விம்பிள்டன் பட்டத்தை வென்றார். இது ஜோகோவிச்சின் 16 வது கிராண்ட்ஸ்லாம் மற்றும் 5 வது விம்பிள்டன் பட்டமாகும்.

கோவாவில் தேசிய டென்னிஸ் பயிற்சியாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது

  • செப்டம்பர் 20 முதல் 23 வரை கோவாவில் 10 வது தேசிய டென்னிஸ் பயிற்சியாளர்கள் கூட்டம் நடைபெறும். இந்த கூட்டம் பயிற்சியாளர்கள் (பிற விளையாட்டுகளும்), டென்னிஸ் வசதி மேலாளர்கள் ஆர்வலர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு சமீபத்திய விளையாட்டு அறிவியல் தகவல்கள் மற்றும் டென்னிஸ் கோர்ட்டின் நடைமுறையான விஷயங்கள் குறித்தும் விளக்கக்கூடியதாக இருக்கும்

ஷூட்டிங்

இளவேனில் பெண்களின் 10 மீ ஏர் ரைஃபிளில் வெள்ளி பதக்கம் வென்றார்

  • இத்தாலியில் நடைபெற்ற 30 வது நாப்போலி 2019 கோடைக்கால யுனிவர்சியேட் நிகழ்வில் இளவேனில் வாலரிவன் பெண்கள் 10 மீ ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளிப் பதக்கத்தைப் வென்றார்.

ஜூனியர் ஷூட்டிங் உலகக் கோப்பையில் விஜயவீர் தனது 3 வது தங்கத்தை வென்றார்

  • விஜயவீர் சித்து ஜெர்மனியின் சுஹ்லில் நடைபெற்று வரும் ஐ.எஸ்.எஸ்.எஃப் ஜூனியர் உலகக் கோப்பையில் மூன்றாவது தங்கப் பதக்கத்தை ராஜ்கன்வர் சிங் சந்து மற்றும் ஆதர்ஷ் சிங் ஆகியோருடன் இணைந்து ஆண்கள் 25 மீட்டர் பிஸ்டல் போட்டியில் வென்றார். இதுவரை இந்தியா  7 தங்கம் 7 வெள்ளி மற்றும் 2 வெண்கலம் என  மொத்தம் 16 பதக்கங்களுடன் பதக்கபட்டியலில் முதலிடத்தைத் தக்க வைத்துக் கொண்டது.  சீனா 5 தங்கம் 3 வெள்ளி மற்றும் 5 வெண்கலங்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.

ஐ.எஸ்.எஸ்.எஃப் ஜூனியர் உலகக் கோப்பை 2019

  • ஐ.எஸ்.எஸ்.எஃப் ஜூனியர் உலகக் கோப்பையில், ஷூட்டிங்கில் சரப்ஜோத் சிங் ஆண்கள் 10 மீட்டர் ஏர் பிஸ்டலில் தங்கம் வென்றார். ஜெர்மனியின் சுஹ்லில் நடந்த போட்டியில் இந்தியாவின் ஒன்பதாவது தங்கம் இதுவாகும். இந்தியா ஒன்பது தங்கம், ஒன்பது வெள்ளி மற்றும் நான்கு வெண்கலம் என மொத்தம் 22 பதக்கங்களுடன் பதக்க பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

ஷூட்டிங் ஜூனியர் உலகக் கோப்பையில் ஐஸ்வர்யா பிரதாப் சிங் தங்கம் வென்றார்

  • ஷூட்டிங் ஜூனியர் உலகக் கோப்பையில், ஐஸ்வர்யா பிரதாப் சிங் தோமர், சுஹ்ல் ஜெர்மனியில் நடந்த ரைபிள் 3-நிலை போட்டியின் இறுதிப் போட்டியில் ஜூனியர் உலக சாதனையுடன் தங்கம் வென்றார்.

(ஐ.எஸ்.எஸ்.எஃப்) ஜூனியர் உலகக் கோப்பை

  • ஜெர்மனியின் சுஹ்லில் நடைபெற்ற (ஐ.எஸ்.எஸ்.எஃப்) ஜூனியர் உலகக் கோப்பையின் இரண்டாம் நாளில் இந்தியா இரண்டு தங்கம் உட்பட ஆறு பதக்கங்களை வென்றுள்ளது. பெண்கள் பிரிவில் 10 மீட்டர் ஏர் ரைபிள் போட்டியில் இந்தியா இரண்டு தங்கம் மற்றும் ஒரு வெள்ளிப் பதக்கத்தைப் பெற்றது. ஆறு தங்கம், ஆறு வெள்ளி மற்றும் இரண்டு வெண்கலம் என மொத்தம் 14 பதக்கங்களுடன் இந்தியா பதக்கப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. சீனா இரண்டு தங்கம் உட்பட மொத்தம் ஆறு பதக்கங்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.

அஞ்சும் மௌத்கில் உலக சாதனை படைத்துள்ளார்

  • உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றவரான அஞ்சும் மௌத்கில் முதல் ஆளாக டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்றார். பெண்கள் ஏர் ரைபிள் பிரிவில் மெஹுலி கோஷை 1.7 புள்ளிகள் வித்தியாசத்தில் வீழ்த்தி உலக சாதனையை விட சிறப்பாக செயல்பட்டு தங்கம் வென்றார்.

மற்றவை

U -19 ஆசிய ஸ்குவாஷ் பட்டத்தை வீர் வென்றார்

  • சீனாவின் மக்காவில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய ஜூனியர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றார் வீர் சோத்ரானி. இறுதிப்போட்டியில் யஷ் ஃபடேவை வீழ்த்தி இந்தியாவின் வீர் தங்கப்பதக்கம் வென்றார். இந்த வெற்றியின் மூலம், ரவி தீட்சித் மற்றும் வேலா செந்தில்குமாருக்குப் பிறகு ஆசிய கோப்பையை வென்ற மூன்றாவது இந்தியர் என்ற பெருமையை வீர் பெற்றார்.

வைபவ் யாதவ் WBC ஆசிய பட்டத்தை வென்றார்

  • இந்திய ப்ரோ குத்துச்சண்டை வீரர் வைபவ் யாதவ் தாய்லாந்தின் பட்டாயாவில் நடைபெற்ற இறுதி போட்டியில் தாய்லாந்தின் ஃபாபெட்ச் சிங்மனாசக்கை தோற்கடித்து உலக குத்துச்சண்டை கவுன்சில் (WBC) ஆசியா வெள்ளி வெல்டர்வெயிட் சாம்பியன் பட்டத்தை வென்றார்.

21 வது காமன்வெல்த் டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்

  • 21 வது காமன்வெல்த் டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி ஜூலை 17 அன்று கட்டாக்கில் தொடங்கியது. இதில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, மலேசியா உள்ளிட்ட 12 நாடுகள் பங்கேற்கின்றன. இப்போட்டிகள் அனைத்தும் இந்த மாதம் 22 ஆம் தேதி அன்று நிறைவுபெறவுள்ளது.

இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகள் காமன்வெல்த் டேபிள் டென்னிஸ் பட்டத்தை வென்றன

  • ஒடிசாவின் கட்டாக்கில் நடைபெற்ற காமன்வெல்த் டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்பில், ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் தங்கம் வென்றதன் மூலம் இந்தியா சாதனை படைத்தது. இறுதிப் போட்டியில் 3-2 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்தை வீழ்த்தி, இந்திய ஆண்கள் அணி வெற்றி பெற்றனர். இறுதிப் போட்டியில் இந்திய மகளிர் அணி 3-0 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்தை தோற்கடித்தது.

21 வது காமன்வெல்த் டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்

  • டேபிள் டென்னிஸில், கட்டாக்கில் முடிவடைந்த 21 வது காமன்வெல்த் சாம்பியன்ஷிப் போட்டிகளில் ஏழு தங்கப் பதக்கங்களை பெற்றது ஹோஸ்ட் இந்தியா. ஏழு தங்கம், ஐந்து வெள்ளி மற்றும் மூன்று வெண்கலங்களுடன் இந்திய டேபிள் டென்னிஸ்  வீரர்கள் முதலிடத்தில் உள்ளனர். இங்கிலாந்து இரண்டு வெள்ளி மற்றும் மூன்று வெண்கல பதக்கங்களை வென்றது. சிங்கப்பூருக்கு 6 வெண்கலப் பதக்கமும் , மலேசியா மற்றும் நைஜீரியா தலா 1 வெண்கலமும் பெற்றன.

பிராங்க் லம்பார்ட் செல்சியா கால்பந்து அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்

  • பிராங்க் லம்பார்ட் செல்சியா கால்பந்து அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார், மவுரிசியோ சர்ரிக்கு பிறகு முன்னாள் இங்கிலாந்து வீரரான பிராங்க் நியமிக்கப்பட்டுள்ளார்.

போஸ்னன் தடகள கிராண்ட் பிரிக்ஸ்

  • போலந்தில் நடைபெற்ற போஸ்னான் தடகள கிராண்ட் பிரிக்ஸில் 20 வயதுக்குட்பட்ட பிரிவில் உலக சாம்பியனான ஹிமா தாஸ் பெண்கள் 200 மீ ஓட்டத்தில் தங்கம் வென்றார். ஆண்கள் 200 மீட்டர் ஓட்டத்தில் முகமது அனஸும் ம், ஆண்கள் 400 மீட்டர் ஓட்டத்தில் கே.எஸ். ஜீவனும், ஆண்களுக்கான ஷாட் புட்டில் ஆசிய சாம்பியனான தாஜிந்தர் பால் சிங் டூர் மற்றும் பெண்கள் 200 மீட்டர் ஓட்டத்தில் வி.கே. விஸ்மயா தலா வெண்கலப் பதக்கத்தை வென்றனர்.

வில்வித்தை உலகக் கோப்பை ஸ்டேஜ் IV

  • பெர்லினில் நடைபெறும் வில்வித்தை போட்டியில், இந்தியாவின் அதுல் வர்மா மற்றும் லைஷ்ராம் பம்பாய்லா தேவி கலப்பு இரட்டையர்கள் பிரிவில் வெண்கல பதக்கச்சுற்றிற்கு தகுதி பெற்றனர். இதன்மூலம் இந்தியாவுக்கான பதக்க வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. ஐந்தாவது இடத்தில் உள்ள இந்திய ஜோடி அரையிறுதியில் கொரியாவிடம் 2-6 என்ற கணக்கில் தோல்வியடைந்தது, இதனால் ஏழாம் இடத்தில் உள்ள இத்தாலி இணையுடன் வெண்கல பதக்கதிற்கான போட்டியில் மோதவுள்ளது.

நாப்போலி 2019 சம்மர் யுனிவர்சியேட்

  • இத்தாலியின் நாப்போலியில் நடந்த உலக யுனிவர்சியேட்100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் இந்தியாவின் டூட்டீ சந்த் தங்கப்பதக்கம் வென்றுள்ளார். சுவிட்சர்லாந்தின் டெல் பொன்டே வெள்ளி வென்றார், ஜெர்மனியின் லிசா குவேய் வெண்கலத்தை கைப்பற்றினார்.

போலந்தில் குட்னோ தடகளம்

  • போலந்தில் நடைபெறும் குட்னோ தடகளத்தொடரில் பெண்கள் 200 மீட்டர் ஓட்ட பந்தயத்தில் இந்தியாவின் நட்சத்திர ஓட்டப்பந்தய வீராங்கனை ஹீமா தாஸ் முதலிடம் பிடித்து தனது இரண்டாவது சர்வதேச தங்கத்தை வென்றார். ஹீமா97 வினாடிகளில் பந்தய தூரத்தைக்கடந்து தங்கம் வென்றார், வி.கே. விஸ்மயா 24.06 வினாடிகளில் கடந்து வெள்ளி வென்றார். ஆண்கள் 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் 21.18 வினாடிகளில் பந்தய தூரத்தைக்கடந்து தேசிய சாதனை படைத்த வீரர் முகமது அனாஸ் தங்கம் வென்றார்.

காமன்வெல்த் பளுதூக்குதல் சாம்பியன்ஷிப்

  • அப்பியா சமோவாவில் நடைபெற்ற காமன்வெல்த் பளுதூக்குதல் சாம்பியன்ஷிப்பின் இரண்டாவது நாளிலும் இந்திய பளுதூக்குபவர்கள் தங்களது அற்புதமான நிகழ்ச்சியைத் தொடர்ந்ததால், மூத்த பெண்கள் பிரிவில் ராக்கி ஹால்டர் மற்றும் டேவிந்தர் கவுர் தலா தங்கப் பதக்கம் வென்றனர். ஜூனியர் மற்றும் இளைஞர் பிரிவுகளில் இந்தியா மேலும் ஐந்து தங்கப் பதக்கங்களை வென்றது.

 காமன்வெல்த் பளுதூக்குதல் சாம்பியன்ஷிப்

  • சமோவாவில் நடைபெற்ற காமன்வெல்த் பளுதூக்குதல் சாம்பியன்ஷிப்பின் தொடக்க நாளில் முன்னாள் உலக சாம்பியனான மீராபாய் சானு தங்கம் வென்றார்.சீனியர், ஜூனியர் மற்றும் இளைஞர் பிரிவுகளில் எட்டு தங்கம், மூன்று வெள்ளி மற்றும் இரண்டு வெண்கல பதக்கங்கள் என்று மொத்தம் 13 பதக்கங்களை இந்திய அணி வென்றது.

காமன்வெல்த் பளுதூக்குதல் சாம்பியன்ஷிப்

  • 67 கிலோ பிரிவில் தன்னுடைய சிறப்பான திறமையை வெளிப்படுத்திய 16 வயதான ஜெர்மி தங்கப்பதக்கம் வென்றார்.தேசிய சாம்பியனான அச்சிந்தா ஷூலி காமன்வெல்த் பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் ஆண்கள் 73 கிலோ எடை பிரிவில் மொத்தம் 305 கிலோ எடையை தூக்கி தங்கம் வென்றார். ஷூலி ஜூனியர் பட்டத்தயும் வென்றார், மற்ற இந்திய லிஃப்டர்கள் தொடர்ந்து நிகழ்ச்சியயை ஈர்க்கக்கூடிய வகையில் நான்கு தங்கம், இரண்டு வெள்ளி மற்றும் ஒரு வெண்கலப் பதக்கத்தை வென்றனர் .

காமன்வெல்த் சாம்பியன்ஷிப்பில் லிஃப்டர் அஜய் சிங் தங்கம் வென்றார்

  • சமோவாவில் உள்ள அபியா நகரில் நடந்த காமன்வெல்த் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய லிஃப்டர் அஜய் சிங் 81 கிலோ எடை பிரிவில் தங்கம் வென்றார். மேலும் 81 கிலோ பிரிவில் உள்ள மற்ற வீரரான பப்புல் சாங்மாய் மொத்தம் 313 கிலோ எடையை தூக்கி வெள்ளிப் பதக்கம் வென்றார்.

உலக டூர் பிளாட்டினம் ஆஸ்திரேலிய ஓபன்

  • டேபிள் டென்னிஸில், உலக டூர் பிளாட்டினம் ஆஸ்திரேலிய ஓபனில் இந்திய ஜோடி ஜி.சத்யன் மற்றும் அந்தோணி அமல்ராஜ் ஜோடி வெண்கல பதக்கத்தை வென்றது.ஆஸ்திரேலிய ஓபனில் இந்தியாவின் முதல் பதக்கம் இதுவாகும்.

பிரிட்டிஷ் கிராண்ட் பிரிக்ஸ்

  • லூயிஸ் ஹாமில்டன் சில்வர்ஸ்டோன் சுற்றில் தனது ஆறாவது பிரிட்டிஷ் கிராண்ட் பிரிக்ஸை வென்றார், இது 2019 இல் அவரது பத்து பந்தயங்களில் ஏழாவது வெற்றியாகும்.

 யாசர் டோகு சர்வதேச மல்யுத்தம்.

  • இஸ்தான்புல்லில் நடைபெற்ற யாசர் டோகு சர்வதேச மல்யுத்தப் போட்டியில் 53 கிலோ எடை பிரிவில் இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகாட் தங்கம் வென்றுள்ளார். சீமா (50 கிலோ) மற்றும் மஞ்சு (59 கிலோ) அவர்களது பிரிவில் தங்கம் வென்ற பிறகு இந்தியாவுக்கான பெண்கள் போட்டியில் இது மூன்றாவது தங்கமாகும்.

 ஹிமா தாஸ் 15 நாட்களில் நான்காவது தங்கம் வென்றார்

  • செக் குடியரசில் நடந்த தாபோர் தடகளக் கூட்டத்தின் 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வென்று, ஸ்டார் இந்தியன் ஸ்ப்ரிண்டர் ஹிமா தாஸ் பதினைந்து நாட்களில் தனது நான்காவது தங்கப் பதக்கத்தை வென்றார்.

டோக்கியோ ஒலிம்பிக் டெஸ்ட் போட்டியில் தீபிகா குமாரி வெள்ளி வென்றார்

  • 2020 ஆம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக் டெஸ்ட் போட்டியில் இந்தியாவில் முதலிடத்தில் உள்ள வில்வித்தை வீராங்கனையான தீபிகா குமாரி வெள்ளிப் பதக்கம் வென்றார். ஜூன், 2018 இல் சால்ட் லேக் சிட்டியில் நடந்த உலகக் கோப்பையின் மூன்றாம் கட்டத்தில் தங்கம் வென்றதுக்கு பிறகு உலக போட்டிகளில் தீபிகாவின் முதல் தனிநபர் இறுதிப் போட்டி இதுவாகும்.

AIFF கோல்டன் பேபி லீக்ஸ் கையேடு

  • அகமதாபாத்தில் நடைபெற்ற இன்டர்காண்டினன்டல் கோப்பையின் ஒரு பகுதியாக அகில இந்திய கால்பந்து சம்மேளனத்தின் கோல்டன் பேபி லீக்ஸ் 2019-20 கையேட்டை விளையாட்டுத் துறை அமைச்சர் கிரன் ரிஜிஜு வெளியிட்டார். இந்த கையேடு வெளியீட்டில் ‘AIFF பேபி லீக்’களின் பெயரை’ AIFF கோல்டன் பேபி லீக்ஸ் ‘என்று மறுபெயரிடப்பட்டது, 6 வயது முதல் 12 வயதுக்குட்பட்ட ஆண் மற்றும் பெண் குழந்தைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவுள்ளது.

கூட்டமைப்பு கோப்பை 2020 ஜனவரியில் நடைபெற உள்ளது

  • பாண்டிச்சேரி கூடைப்பந்து சங்கம் (பிபிஏ) கூட்டமைப்பு கோப்பையை இருபது ஆண்டுகளுக்குப் பிறகு 2020 ஜனவரி மூன்றாவது வாரத்தில் நடத்தவுள்ளது.

பிருது குப்தா நாட்டின் 64 வது கிராண்ட் மாஸ்டர் ஆவார்

  • பிருது குப்தா நாட்டின் 64 வது கிராண்ட்மாஸ்டர் ஆனார். போர்த்துகீசிய லீக்கின் நான்காவது சுற்றைத் தொடர்ந்து ஒரு GM ஆக இருக்க வேண்டிய அனைத்து தொழில்நுட்ப நிபந்தனைகளையும் 15 ஆண்டு நான்கு மாதம் மற்றும் 10 நாட்கள் ஆன பிருது குப்தா பூர்த்திசெய்தார்.

400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் ஹிமா தாஸ் தங்கம் வென்றார்

  • செக் குடியரசின் நோவ் மெஸ்டோவில் நடைபெற்ற 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்திய ஸ்ப்ரிண்டர் ஹிமா தாஸ் 52.09 வினாடிகளில் பந்தய தூரத்தைக்கடந்து தங்கப்பதக்கம் வென்றார். கடந்த இருபது நாட்களில் ஹிமா தாஸ் வெல்லும் ஐந்தாவது தங்கப் பதக்கம் இதுவாகும். இந்த மாத தொடக்கத்தில் போலந்தில் நடந்த போஸ்னன் தடகள கிராண்ட் பிரிக்ஸ் மற்றும் குட்னோ தடகள சந்திப்பின் 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் ஹிமா ஏற்கனவே தங்கம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தோனேசியா ஓபன் பைனல் பேட்மிண்டன்

  • ஜகார்த்தாவில் நடைபெற்ற இந்தோனேசியா ஓபன் BWF டூர் சூப்பர் 1000 பேட்மிண்டன் போட்டியின் இறுதிப் போட்டியில் பி வி சிந்து அகானே யமகுச்சியிடம் தோல்வி அடைந்தார்.

மிஸ்டர் தெற்காசியா பட்டத்தை வென்றார் இந்தியாவின் பாடிபில்டர் ரவீந்தர் மாலிக் 

  • இந்திய பாடிபில்டர் ரவீந்தர் குமார் மாலிக் மிஸ்டர் தெற்காசியா பட்டத்தை வென்றார். காத்மாண்டுவில் நடைபெற்ற 12 வது தெற்காசிய உடற்கட்டமைப்பு மற்றும் உடலமைப்பு விளையாட்டு சாம்பியன்ஷிப்பில் ஒட்டுமொத்த சாம்பியனாக முடி சூட்டப்பட்டார் ரவீந்தர் மாலிக். அணிகளுக்கான பிரிவில் சாம்பியன்ஷிப்பை ஆப்கானிஸ்தான் வென்றது. இந்தியா நான்கு தங்கம், ஐந்து வெள்ளி மற்றும் ஒரு வெண்கல பதக்கத்தை பெற்றது குறிப்பிடத்தக்கது.

46 வது பெண்கள் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி.

  • முன்னாள் ஆசிய சாம்பியனும், இரண்டாம் நிலையில் உள்ள பக்தி குல்கர்னி ஏழாவது சுற்றில் முதல் இடத்தில உள்ள சௌமியா சுவாமிநாதனை தோற்கடித்து 46 வது தேசிய மகளிர் சதுரங்க சாம்பியன்ஷிப்பில் 6.5 புள்ளிகளுடன் ஜெயித்துள்ளார்.

அபய், தன்வி வங்காள ஓபன் ஸ்குவாஷ் பட்டங்களை வென்றனர்

  • கொல்கத்தாவில் நடைபெற்ற ஆறாவது வங்காள ஓபன் ஸ்குவாஷ் போட்டியில் முறையே ஆண்கள் மற்றும் பெண்கள் பட்டங்களை தமிழ்நாட்டின் அபய் சிங் மற்றும் ஆசிய விளையாட்டு பதக்கம் வென்ற தன்வி கன்னா வென்றனர்.

தேசிய விளையாட்டுக்களை நடத்த கோவா அரசு புதிய தேதிகளை கேட்டுள்ளது.

  • தேசிய விளையாட்டுக்களை நடத்துவதற்கு கோவா அரசு புதிய தேதிகளை கோரியுள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளில் விளையாட்டுகளை நடத்துவதற்கான காலக்கெடுவை அடிக்கடி தவறவிட்டதற்காக கோவா அரசுக்கு ஐ.ஓ.ஏ சமீபத்தில் அபராதம் விதித்தது. முன்னதாக தேசிய விளையாட்டுக்கள் மார்ச்-ஏப்ரல் 2019 இல் நடத்த திட்டமிடப்பட்டிருந்தன, ஆனால் மக்களவை தேர்தல்கள், மாநிலத்தில் இடைத்தேர்தல் மற்றும் எச்.எஸ்.சி தேர்வுகள் காரணமாக நவம்பர் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது.

டோக்கியோ 2020 ஒலிம்பிக் மறுசுழற்சி செய்யப்பட்ட மின்னணுக் கழிவுகளில்  தயாரிக்கப்பட்ட பதக்கங்களை வெளியிட்டது

  • டோக்கியோ ஒலிம்பிக் அமைப்பாளர்கள் விளையாட்டு வீரர்களின் “ஆற்றலை” பிரதிபலிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட பதக்கங்களை வெளியிட்டனர். பழைய மின்னணு கழிவுகளில் சேகரிக்கப்பட்ட மறுசுழற்சி செய்யப்பட்ட பொருட்களிலிருந்து அவை தயாரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அக்டோபர் 20 முதல் இந்திய குத்துச்சண்டை லீக்

  • இந்திய குத்துச்சண்டை லீக் அக்டோபர் 20 முதல் நவம்பர் 9 வரை மூன்று இடங்களில் நடைபெற உள்ளது. முன்னணி இந்திய குத்துச்சண்டை வீரர்களான எம்.சி.மேரி கோம், அமித் பங்கல், கவுரவ் பிதுரி மற்றும் இவர்களுடன் 50 சிறந்த வெளிநாட்டு குத்துச்சண்டை வீரர்கள் இந்த இந்திய குத்துச்சண்டை லீக்கில் அதிரடியாக களம் இறங்கவுள்ளனர் .

2020, 2024 ஒலிம்பிக்கிற்கான ஏற்பாடுகளை சீர்படுத்த உயர் மட்ட குழு அமைக்கப்பட்டுள்ளது

  • 2020 மற்றும் 2024 ஒலிம்பிக்கிற்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைத்து சீர்படுத்த விளையாட்டுத் துறை அமைச்சர் கிரென் ரிஜிஜூவின் தலைமையில் 10 பேர் கொண்ட உயர் மட்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

தாய்லாந்து ஓபன் போட்டியில் இந்திய குத்துச்சண்டை வீரர்கள் 8 பதக்கங்களை வென்றனர்

  • இந்திய குத்துச்சண்டை வீரர்கள் பாங்காக்கில் நடந்த தாய்லாந்து ஓபன் போட்டியில் ஒரு தங்கம், நான்கு வெள்ளி மற்றும் மூன்று வெண்கலத்துடன் மொத்தம் எட்டு பதக்கங்களை வென்றனர்.

கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு அடுத்த ஆண்டு குவஹாத்தியில் நடைபெற உள்ளது

  • கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டியின் மூன்றாம் பதிப்பு அடுத்த ஆண்டு குவஹாத்தியில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விளையாட்டுத்துறை அமைச்சர் கிரன் ரிஜிஜு இந்த முடிவை அறிவித்தார்.

ஜெர்மன் கிராண்ட் பிரிக்ஸ் பட்டம் வென்றார் மேக்ஸ் வெர்ஸ்டாப்பன்

  • ரெட் புல்லின் ஓட்டுனர் மேக்ஸ் வெர்ஸ்டாப்பன் ஹோக்கன்ஹெய்மில் நடைபெற்ற ஜெர்மன் கிராண்ட் பிரிக்ஸ் பட்டத்தை வென்றார். வெர்ஸ்டாப்பன் ஃபார்முலா ஒன் சீசனின் இரண்டாவது பட்டத்தை வென்றுள்ளார்.

ஜனாதிபதி கோப்பை குத்துச்சண்டை போட்டி

  • இந்தோனேசியாவின் லாபுவன் பாஜோவில் நடைபெற்ற 23 வது ஜனாதிபதி கோப்பை குத்துச்சண்டை போட்டியில் 51 கிலோ பிரிவில் ஆறு முறை உலக சாம்பியனான மேரி கோம், மற்றும் 60 கிலோ பிரிவில் சிம்ரன்ஜித் கவுர் தலா ஒரு தங்கப் பதக்கத்தை வென்றனர்.

46வது தேசிய பெண்கள் சதுரங்க சாம்பியன்ஷிப் போட்டி

  • நடப்பு சாம்பியனான ஏர் இந்தியாவின் பக்தி குல்கர்னி 11 வது மற்றும் இறுதி சுற்றில் ஆந்திராவின் பிரத்யுஷா போடாவுக்கு எதிராக சமன் செய்து 46 வது தேசிய பெண்கள் சதுரங்க சாம்பியன்ஷிப்பை வென்றார்.

தலிலா முஹம்மது தேசிய போட்டியில் 400 மீ தடைகள் ஓட்டத்தில் உலக சாதனையை முறியடித்தார்

  • யு.எஸ். சாம்பியன்ஷிப் போட்டிகளில் 400 மீட்டர் தடைகள் தாண்டும் ஓட்டத்தை 52.20 வினாடிகளில் ஓடி 16 வயதான தலிலா முஹம்மது உலக சாதனையை முறியடித்தார்.

தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டி

  • தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டியின் மெயின் டிரா பாங்காக்கில் தொடங்கபடவுள்ளது. இந்தியாவின் சார்பாக சாய்னா நேவால், சாய் பிரனீத், கிடாம்பி ஸ்ரீகாந்த், எச் எஸ் பிராணோய், பருப்பள்ளி காஷ்யப் ஆகியோர் இப்போட்டியின் தொடக்க ஆட்டத்தில் விளையாட உள்ளனர்.

Download PDF

விளையாட்டு செய்திகள் – மே 2019

To Follow  Channel – Click Here

Whatsapp குரூப்பில் சேர – கிளிக்செய்யவும்
Telegram Channel ல் சேர – கிளிக்செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!