விளையாட்டு செய்திகள் – ஜனவரி 2019

0

விளையாட்டு செய்திகள் – ஜனவரி 2019

மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் – ஜனவரி 2019
ஜனவரி மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் Quiz PDF Download

இங்கு ஜனவரி மாதத்தின் விளையாட்டு செய்திகள் பற்றிய விவரங்களை வழங்கியுள்ளோம். இது அணைத்து வகையான போட்டித்தேர்வுகளுக்கும் முக்கியமான விவரங்கள் ஆகும். இதை படித்தால் UPSC, TNPSC, SSC, RRB தேர்வுகளில் பொது அறிவு – நடப்பு நிகழ்வுகள் பிரிவில் கேட்க படும் கேள்விகளுக்கு எளிதில் பதில் அளிக்கலாம்.

கிரிக்கெட்

இந்தியா Vs ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர்

  • இந்தியா 2-1 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியாவை முதல் முறையாக ஆஸ்திரேலிய மண்ணில் வீழ்த்தி தொடரை வென்றது. ஆஸ்திரேலியாவில் ஒரு டெஸ்ட் தொடரை வென்ற முதல் இந்தியா மட்டும் ஆசியக் கேப்டன் எனும் சாதனை படைத்தார் விராட் கோஹ்லி.

ஆஸ்திரேலியா டெஸ்டில் வெற்றி பெற்ற இந்திய அணி உறுப்பினர்களுக்கு பி.சி.சி.. பரிசு அறிவிப்பு

  • இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ) ஆஸ்திரேலிய மண்ணில் முதல் டெஸ்ட் கிரிக்கெட் தொடரை வென்ற இந்தியாவின் அனைத்து உறுப்பினர்களுக்கும் ஒரு போட்டிக்கு தலா ரூ. 15 லட்சம் வீதம் ரொக்கப் பரிசுகளை அறிவித்தது.

எம் எஸ் தோனி ஒரு நாள் போட்டியில் 10,000 ரன்கள் அடித்து சாதனை

  • இந்தியாவின் முன்னாள் கேப்டனும், மூத்த வீரருமான எம் எஸ் தோனி ஒரு நாள் போட்டியில் 10,000 ரன்களை கடந்து சாதனை படைத்துள்ளார். சச்சின் டெண்டுல்கர், சௌரவ் கங்குலி, ராகுல் டிராவிட், விராட் கோலி ஆகியோருக்கு அடுத்து 10 ஆயிரம் ரன்களை கடந்த 5-வது இந்திய வீரர் தோனி ஆவார்.

ஐசிசி ஆண்கள் டி20 உலக கோப்பை 2020 அட்டவணை

  • சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) ஐசிசி டி 20 உலகக் கோப்பை 2020 ஆஸ்திரேலியாவில் நடைபெறவிருக்கிறது, இதற்கான அட்டவணை வெளியிடப்பட்டது. 

ஐசிசி டெஸ்ட்,மற்றும் ஒருநாள் கனவு அணியில் கேப்டனாக விராட் கோலி

  • சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் 2018 ஆண்டின் ஆண்களுக்கான டெஸ்ட் மற்றும் ஒருநாள் கனவு அணிகள் விவரத்தை வெளியிட்டுள்ளது. இதில் விராத் கோஹ்லி கேப்டன் மற்றும் பேட்ஸ்மேனாக தேர்வுசெய்யப்பட்டுள்ளார்.

பி.சி.சி.. ரூ 20 லட்சம் ஊக்க ஊதியம் அறிவித்துள்ளது

  • டெஸ்ட் தொடர் வரலாற்றில் முதல்முறையாக ஆஸ்திரேலிய அணியை அதன் சொந்த மண்ணில் இந்தியா வீழ்த்தியது. அதற்கான ஊக்க ஊதியமாக ரூ 20 லட்சத்தை இந்திய கிரிக்கெட் மூத்த தேர்வு குழு உறுப்பினர்களுக்கு வழங்க பி.சி.சி.ஐ. அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

வேகமாக 100 விக்கெட்டுகளை எட்டி ஷமி சாதனை

  • இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் முதல் விக்கெட்டை வீழ்த்தியபோது, சர்வதேச ஒருநாள் அரங்கில் தனது 100-வது விக்கெட்டை வீழ்த்திய மைல் கல்லை எட்டினார்.
  • இதன் மூலம் 100 விக்கெட்டுகளை மிகவேகமாகத் தனது 56-வது போட்டியில் அடைந்த இந்திய வீரர் எனும் சிறப்பை முகமது ஷமி பெற்றார்.

சர்வதேச கிரிக்கெட்டில் பந்து வீச அம்பத்தி ராயுடுவுக்கு ஐசிசி தடை விதித்தது

  • இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவராகிய அம்பத்தி ராயுடுவின் பந்துவீச்சு விதிமுறைக்கு புறம்பாக இருப்பதால் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் பந்து வீச ஐசிசி தடை விதித்துள்ளது.

பி.சி.சி.., ஹார்திக் பாண்டியா, கே.எல்.ராகுல் மீதான தடையை ரத்து செய்தது

  • இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் நிர்வாகிகள் குழு (பி.சி.சி.ஐ.) ஹார்திக் பாண்டியா மற்றும் கே.எல். ராகுல் மீதான தடையை ரத்து செய்தது.

ஹாக்கி

இந்திய ஆண்கள் ஹாக்கி அணி பயிற்சியாளர் பதவி நீக்கம்

  • இந்திய ஆண்கள் ஹாக்கி பயிற்சியாளர் ஹரேந்திர சிங் பதவியில் இருந்து நீக்கப்பட்டு ஜூனியர் அணியை வழிநடத்தும் பணியை தேசிய கூட்டமைப்பு வழங்கியது. 

டென்னிஸ்

ஏடிபி டூர் டென்னிஸ்

  • புனேயில் நடைபெற்ற டாடா ஓபன் மகாராஷ்டிராவில் இந்திய ஜோடி ரோஹன் போபண்ணா மற்றும் டிவிஜ் ஷரன் ஆகியோர் தமது முதல் ஏடிபி டூர் டென்னிஸ் பட்டத்தை வென்றனர்.

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்

  • மெல்போர்னில் நடைபெற்ற ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் நவோமி ஒசாகா 7-6, 5-7, 6-4 என்ற செட் கணக்கில் பெட்ரா கிவிடோவாவை தோற்கடித்தார்.
  • 2001ற்குப்பிறகு தொடர்ந்து இரு கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்ற முதல் வீரராகினார் ஜப்பானின் நவோமி ஒசாகா. உலக டென்னிஸ் தரவரிசைப் பட்டியலில் முதல் இடம் பிடித்த ஆசிய வீரர் எனும் சாதனை படைத்தார் நவோமி ஒசாகா.
  • 7 வது ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பட்டத்தை ரபேல் நடாலை வீழ்த்தி நோவக் ஜோகோவிக் வென்றார்.

சர்வதேச டென்னிஸ் கூட்டமைப்பு போட்டிகள்

  • சிங்கப்பூரில் நடைபெற்ற சர்வதேச டென்னிஸ் கூட்டமைப்பின் 25,000 டாலர் மதிப்பிலான பெண்கள் போட்டியில் இந்தியாவின் அங்கிதா ரெய்னா வெற்றி பெற்றுள்ளார்.

கால்பந்து

2019 ஆப்பிரிக்க கோப்பை கால்பந்து  போட்டி எகிப்தில் நடைபெறவுள்ளது

  • 2019 ஆம் ஆண்டின் ஆப்பிரிக்க கோப்பை கால்பந்து போட்டி எகிப்தில் நடைபெறவுள்ளது. ஐந்தாவது முறையாக ஆப்பிரிக்க கோப்பை கால்பந்து போட்டி எகிப்தில் நடக்க உள்ளது.

பெண்கள் கால்பந்து

  • இந்திய பெண்கள் கால்பந்து அணி இந்தோனேசியாவிடம் 2வது வெற்றியைத் தட்டிச் சென்றது, ஜகார்த்தாவில் இரண்டாவது நட்பு ரீதியான போட்டியில் 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது.

AFC ஆசியா கோப்பை கால்பந்து

  • ஆசிய கோப்பை கால்பந்து போட்டியில் இந்தியா 0-1 என்ற கணக்கில் பஹ்ரைனிடம் தோல்வியைத் தழுவி தொடரில் இருந்து வெளியேறியது. 

சதுரங்க போட்டி

டெல்லி சர்வதேச சதுரங்க கிராண்ட்மாஸ்டர் ஓபன்

  • டெல்லி சர்வதேச சதுரங்க கிராண்ட்மாஸ்டர் ஓபன் பட்டத்தை வென்றார் டி குகேஷ். இதன்மூலம் இந்தியாவின் இளைய கிராண்ட்மாஸ்டர் ஆனார்.

டாட்டா ஸ்டீல் சதுரங்க போட்டி

  • நெதர்லாந்தில் நடைபெறும் டாட்டா ஸ்டீல் சதுரங்க போட்டியில் ஐந்து முறை உலக சாம்பியனான விஸ்வநாதன் ஆனந்த் எட்டாவது சுற்றில் அஜர்பைஜானின் ஷகிரியார் மாமடயாரோவை வென்றார்.

வேலம்மாள்ஏஐசிஎஃப் சர்வதேச பெண்கள் கிராண்ட் மாஸ்டர் சுற்றுராபின் சதுரங்கப் போட்டி

  • வேலம்மாள்-ஏஐசிஎஃப் சர்வதேச பெண்கள் கிராண்ட் மாஸ்டர் சுற்று-ராபின் செஸ் போட்டி சென்னையில் தொடங்க உள்ளது.

டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் சதுரங்கப்போட்டி

  • விஸ்வநாதன் ஆனந்த் விதித் குஜ்ராத்தியுடன் நடந்த போட்டியை சமன் செய்து மூன்றாம் இடம் பிடித்தார்.

குத்துச்சண்டை

மூன்றாவது பெண்கள் தேசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்

  • கர்நாடகாவின் விஜயநகரில் மூன்றாவது பெண்கள் தேசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி நடைபெறுகிறது. தமிழ்நாட்டின் எஸ்.கலைவணி மற்றும் தெலுங்கானாவின் நிக்கத் சரீன் ஆகியோர் பெண்கள் தேசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்குள் நுழைந்தனர்.

பேட்மிண்டன்

மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்

  • கோலாலம்பூரில் நடைபெற்று வரும் அரையிறுதிப் போட்டியில் ஸ்பெயின் வீரர் கரோலினா மரின் (ஸ்பெயின்) இடம் 16-21, 13-21 என்ற செட் கணக்கில் சாய்னா நேவால் தோல்வியடைந்து தொடரை விட்டு வெளியேறினார். 

பிரீமியர் பேட்மிண்டன் லீக்

  • பெங்களூரு ராப்டர்ஸ் மும்பை ராக்கெட்டை தோற்கடித்து தனது முதல் பிரீமியர் பேட்மிண்டன் லீக் பட்டத்தை வென்றது.

இந்தோனேசியா மாஸ்டர்ஸ் போட்டி

  • ஜகார்தாவில் இந்தோனேசியா மாஸ்டர்ஸ் பூப்பந்தாட்டம் தொடங்கியது.
  • மூன்று முறை உலக சாம்பியனான கரோலினா மரின் காலில் காயம் காரணமாக இறுதிப்போட்டியில் இருந்து விலகியதால் சாய்னா நேவால் தனது முதல் இந்தோனேசிய மாஸ்டர்ஸ் பட்டத்தை வென்றார்.

கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு

  • புனேயில் நடைபெறும் கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டில், பத்து வயதான அபினவ் ஷா துப்பாக்கிச்சூடு போட்டியில் தங்கம் வென்று இளம் வயதில் சாதனை. 10 மீட்டர் ஏர் ரைஃபில் கலப்பு அணி பிரிவில் மெஹுலி கோசுடன் இணைந்து மேற்கு வங்காளம் வெற்றி பெற உதவினார். புனேயில் நடைபெற்ற கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் நடந்து முடிந்தன. ஒட்டுமொத்த கோப்பையை மகாராஷ்டிரா கைப்பற்றியது.
  • 1) மகாராஷ்டிரா 228 பதக்கம் 2) ஹரியானா 178 பதக்கம் 3) டெல்லி 136 பதக்கம்.

மற்றவை

இந்திய பாராபளுதூக்கும் வீரருக்கு 4 ஆண்டுகள் தடை

  • இரண்டாவது முறையாக ஊக்க மருந்து பயன்படுத்திய விதிமீறலுக்காக சர்வதேச பாராலிம்பிக் கமிட்டி இந்திய பாரா-பளுதூக்கும் வீரர் விக்ரம்சிங்கிற்கு 4 ஆண்டுகள் தடை விதித்தது.

சீனியர் தேசிய ஜூடோ சாம்பியன்ஷிப்

  • இமாச்சலப் பிரதேசம் 5 வது இந்திய ரிசர்வ் பட்டாலியன் பிரிவைச் சார்ந்த மகளிர் தலைமைக்காவலர் ராணி விசாகாப்பட்டினத்தில் நடைபெற்ற சீனியர் தேசிய மகளிர் ஜூடோ சாம்பியன்ஷிப்பில் தங்கப் பதக்கம் வென்றார்.

அமெச்சூர் கோல்ஃப் சாம்பியன்ஷிப்

  • இந்தியாவின் கார்திக் சர்மா ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற நியூ சவுத் வேல்ஸ் ஆண்கள் அமெச்சூர் கோல்ஃப் சாம்பியன்ஷிப் போட்டியில் வென்றார். 

80வது தேசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்

  • 80வது தேசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் கட்டாக்கில் உள்ள ஜவஹர்லால் நேரு உள்ளரங்கத்தில் துவங்கியது. ஒடிசா மாநில டேபிள் டென்னிஸ் அசோசியேஷன் (OSTTA) 18 ஆண்டு கால இடைவெளிக்குப்பிறகு இந்த போட்டியை நடத்துகிறது.

உள்ளரங்க படகோட்டுதலில் உலக சாதனை

  • ஆசிய கோப்பையில் தங்க பதக்கம் வென்ற ஷகில் அகமது, கொல்கத்தாவில் 40 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கான பிரிவில்10 மணி நேரத்தில் ஒரு லட்சம் மீட்டர் மாதிரி தூரத்தை கடந்து முடித்ததன் மூலம் உலக சாதனை படைத்தார்.

மும்பை மராத்தான்

  • கென்யாவின் காஸ்மாஸ் லாகட் மற்றும் எத்தியோப்பியாவின் வொர்க்நேஷ் அலமு ஆகியோர் மும்பையில் நடைபெற்ற டாடா மும்பை மராத்தான் போட்டியில் ஆண்கள் மற்றும் பெண்களின் பிரிவில் வென்றனர்.

சர்வதேச பளு தூக்குதல் கூட்டமைப்பு சஞ்சிதா சானு மீதான தடையை ரத்து செய்தது

  • 2018 ஆம் ஆண்டு கோல்டு கோஸ்டில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில், சஞ்சீதா 53 கிலோ பிரிவில் தங்கம் வென்றார். ஆனால் ஊக்க மருந்து பயன்படுத்தியதாக அவருக்கு தடை விதிக்கப்பட்டது. காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற குமுக்சம் சஞ்சிதா சானு மீது விதித்த இந்தத் தடையை ஜனவரி 23 அன்று சர்வதேச பளு தூக்குதல் கூட்டமைப்பு (IWF) ரத்து செய்தது.

PDF Download

2018 முக்கிய தினங்கள் PDF Download

நடப்பு நிகழ்வுகள்  2018
 Whats App Group -ல் சேர – கிளிக் செய்யவும்
Telegram Channel    கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!