விளையாட்டு செய்திகள் – பிப்ரவரி 2019

0

விளையாட்டு செய்திகள் – பிப்ரவரி 2019

இங்கு பிப்ரவரி மாதத்தின் விளையாட்டு செய்திகள் பற்றிய விவரங்களை வழங்கியுள்ளோம். இதை படித்தால் UPSC, TNPSC, SSC, RRB தேர்வுகளில் பொது அறிவு – நடப்பு நிகழ்வுகள் பிரிவில் கேட்க படும் கேள்விகளுக்கு எளிதில் பதில் அளிக்கலாம்.

மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் – பிப்ரவரி 2019
பிப்ரவரி மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் Quiz PDF Download

கிரிக்கெட்

200 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய முதல் மகளிர் கிரிக்கெட் வீராங்கணை

  • இந்திய கேப்டன் மித்தாலி ராஜ் 200 ஒருநாள் போட்டிகளில் விளையாடும் முதல் பெண் கிரிக்கெட் வீரர் எனும் சாதனை படைத்தார்.

இந்தியா Vs நியூசிலாந்து ஒருநாள் தொடர்

  • ஹாமில்டனில் நடைபெற்ற மூன்றாவது மற்றும் கடைசி பெண்கள் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் எட்டு விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து இந்தியாவை வென்றது. முதல் இரண்டு போட்டியில் வென்றதால் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.

ரஞ்சி கோப்பை

  • சவுராஷ்டிரா அணியை 78 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி விதர்பா அணி ரஞ்சி கோப்பையை தொடர்ந்து இரண்டாவது முறையாகக் கைப்பற்றியது.

இந்தியா Vs நியூசிலாந்து ஒருநாள் தொடர்                         

  • ஐந்தாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் இந்தியா நியூசிலாந்தை 35 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடரை 4-1 என்ற கணக்கில் வென்றது.

T20 முன்னணி ரன்-ஸ்கோரரானார்

  • 2,272 ரன்கள் எடுத்த மார்டின் குப்தில்லை பின் தள்ளி ரோஹித் 2,288 ரன்கள் எடுத்து, ஆட்டத்தின் மிகச்சிறந்த முன்னணி ரன்-ஸ்கோரரானார்.

ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக கிறிஸ் கெய்ல் அறிவிப்பு

  • வெஸ்ட் இண்டீஸ் வீரர் கிறிஸ் கெய்ல் எதிர்வரும் உலகக் கோப்பை போட்டிக்குப் பிறகு ஒருநாள் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். 

இரானி கோப்பை கிரிக்கெட்

  • ரஞ்சி சாம்பியனான விதர்பா அணி நாக்பூரில் நடைபெற்ற இரானி கோப்பை இறுதிப்போட்டியில் ரெஸ்ட் ஆஃப் இந்தியாவை வீழ்த்தி இரானி கோப்பையை தக்க வைத்துக் கொண்டது. மும்பை, கர்நாடகாவைத் தொடர்ந்து இரண்டு முறை இரானி கோப்பையை வென்ற அணிகள் பட்டியலில் விதர்பா அணி இணைந்தது.

நியூசிலாந்து Vs வங்கதேசம் ஒருநாள் தொடர்

  • வங்கதேசத்திற்கு எதிரான ஒருநாள் தொடரில் நியூசிலாந்து 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.

பி.சி.சி..யின் குறைதீர் அதிகாரியாக நீதிபதி டி.கே. ஜெயின் நியமனம்

  • மாநில கிரிக்கெட் சங்கங்களுடனான வீரர்கள் தொடர்பான நிதி பிரச்சினைகள் மற்றும் பிரச்சினைகள் தொடர்பான குறைகளை நீக்க பி.சி.சி.ஐ.யின் குறைதீர் அதிகாரி பதவிக்கு சுப்ரீம் கோர்ட்டின் முன்னாள் நீதிபதி டி.கே. ஜெயின் நியமனம்.

இந்தியா Vs ஆஸ்திரேலியா டி20 தொடர்

  • ஆஸ்திரேலியா இந்திய அணியை 2-0 என்ற கணக்கில் வீழ்த்தி டி20 தொடரை கைப்பற்றியது.

இந்த ஆண்டு ஐபிஎல் திறப்பு விழா இல்லை

  • இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் தொடக்க விழா இல்லை. இந்திய கிரிக்கெட்டில் இயங்கும் நிர்வாகிகள் குழுவானது புல்வாமா பயங்கரவாத தாக்குதலில் கொல்லப்பட்ட சிஆர்பிஎஃப் ஊழியர்களின் குடும்பங்களுக்கு அந்த பணத்தை ஒதுக்க முடிவு செய்துள்ளது.

தென்னாபிரிக்காவில் ஒரு டெஸ்ட் தொடரை வென்ற ஆசிய நாடுகளின்  முதல் அணி

  • இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டிகளில் தென் ஆப்பிரிக்காவை இலங்கை 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. தென்னாபிரிக்காவில் ஒரு டெஸ்ட் தொடரை வென்ற பெருமை ஆசிய நாடுகளில் இலங்கை அணிக்குத் திரும்புகிறது.

சனத் ஜெயசூரியா கிரிக்கெட்டில் இருந்து தடை செய்யப்பட்டார்

  • முன்னாள் இலங்கை கிரிக்கெட் அணியின் கேப்டன் சனத் ஜெயசூரியா கிரிக்கெட்டில் இருந்து இரண்டு ஆண்டுகளுக்கு தடை செய்யப்பட்டுள்ளார். ஆவணங்கள் அல்லது பிற தொடர்புடைய தகவல்களை மறைத்தல், அழித்தல், விசாரணையைத் தடைசெய்தல் அல்லது தாமதப்படுத்துதல், எதிர்ப்பு ஊழல் ஒத்துழைப்புடன் (ACU) விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்தல் என பல பிரிவுகளில் இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

ஹாக்கி

9வது சீனியர் பெண்கள் ஹாக்கி தேசிய சாம்பியன்ஷிப்

  • 9வது சீனியர் பெண்கள் ஹாக்கி தேசிய சாம்பியன்ஷிப் போட்டி ஹிசார், ஹரியானாவில் தொடங்கியது.

டென்னிஸ்

இந்தியாவை வீழ்த்தி இத்தாலி டேவிஸ் கோப்பை உலக இறுதிப் போட்டிக்கு தகுதி

  • இந்தியாவை 3-1 என்ற கணக்கில் வீழ்த்தி டேவிஸ் கோப்பை உலக இறுதிப் போட்டிக்கு இத்தாலி தகுதி பெற்றது.

சென்னை ஓபன் ஏடிபி சாலஞ்சர் போட்டி

  • சென்னை ஓபன் சாலஞ்சர் போட்டியில் இந்தியாவை வழி நடத்துவகிறார் பிரஜ்னேஷ் குன்னேஸ்வரன்.

ஃபெடரேசன் கோப்பை டென்னிஸ் போட்டிகள்

  • அஸ்தானாவில் நடைபெற்ற ஃபெடரர் கோப்பை டென்னிஸ் போட்டியில் ஆசியா ஓசானியா குரூப் 1ல் இந்தியா தாய்லாந்தை 2 – 1 என்ற கணக்கில் தோற்கடித்தது.

ஏடிபி சென்னை ஓபன் சேலஞ்சர் போட்டி

  • டென்னிஸ், ஏடிபி சென்னை ஓபன் சேலஞ்சர் போட்டியில் இந்திய பிரஜினேஷ் குன்னேஸ்வரன் மற்றும் சசிகுமார் முகுந்த் ஆகியோர் தங்கள் ஒற்றையர் அரை இறுதி ஆட்டங்களை இழந்தனர்.

சோபியா ஓபன் டென்னிஸ்

  • இந்தியாவின் ரோகன் போபண்ணா மற்றும் டிவிக் ஷரன் ஜோடி முதல் முறையாக சோபியா ஓபன் டென்னிஸ் தொடரில் பங்கேற்றனர். சோபியா ஓபன் என்பது ஆண்களின் ATP உலக சுற்றுப்போட்டியான 250 தொடர் போட்டியாகும்.

சென்னை ஓபன் ஏடிபி சேலஞ்சர் பட்டம்

  • டென்னிஸ் போட்டியில், பிரான்ஸின் கோரன்டின் மௌட்டெட் ஆஸ்திரேலியாவின் ஆண்ட்ரூ ஹாரிஸை 6-3, 6-3 என்ற நேர் செட்கணக்கில் வீழ்த்தி சென்னை ஓபன் டென்னிஸ் சாம்பியன் பட்டத்தை வென்றார்.

டென்னிஸ்: பிரஜ்னேஷ் குன்னேஸ்வரன் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் டாப் 100க்குள் நுழைந்தார்

  • பிரஜ்னேஷ் குன்னேஸ்வரன் ஆண்கள் ஒற்றையர் டென்னிஸ் தரவரிசையில் முதல் 100 இடங்களுக்குள் நுழைந்தார். ஆறு இடங்கள் முன்னேறி இப்போது 97வது இடத்தில் உள்ளார்.

கத்தார் ஓபன் டென்னிஸ்

  • பெல்ஜியத்தின் எலிஸ் மெர்டென்ஸ் 3-6, 6-4, 6-3 என்ற செட் கணக்கில் வீராங்கணையான சிமோனா ஹாலப்பை வீழ்த்தி தனது மிகப்பெரிய பட்டத்தைப் பெற்றார்.

கால்பந்து

கோல்டு கோப்பை 2019

  • புவனேஸ்வரில் நடைபெறும் 2019 ஆம் ஆண்டு பெண்கள் ஹீரோ கோல்டு கோப்பை கால்பந்து இறுதிப் போட்டியில் மியான்மர் நேபாளத்துடன் மோதுகிறது.
  • மியான்மர் கடைசி சுற்று ராபின் போட்டியில் 2-0 என்ற கணக்கில் இந்தியாவை தோற்கடித்ததுடன், நேபாளம் ஈரானை 3-0 என்ற கணக்கில் தோற்கடித்து இறுதிப்போட்டுக்குள் நுழைந்தது.

பெண்கள் கால்பந்து கோப்பை

  • துருக்கியில் நடைபெறும் பெண்கள் கால்பந்து கோப்பை போட்டியில் இந்தியா உஸ்பெகிஸ்தானிடம் 0-1 என்ற கணக்கில் தோல்வி அடைந்தது.

சதுரங்க போட்டி

கேன்ஸ் சர்வதேச சதுரங்க ஓபன் டிராபி

  • சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற சதுரங்கப்போட்டியில், இந்திய கிராண்ட்மாஸ்டர் அபிஜித் குப்தா கேன்ஸ் சர்வதேச சதுரங்க ஓபன் டிராபியை வென்றார்.

குத்துச்சண்டை

70வது ஸ்ட்ராண்டஜா நினைவுப் போட்டி – குத்துச்சண்டை

  • பல்கேரியாவில் நடைபெறும் 70வது ஸ்ட்ராண்ட்ஜா நினைவுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்திய பெண்கள் குத்துச்சண்டை வீராங்கணை எனும் சாதனை படைத்தனர் நிகத் ஜரீன் (51 கிலோ) மற்றும் மீனா குமாரி தேவி (54 கிலோ). மஞ்சு ராணி (48 கிலோ) வெள்ளி பதக்கம் வென்றார். பிலாவோ பசுமதாரி (64 கிலோ), நீரஜ் (60 கிலோ), லவ்லினா போர்கோஹைன் (69 கிலோ) ஆகியோர் வெண்கலப் பதக்கங்களைப் பெற்றனர்.

மக்ரான் கோப்பை குத்துச்சண்டை

  • ஈரான் சபஹாரில் நடைபெறும் மக்ரான் கோப்பை குத்துச்சண்டைபோட்டியில் காமன்வெல்த் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற மணீஷ் கௌஷிக் (60 கிலோ), முன்னாள் தேசிய சாம்பியன் துரியோதான் சிங் நேகி (69 கிலோ), ரோஹித் டோக்கஸ் (64 கிலோ) ஆகியோர் அரையிறுதிக்கு முன்னேறினர்.

பேட்மிண்டன்

சீனியர் தேசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்

  • குவஹாத்தியில் நடைபெற்ற 83வது யோனெக்ஸ்-சன்ரைஸ் சீனியர் தேசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் பி.வி.சிந்துவை சாய்னா நேவால் 21-18, 21-15 என நேர் செட் கணக்கில் வீழ்த்தி நான்காவது முறையாக பட்டத்தை வென்றார்.
  • ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 21-18, 21-13 என்ற நேர் செட் கணக்கில் இளம் வீரரான லக்ஷ்யா சென்-ஐ தோற்கடித்து சவுரப் வர்மா தனது ஹாட்ரிக் பட்டத்தை வென்றார்.
  • முன்னதாக, பிரனவ் ஜெர்ரி சோப்ரா மற்றும் சிராக் ஷெட்டி ஜோடி முன்னணி ஜோடியான அர்ஜூன் எம்.ஆர்., ஸ்லோக் ராமச்சந்திரன்-ஐ 21-13, 22-20 என்ற நேர் செட்களில் வீழ்த்தி ஆண்கள் இரட்டையர் பிரிவில் பட்டத்தை வென்றனர்.

மற்றவை                                                          

அரசு விளையாட்டு துறைக்கான பட்ஜெட்டை 214 கோடி ரூபாய் உயர்த்தியது

  • அடுத்த நிதி ஆண்டிற்கான விளையாட்டுத்துறை பட்ஜெட்டை அரசு 214 கோடி ரூபாய் உயர்த்தியுள்ளது. இதில் இந்திய விளையாட்டுத்துறை ஆணையம் (SAI) மற்றும் விளையாட்டு வீரர்களுக்கான ஊக்கத்தொகை ஆகியவற்றிற்கான நிதி உயர்வும் அடங்கும்.
  • ஒட்டுமொத்த விளையாட்டுத்துறைக்கான 2019-2020ன் பட்ஜெட் தொகை 2002 கோடி ரூபாயிலிருந்து 2216 ஆக உயர்ந்துள்ளது.

கொல்கத்தா மராத்தான்

  • ஐடிபிஐ மத்திய ஆயுள் காப்பீடு கொல்கத்தா மராத்தானில் அஞ்சலி சரோகி தனது பட்டத்தை தக்க வைத்துக் கொண்டார். ஆண்களுக்கான முழு மராத்தான் போட்டியில் தலான்திங் வால்லாங் வென்றார்.

EGAT கோப்பை

  • உலக சாம்பியன் இந்திய வீரர் சைகோம் மீராபாய் சானு தாய்லாந்தில் நடைபெற்ற EGAT கோப்பை போட்டியில் தங்கப் பதக்கம் வென்றார்.
  • சானு 49 கிலோ எடைப்பிரிவில் தங்கம் வென்றார். வெள்ளிப் பதக்கத்துக்கான ஒலிம்பிக் தகுதிச் சுற்றில் 192 கிலோ எடையை தூக்கி சாம்பியனானார் மீராபாய் சானு.
  • தாய்லாந்து நாட்டின் EGAT கோப்பை சர்வதேச பளு தூக்குதல் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவைச் சேர்ந்த ஜெர்மி லல்ரிங்கங்கா ஆண்கள் 67 கிலோ பிரிவில் இரண்டாவது பதக்கத்தை வென்றார்.

“ஸ்டேட்ஸ்மேன் சேலஞ்சர்” கோப்பை

  • தேசிய ரயில் அருங்காட்சியகத்தில் (NRM) பாதுகாக்கப்பட்டுள்ள இந்திய இரயில்வேயின் பெருமைக்குரிய உடைமைகளின் முதல் உலகப்போருக்கு முந்தைய ஜான் மோரிஸ் அஜாக்ஸ் பயர் இன்ஜின் வின்டேஜ் பெல்சைஸ் சேசிஸ் (1914), ஸ்டேட்ஸ்மேன் சேலஞ்சர் டிராபியை வென்றது.

சர்வதேச ஷூட்டிங் விளையாட்டு கூட்டமைப்பு (ISSF) உலக கோப்பை

  • புதுடில்லி சர்வதேச துப்பாக்கிச்சூடு விளையாட்டு சம்மேளனத்தின் (ஐ.எஸ்.எஸ்.எஃப்) உலகக் கோப்பையை விளையாட்டுத் துறை அமைச்சர் ராஜ்யவர்த்தன் ரத்தோர் திறந்துவைப்பார்.
  • பெண்கள் 10 மீட்டர் ஏர் ரைபிள் போட்டியில் அபூர்வி சந்தீலா தங்க பதக்கம் வென்றார்.
  • இது 2019 ஆம் ஆண்டு ஐ.எஸ்.எஸ்.எஃப் உலகக் கோப்பையின் இந்தியாவின் முதல் பதக்கம் ஆகும். இறுதி ஆட்டத்தில் 252.9 புள்ளிகள் பெற்றதன் மூலம் அவர் ஒரு புதிய உலக சாதனை படைத்தார்.
  • புதுடில்லியில் நடைபெற்ற நடப்பு ஐ.எஸ்.எஸ்.எப் உலகக் கோப்பை துப்பாக்கிச்சூடு போட்டியில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் போட்டியில் ஹங்கேரி வீரர் வெரோனிகா மேஜர் தங்கம் வென்றார்.
  • சௌரப் சவுதாரி மற்றும் மனு பேகர் புது டெல்லியில் நடைபெற்ற ஐ.எஸ்.எஸ்.எஃப். உலகக் கோப்பையில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு பிரிவில் தங்கப் பதக்கம் வென்றனர்.

PDF Download

நடப்பு நிகழ்வுகள்  2018
Whatsapp குரூப்பில் சேர – கிளிக்செய்யவும்
Telegram Channel ல் சேர – கிளிக்செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!