ரயில் பயணிகளுக்கான முக்கிய அறிவிப்பு – கனமழையின் காரணமாக விரைவு சேவைகள் ரத்து!

0
ரயில் பயணிகளுக்கான முக்கிய அறிவிப்பு - கனமழையின் காரணமாக விரைவு சேவைகள் ரத்து!
ரயில் பயணிகளுக்கான முக்கிய அறிவிப்பு - கனமழையின் காரணமாக விரைவு சேவைகள் ரத்து!
ரயில் பயணிகளுக்கான முக்கிய அறிவிப்பு – கனமழையின் காரணமாக விரைவு சேவைகள் ரத்து!

அசாமில் கனமழையின் காரணமாக லட்சக்கணக்கான பொதுமக்கள் பாதிப்படைந்துள்ளனர். அசாம் மாநிலம் முழுக்க வெள்ளம் ஓடி கொண்டிருப்பதால் நாட்டின் பல பகுதிகளில் இருந்து அசாம் செல்லும் அனைத்து ரயில் சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

விரைவு ரயில்கள் ரத்து:

கடந்த சில நாட்களாகவே இந்தியாவில் உள்ள பல மாநிலங்களில் அதிகமான மழைப்பொழிவு இருந்து வருகிறது. கூடுதல் மழைபொழிவின் காரணமாக அசாம் மாநிலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, ஆறுகளின் நீர்மட்டம் அதிகரித்துள்ளது. இந்த கனமழையின் காரணமாக அசாமில் உள்ள பொது மக்களின் வாழ்வாதாரம் பாதிப்படைந்துள்ளது. இந்த வெள்ளப்பெருக்கின் காரணமாக அசாமில் மட்டுமே 4.03 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக நாடு முழுவதும் இருந்து அஸ்ஸாம் செல்லும் ரயில்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளன.

குரூப் B, C பணியிடங்களுக்கான பொது தகுதித்தேர்வு – மத்திய அரசு முக்கிய அறிவிப்பு!

இதனால் கோவை – சில்சாா் விரைவு ரயில் ரத்து செய்யவுள்ளதாக ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது. தற்போது வெள்ளப்பெருக்கினால் எந்தெந்த ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளது என்பதற்கான அறிவிப்பை சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ளது. மே 29, ஜூன் 5, 12, 19, 26 ஆகிய 5 தேதிகளும் கோவையில் இருந்து இரவு 9.45 மணிக்கு திருப்பூா், ஈரோடு, சேலம் வழித்தடத்தின் வழியாக சில்சாா் வரை செல்லும் கோவை – சில்சாா் விரைவு ரயில் (எண்: 12515) இயக்கம் நிறுத்தப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

அதாவது இந்த ரயில் அஸ்ஸாம் மாநிலம் குவாஹாத்தி பகுதி முதல் சில்சாா் இடையே உள்ள பகுதிகளுக்கு மட்டும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த கோவை – சில்சாா் விரைவு ரயில் கோவை முதல் குவாஹாத்திக்கு இடையே உள்ள பகுதிகளில் மட்டும் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மே 24, 31, ஜூன் 7,14, 21,28 ஆகிய 6 நாட்கள் சில்சாா் – கோவை விரைவு ரயில் (எண்:12516) சில்சாா் பகுதி முதல் குவாஹாத்திக்கு இடையேயான பகுதிக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here