தமிழகத்தில் சிறப்பு ரயில்கள் ரத்து? ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு!

0
தமிழகத்தில் சிறப்பு ரயில்கள் ரத்து? ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு!
தமிழகத்தில் சிறப்பு ரயில்கள் ரத்து? ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு!
தமிழகத்தில் சிறப்பு ரயில்கள் ரத்து? ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு!

தமிழகத்தில் ராஜபாளையம்-சங்கரன் கோவில் பிரிவில் ரயில் பாதை பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதால் மதுரை-செங்கோட்டை மற்றும் மதுரை- செங்கோட்டை சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தெற்கு ரயில்வே:

இந்தியாவில் உள்ள போக்குவரத்தில் ரயில் போக்குவரத்து அதிக மக்களால் பயன்படுத்தப்படும் துறையாக விளங்குகிறது. குறிப்பாக நடுத்தர மக்களுக்கு இந்த சேவை அதிகம் பயன்பட்டு வருகிறது. ஏனென்றால் பேருந்து கட்டணங்களை காட்டிலும் ரயில்களில் உள்ள கட்டணம் குறைவாக இருப்பதால் மக்கள் அதிகம் இந்த சேவையை பயன்படுத்தி வருகின்றனர். மேலும் இந்த ரயில் சேவையில் பயணிகளுக்கு ஏற்றவாறு அனைத்து வசதிகளும் செய்யப்படுவதால் மக்கள் அதிகம் விரும்புகின்றனர்.

தமிழகத்தின் 19 மாவட்டங்களுக்கு கனமழை – வானிலை மையம் தகவல்!

இதையடுத்து பண்டிகை மக்களின் வசதிகளுக்கு ஏற்ப சிறப்பு ரயில் சேவைகளையும் இயக்கி வருகிறது. மேலும் இதில் முன்பதிவு சேவைகள் இருப்பதால் மக்கள் தங்கள் வசதிகளுக்கு ஏற்ப டிக்கெட் கட்டணங்களை செலுத்தி கொள்ளலாம். அதுமட்டுமின்றி நீண்ட தூர பயணங்களுக்கு குறைவான கட்டணமே நிர்ணயிக்கப்பட்டுள்ளதால் கோடிக்கணக்கான மக்கள் இந்த ரயில் சேவையை பயன்படுத்துகின்றனர். இத்தகைய ரயில் சேவைகளில் மக்கள் பாதுகாப்பாக பயணம் செய்யும் வகையில் ரயில்வே நிர்வாகம் அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தி தருகிறது.

இந்த நிலையில் தமிழகத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் போக்குவரத்து அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் ரயில் போக்குவரத்தை சரி செய்யும் வகையில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து ராஜபாளையம்-சங்கரன் கோவில் பிரிவில் ரயில் பாதை பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதால் மதுரை-செங்கோட்டை மற்றும் மதுரை- செங்கோட்டை சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதாவது, மதுரையில் காலை 11.30 க்கு புறப்பட வேண்டிய மதுரை-செங்கோட்டை சிறப்பு ரயில் மற்றும் செங்கோட்டையில் இருந்து காலை 11.50க்கு புறப்பட வேண்டிய செங்கோட்டை-மதுரை சிறப்பு ரயில்கள் இன்று முதல் செப்டெம்பர் 10ம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here