தமிழகத்தில் குழந்தைகளுக்கான சிறப்பு திட்டம் – இலவச பிஸ்கட், முட்டை … முதல்வர் ஆணை!

0
தமிழகத்தில் குழந்தைகளுக்கான சிறப்பு திட்டம் - இலவச பிஸ்கட், முட்டை ... முதல்வர் ஆணை!
தமிழகத்தில் குழந்தைகளுக்கான சிறப்பு திட்டம் - இலவச பிஸ்கட், முட்டை ... முதல்வர் ஆணை!
தமிழகத்தில் குழந்தைகளுக்கான சிறப்பு திட்டம் – இலவச பிஸ்கட், முட்டை … முதல்வர் ஆணை!

தமிழகத்தில் மாநில அளவிலான வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் இன்று நடைபெற்றது. அதில் ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளின் நலனில் அக்கறை கொண்டு அரசு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

ஊட்டச்சத்து:

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் குழந்தைகளுக்கு சத்து நிறைந்த மதிய உணவு வழங்கப்பட்டு வருகிறது. அந்த உணவில் முட்டை, பயிறு வகைகளும் வழங்கப்பட்டு வருகிறது. அதே போல அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளுக்கு காய்கறி உணவு மற்றும் சத்து மாவு உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பள்ளிகளில் குழந்தைகளுக்கு காலை உணவையும் அளிக்கும் பொருட்டு சிற்றுண்டி திட்டம் அண்மையில் கொண்டு வரப்பட்டது.

Follow our Instagram for more Latest Updates

இதன் மூலம் ஏராளமான மாணவர்கள் பயனடைந்து வருகின்றனர். அதனை தொடர்ந்து தற்போது ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கு பிஸ்கட் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று முதல்வர் முக ஸ்டாலின் தலைமையில் மாநில அளவிலான வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் நடைபெற்றது. அதில் பேசிய முதல்வர் எந்த திட்டமாக இருந்தாலும் கடைக்கோடி மக்களை சென்றடைய வேண்டும் என்பதே எங்கள் நோக்கம் என்று தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு இடியுடன் கூடிய கனமழை – வானிலை ஆய்வு மையம் தகவல்!

Exams Daily Mobile App Download

தேசிய உணவு பாதுகாப்பு சட்டம் தமிழ்நாட்டில் பொது விநியோக திட்டத்துடன் இணைந்து செயல்படுத்தப்படுகிறது. இதன் கீழ் மேலும் ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு சத்துக்கள் அடங்கிய செறிவூட்டப்பட்ட பிஸ்கட் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். அத்துடன் இக்கூட்டத்தில் அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளுக்கு வாரம் இனி 3 முட்டைகள் வழங்கும் திட்டமும் தொடங்கப்பட்டுள்ளது.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!