மத்திய அரசில் பணிபுரியும் ஊழியர்கள் கவனத்திற்கு – சிறப்பு சலுகை அறிவிப்பு!

0
மத்திய அரசில் பணிபுரியும் ஊழியர்கள் கவனத்திற்கு - சிறப்பு சலுகை அறிவிப்பு!
மத்திய அரசில் பணிபுரியும் ஊழியர்கள் கவனத்திற்கு - சிறப்பு சலுகை அறிவிப்பு!
மத்திய அரசில் பணிபுரியும் ஊழியர்கள் கவனத்திற்கு – சிறப்பு சலுகை அறிவிப்பு!

இந்தியாவில் ஒன்றிய அரசு பணியில் இருக்கும் பெண் ஊழியர்களுக்கு பிரசவத்தின் போது சிசு உயிரிழப்பு ஏற்பட்டால் சிறப்பு மகப்பேறு விடுமுறை எடுத்துக் கொள்ளலாம் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் இந்த அறிவிப்புக்கு ஊழியர்களிடம் இருந்து நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

ஒன்றிய அரசு:

இந்தியாவில் மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒன்றிய அரசு பல சலுகைகளை அளித்து வருகிறது. அதாவது அகவிலைப்படி உயர்வு, பயணப்படி, கல்விக் கடன்கள் உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. இந்த நிலையில் நாட்டில் பணவீக்கம் அதிகரித்துள்ள நிலையில் கடந்த ஜூன் மாதம் மத்திய அரசு ஊழியர்களின் DA தொகை நான்கு சதவீதம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் இந்த DA தொகை அதிகரிப்பால் நாட்டில் 1.16 கோடி மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மத்திய அரசில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கு சிறப்பு சலுகை ஒன்றை மத்திய அரசு அறிவித்துள்ளது. அதாவது, ஒன்றிய அரசில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கு குழந்தை பிறக்கும்போதே உயிரிழந்தால் 60 நாட்கள் வரை சிறப்பு மகப்பேறு விடுமுறை எடுத்துக்கொள்ளலாம் என்று ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. குறிப்பாக ஒன்றிய அரசு பெண் ஊழியர்கள் கர்ப்பமடைந்த 28 வாரங்கள் முதல் குழந்தை பிறந்த சில நாட்களில் சிசு உயிரிழந்தால் சிறப்பு மகப்பேறு விடுப்பு எடுத்துக் கொள்ளலாம் என ஒன்றிய அரசின் பணியாளர் மற்றும் பயிற்சித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தமிழக அரசு கல்லூரிகளில் 25% கூடுதல் மாணவர் சேர்க்கை – அரசாணை வெளியீடு!

மேலும் இது தொடர்பாக ஒன்றிய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்துடன் இது தொடர்பாக விரிவான ஆலோசனை நடத்தப்பட்டதில் 60 நாட்கள் வரை சிறப்பு மகப்பேறு விடுமுறை அளிக்க முடிவு எடுக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதவாது பெண் ஊழியர்களுக்கு பிறந்த குழந்தை உயிரிழப்பது தாயை மன ரீதியாக நீண்ட நாள் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்பதால் அதிலிருந்து மீள அவகாசம் தரும் வகையில் சிறப்பு மகப்பேறு விடுப்பு அளிக்கப்படுவதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த சலுகை முதல் இரண்டு குழந்தைகளுக்கு மட்டுமே பொருந்தும் என்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் பெண் ஊழியர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும் ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here