நடிகை ஆலியா மானஸா அளித்த ஸ்பெஷல் விருந்து – பிறந்தநாள் கொண்டாட்டம்! வைரலாகும் வீடியோ!

0
நடிகை ஆலியா மானஸா அளித்த ஸ்பெஷல் விருந்து - பிறந்தநாள் கொண்டாட்டம்! வைரலாகும் வீடியோ!
நடிகை ஆலியா மானஸா அளித்த ஸ்பெஷல் விருந்து - பிறந்தநாள் கொண்டாட்டம்! வைரலாகும் வீடியோ!
நடிகை ஆலியா மானஸா அளித்த ஸ்பெஷல் விருந்து – பிறந்தநாள் கொண்டாட்டம்! வைரலாகும் வீடியோ!

சின்னத்திரை சீரியல் நடிகை ஆலியா மானஸா சமீபத்தில் தனது பிறந்தநாளை கொண்டாடிய கையோடு தனது குடும்பத்தாருக்கு இப்போது ஸ்பெஷல் விருந்து ஒன்றை வைத்துள்ளார். இது தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி லைக்குகளை குவித்து வருகிறது.

ஆலியா மானஸா

விஜய் தொலைக்காட்சியின் ‘ராஜா ராணி’ என்ற சூப்பர் ஹிட் சீரியலில் அறிமுகமான வெள்ளித்திரை நடிகை ஆலியா மானஸா மிக குறுகிய காலத்திலேயே சின்னத்திரையில் முன்னணி நடிகையாக வளர்ந்து இப்போது வலம் வந்து கொண்டிருக்கிறார். அதாவது, ‘ராஜா ராணி’ என்ற ஒரே சீரியல் மூலம் ஓஹோ என்று வளர்ந்த நடிகை ஆலியா மானஸா தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கினார். இந்த சீரியலில் நடித்து கொண்டிருந்த போது தன்னுடன் நடித்த சக நடிகரை காதலித்த ஆலியா, சீரியல் முடிந்த கையோடு அவரை திருமணம் செய்து கொண்டார்

விஜய் டிவி ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் ரீஎன்ட்ரி கொடுக்கும் வருண் – ரசிகர்கள் எதிர்பார்ப்பு!

திருமணத்திற்கு பிறகு குழந்தை பிறக்க ஒரு சிறிய பிரேக் எடுத்துக்கொண்ட ஆலியா மானஸா மீண்டும் சீரியலில் களமிறங்கினார். இப்படி நடிப்பு மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை இரண்டையும் சிறப்பாக கேரி செய்த ஆலியா மானஸா திடீரென 2வது முறையாக கர்ப்பமாக அவர் தனது சொந்த வாழ்க்கைக்கு முக்கியத்துவம் கொடுப்பதற்காக சீரியலை விட்டு விலகினார். அந்த வகையில் சமீபத்தில் 2வதாக ஒரு ஆண் குழந்தைக்கு அம்மாவான ஆலியா பிரசவத்திற்கு பின்பு தனது குடும்பத்தாருடன் சேர்ந்து பொழுதை கழித்து வருகிறார்.

Exams Daily Mobile App Download

இப்போது சீரியலில் நடிக்கவில்லை என்றாலும் இன்ஸ்டாகிராம், யூடியூப் என சமூக வலைதள பக்கங்களில் ஆக்டிவாக இருக்கும் ஆலியா அவ்வப்போது ரசிகர்களை சந்தித்து வருகிறார். அந்த வகையில், சமீபத்தில் தனது 30வது பிறந்தநாளை கொண்டாடி இருந்த ஆலியா மானஸா இது தொடர்பான வீடியோவை யூடியூப் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். இப்போது மீண்டுமாக பிறந்தநாளை முன்னிட்டு ஆலியா மானஸா, தனது கணவரின் குடும்பத்தாருக்கு விருந்து கொடுத்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களின் வாழ்த்துக்களை பெற்று வருகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!