திருப்பதி செல்ல திட்டமிடுவோர் கவனத்திற்கு – கோடை விடுமுறையை முன்னிட்டு சிறப்பு ஏற்பாடு!
கோடை விடுமுறையை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதால் நிழற்பந்தல்கள், அமைக்கப்பட்டுள்ளது.
திருப்பதி:
திருப்பதி ஏழுமலையான் திருக்கோயில் கொரோனா பரவல் காரணமாக கடந்த மாதங்களில் பக்தர்கள் வருகை மறுக்கப்பட்டது. அதனால் சுவாமிக்கு பூஜைகள் கோயில் வளாகத்தில் உள்ள ஊழியர்கள் முன்னிலையில் நடைபெற்று வந்தது. இந்தியாவில் அதிக வருமானம் ஈட்டும் முக்கிய திருத்தலமாகும். இங்கு பக்தர்கள் வருகை மறுக்கப்பட்டதால் கோயில் வருமானமும் குறைந்தது. அரசின் முயற்சியால் கொரோனா தொற்று குறைந்து வந்ததால் முன்பதிவு அடிப்படையில் மீண்டும் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தற்போது கொரோனா பாதிப்புகள் குறைந்து வருவதால் இலவச தரிசன டிக்கெட்டுகள் மட்டும் நேரடியாக வழங்கப்பட்டு வருகிறது.
அனைத்து ஓய்வூதியதாரர்களின் கவனத்திற்கு – விரைவில் வெளியாக உள்ள புதிய திட்டம்!
தற்போது கோடை விடுமுறை தொடங்கியுள்ளதால் திருப்பதிக்கு பல மாநிலங்களிலும் இருந்து பக்தர்கள் வருகை புரிவர். வழக்கமாகவே திருப்பதிக்கு பக்தர்கள் கூட்டம் அலைமோதும். இப்போது விடுமுறை காலம் என்பதால் மேலும் பக்தர்கள் கூட்டம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் பக்தர்களுக்காக சிறப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வெயிலின் தாக்கத்தில் இருந்து பக்தர்களை பாதுகாக்கும் வகையில் உணவு, மோர், குடிநீர், காலை உணவு மற்றும் மருத்துவ வசதிகள், வைகுண்டம் காத்திருப்பு அறைகளில் வழங்கப்படும்.
Exams Daily Mobile App Download
மேலும் நான்கு மாட வீதிகளில் நிழற்பந்தல்கள், வெள்ளை நிற குளிர்ச்சி பெயிண்ட், சிவப்பு கம்பளங்கள் அமைக்கப்படும் என்று தேவஸ்தான அதிகாரி தெரிவித்துள்ளார். வரும் 15ம் தேதி முதல் ஜூலை 15ம் தேதி வரை வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் விஐபி பிரேக் தரிசனம், புரோட்டோகால் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதிக்கப்படும். இதனால், அதிகளவு பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்யலாம் என்றும் தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் 61,087 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தது குறிப்பிடத்தக்கது.