திருப்பதி கோவிலில் சிறப்பு தரிசனம் ரத்து? தேவஸ்தானம் அறிவிப்பு!

0
திருப்பதி கோவிலில் சிறப்பு தரிசனம் ரத்து? தேவஸ்தானம் அறிவிப்பு!
திருப்பதி கோவிலில் சிறப்பு தரிசனம் ரத்து? தேவஸ்தானம் அறிவிப்பு!
திருப்பதி கோவிலில் சிறப்பு தரிசனம் ரத்து? தேவஸ்தானம் அறிவிப்பு!

நாடு முழுவதும் வருகிற அக். 25 ஆம் தேதி சூரிய கிரகணம் ஏற்பட இருப்பதால் அன்றைய தினம் கோவில்கள் மூடப்படும். அந்த வகையில் திருப்பதி ஏழுமலையான் கோவில் சன்னதி மூடப்படும் நேரம் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது.

திருப்பதி கோவில்:

ஆந்திர மாநிலம் திருப்பதியில் அமைந்துள்ள ஏழுமையான் கோவிலில் லட்சக்கணக்கான மக்கள் தரிசனம் செய்ய வருவார்கள். நாட்டின் வசதியான கோவில்களில் ஒன்றாக திருப்பதி ஏழுமையான் கோவில் இருக்கிறது. அந்த கோவிலில் ஆண்டுதோறும் ஏகப்பட்ட பக்தர்கள் வந்து காணிக்கை செலுத்துவார்கள். அவர்களுக்கு பிரசித்தி பெற்ற லட்டு பிரசாதமாக வழங்கப்படும். கொரோனா காரணமாக திருப்பதி கோவிலில் முன்பதிவு மூலமாகவே பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வந்தனர்.

மேலும் பக்தர்கள் வருகைக்கு ஏற்ப தேவஸ்தான இணையதளத்தில் முன்பதிவிற்கு ஏற்பாடுகள் செய்யப்படும். இந்நிலையில் வருகிற அக். 25 ஆம் தேதி மாலை 5.11 மணியில் இருந்து மாலை 6.27 மணி வரை சூரிய கிரகணம் ஏற்பட இருக்கிறது. அதனால் 9 மணி நேரத்துக்கு முன்பாகவே திருப்பதி ஏழுமலையான் கோவில் கதவுகள் காலை 8.11 மணியில் இருந்து இரவு 7.30 மணி வரை சுமார் 11¼ மணிநேரம் மூடப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கோயில் விழாக்களில் சாதி பாகுபாடு? உயர்நீதிமன்றத்தின் புதிய உத்தரவு!

இது குறித்து கோவில் நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பின் படி, சூரிய கிரகணம் ஏற்படுவதால், பிரேக் தரிசனம், ஸ்ரீவாணி, ரூ.300 தரிசனம், முதியோர், மாற்றுத்திறனாளிகள், குழந்தைகளுடன் வரும் பெற்றோருக்கான தரிசனம், பாதுகாப்புப் பணியாளர்களுக்கான தரிசனம், வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான தரிசனம், கல்யாணோற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், சஹஸ்ர தீபலங்கார சேவை ஆகியவை ரத்து செய்யப்படுகின்றன. அன்றைய தினம் இலவச தரிசனத்தில் செல்லும் சாதாரணப் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட இருக்கின்றனர்.

Exams Daily Mobile App Download

மேலும் நவம்பர் மாதம் 8ஆம் தேதி மதியம் 2.39 மணியில் இருந்து மாலை 6.27 மணி வரை சந்திர கிரகணம் நிகழ்கிறது. அதனால் நவம்பர் மாதம் 8ஆம் தேதி திருப்பதி ஏழுமலையான் கோவில் கதவுகள் காலை 8.40 மணியில் இருந்து இரவு 7.20 மணி வரை சுமார் 10 மணிநேரம் மூடப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினமும் பிரேக் தரிசனம், ஸ்ரீவாணி, ரூ.300 தரிசனம், முதியோர், மாற்றுத்திறனாளிகள், குழந்தைகளுடன் வரும் பெற்றோருக்கான தரிசனம், பாதுகாப்புப் பணியாளர்களுக்கான தரிசனம், வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான தரிசனம், கல்யாணோற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், சஹஸ்ர தீபலங்கார சேவை ஆகியவை ரத்து செய்யப்படுகின்றன. மேலும் இலவச தரிசனத்திற்கு செல்லும் பக்தர்கள் மட்டும் அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!