குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்கும் சிறப்பு போட்டியாளர் – குஷியில் ரசிகர்கள்!

0
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்கும் சிறப்பு போட்டியாளர் - குஷியில் ரசிகர்கள்!
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்கும் சிறப்பு போட்டியாளர் - குஷியில் ரசிகர்கள்!
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்கும் சிறப்பு போட்டியாளர் – குஷியில் ரசிகர்கள்!

இந்த வாரம் குக் வித் கோமாளி செலிபிரேஷன் ரவுண்டில் சிறப்பு போட்டியாளராக சீசன் 2 போட்டியாளர்கள் கலந்துகொள்ளவுள்ளனர். மீண்டும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பழைய போட்டியாளர்களை காணவுள்ள மகிழ்ச்சியில் ரசிகர்கள் உள்ளனர்.

குக் வித் கோமாளி:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளிலேயே ரசிகர்களின் அதிகமான ஆதரவைப் பெற்ற நிகழ்ச்சி என்றால் அது நிச்சயமாக குக் வித் கோமாளி நிகழ்ச்சிதான். ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த வாரம் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் அம்மு அபிராமி, கிரேஸ் கருணாஸ், ராகுல் தாத்தா, வித்யுலேகா, ரோஷினி, தர்ஷன், அந்தோணி தாஸ், சந்தோஷ் பிரதாப் , ஸ்ருதிக்கா ஆகியோர் முக்கிய போட்டியாளராக பங்கேற்றுள்ளனர்.

Exams Daily Mobile App Download

கடந்த 2 சீசன்களை விட இந்த சீசன் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. கோமாளியாக பங்கேற்று வரும் புகழ் பட வாய்ப்பின் காரணமாக அவ்வப்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகி வருகிறார். அவ்வப்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு ஏதேனும் விருந்தினர்கள் வந்து ரசிகர்களை மகிழ்வித்து வருகின்றனர். இந்த சீசனின் ஃபைனல்ஸூக்கு முன்பே சிறப்பு விருந்தினர்களாக சிவகார்த்திகேயன், துல்கர் சல்மான், ஆர்.ஜே பாலாஜி ஆகியோர் கலந்துகொண்டனர்.

1 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ் – வாரத்தில் 2 நாட்கள் பால் வழங்கும் திட்டம் அறிமுகம்!

இதனை தொடர்ந்து சீசன் 2 போட்டியாளர்கள் இந்த வாரம் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உள்ளனர். இந்த வாரம் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் செலிபிரேஷன் ரவுண்ட் நடைபெற இருக்கிறது. அதாவது, ஷகிலா, கனி, பவித்ரா லட்சுமி, தீபா அக்கா, ரித்விகா ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர். மீண்டும் குக் வித் கோமாளி சீசன் 2 போட்டியாளர்களை காணவுள்ள மகிழ்ச்சியில் ரசிகர்கள் உள்ளனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!