தமிழகத்தில் ஆதாருடன் வாக்காளர் அட்டையை இணைப்பு – நாளை (செப்.04) சிறப்பு முகாம்!

0
தமிழகத்தில் ஆதாருடன் வாக்காளர் அட்டையை இணைப்பு - நாளை (செப்.04) சிறப்பு முகாம்!
தமிழகத்தில் ஆதாருடன் வாக்காளர் அட்டையை இணைப்பு - நாளை (செப்.04) சிறப்பு முகாம்!
தமிழகத்தில் ஆதாருடன் வாக்காளர் அட்டையை இணைப்பு – நாளை (செப்.04) சிறப்பு முகாம்!

ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆதார் அட்டையுடன் வாக்காளர் அட்டையை இணைக்க சிறப்பு முகாம் அமைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், நாளையும் காஞ்சிபுரத்தில் வாக்காளர் அட்டையை இணைப்பதற்கான சிறப்பு முகாம் நடைபெற இருக்கிறது.

சிறப்பு முகாம்

நாடு முழுவதும் உள்ள பொதுமக்கள் கட்டாயமாக வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைத்துவிட்டால் தேர்தலில் கள்ள ஓட்டு போடுவது போன்ற சூழ்ச்சி வேலைகள் குறைந்துவிடும் என்பதற்காக இத்தகைய முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதனிடையே, இந்திய தேர்தல் ஆணையம் பொதுமக்கள் கட்டாயமாக வாக்காளர் அடையாள அட்டையை ஆதார் அட்டையுடன் இணைக்க வேண்டும் என பிரச்சாரம் செய்து வந்தது.

மேலும், வாக்காளர் பட்டியலை 100 சதவீதம் தூய்மையாக வெளியிட வேண்டும் என்பதற்காக வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி கடந்த ஆகஸ்ட் 1 ஆம் தேதியில் இருந்து இந்திய தேர்தல் ஆணையத்தின் உதவியுடன் நடைபெற்று கொண்டிருக்கிறது. மேலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் வாக்காளர்கள் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்பதற்காக சிறப்பு முகாம் அமைக்கப்படுகிறது.

UPSC 2022 முதன்மை தேர்வு குறித்த அறிவிப்பு – ஹால் டிக்கெட் வெளியீடு!

அதே போல நாளையும் (ஞாயிற்றுக்கிழமை), காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் உள்ள வாக்குச்சாவடிகளில் சிறப்பு முகாம் நடைபெற இருக்கிறது. இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும்படி காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி அறிவித்துள்ளார். மேலும், இந்த முகாமில் வாக்காளர்கள் 6B படிவத்தினையும் பூர்த்தி செய்து சமர்ப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here