தமிழகத்தில் சிறப்பு பேருந்துகள் இயக்கம் – முக்கிய தகவல் வெளியீடு!

0
தமிழகத்தில் சிறப்பு பேருந்துகள் இயக்கம் - முக்கிய தகவல் வெளியீடு!
தமிழகத்தில் சிறப்பு பேருந்துகள் இயக்கம் - முக்கிய தகவல் வெளியீடு!
தமிழகத்தில் சிறப்பு பேருந்துகள் இயக்கம் – முக்கிய தகவல் வெளியீடு!

தமிழகத்தில் நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய மாதா பேராலயம் உள்ளது. அன்னை மரியாவின் பிறந்த நாளான செப்டம்பர் 8ம் தேதி அன்று ஆண்டுதோறும் ஆண்டு பெருவிழா நடைபெறுவது வழக்கம். நடப்பாண்டில் இந்த திருவிழாவை முன்னிட்டு தமிழகத்தில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.

சிறப்பு பேருந்துகள்

தமிழகத்தில் பண்டிகை, திருவிழா உள்ளிட்ட காலத்தில் பொதுமக்களுக்கு ஏதுவாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கமாகும். அந்த வகையில் தற்போது நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய மாதா பேராலயம் உள்ளது. இந்த ஆலயம் கீழை நாடுகளின் லூர்து நகராக கருதப்படுகிறது. மேலும் இந்த ஆலயம் தான் இந்தியாவிலேயே முதன் முதலாக பசிலிக்கா என்ற ஆலய கட்டிட அமைப்பில் கட்டப்பட்டுள்ள ஆலயமாகும். அத்துடன் இந்த ஆலயம் வங்கக்கடலுக்கு எதிரே அமைந்திருப்பது மேலும் அழகாக விளங்குகிறது.

TNPSC யில் குரூப் 5A தேர்வு அறிவிப்பு – 161 காலிப்பணியிடங்கள்! முழு விவரம் இதோ!

இந்த ஆலயத்திற்கு வெளி மாநிலங்களில் இருந்தும், வெளி ஊர்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை புரிவார்கள். மேலும் தற்போது வேளாங்கண்ணியில் 3 அற்புதங்களை நடத்திய அன்னை மரியாவின் பிறந்த நாள் வருகிற செப்டம்பர் 8ம் தேதி அன்று கொண்டாடப்பட உள்ளது. அன்னை மரியாவின் பிறந்தநாளை முன்னிட்டு ஆண்டுதோறும் 10 நாட்கள் ஆண்டுபெருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதனால் இந்த திருவிழாவுக்கு ஏராளமான பக்தர்கள் வருகை புரிவார்கள். அதனால் இவர்களுக்கு உதவும் வகையில் தமிழக போக்குவரத்து துறை முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

இந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, வேளாங்கண்ணி புனித அன்னை ஆரோக்கிய மாதா ஆலய விழாவை முன்னிட்டு இன்று முதல் வருகிற செப்டம்பர் 11ம் தேதி வரை பக்தர்களின் நலன் கருதி சிறப்பு பேருந்துகளை இயக்க உள்ளதாக போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. மேலும் 750 சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. குறிப்பாக, சென்னை, பெங்களூரு, தூத்துக்குடி, கன்னியாகுமரி, நாகர்கோயில் உள்ளிட்ட இடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்து துறை வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here