தமிழகத்தில் இன்று முதல் 16,895 சிறப்பு பேருந்துகள் இயக்கம் – போக்குவரத்துகழகம் அறிவிப்பு!!
தமிழகத்தில் தீபாவளி பண்டிகையையொட்டி 16,895 சிறப்பு பேருந்துகள் இயங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறப்பு பேருந்துகள்:
தமிழகத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இன்று முதல் 3 நாட்களுக்கு தமிழ்நாடு போக்குவரத்து கழகத்தின் சார்பில் சிறப்பு பேருந்துகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொதுவாகவே, தமிழகத்தில் வார இறுதி நாட்களில் 2100 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் நிலையில் ஒவ்வொரு நாளும் கூடுதலாக 4575 பேருந்துகள் வீதம் மொத்தமாக 10,975 சிறப்பு பேருந்துகள் இயங்கவுள்ளது.
கல்லூரிகளில் அரங்கேறும் ராகிங் – தடுப்பு குழு அமைக்க உத்தரவு.. இயக்குனர் சுற்றறிக்கை!
இது போக, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு கூடுதலாக 5,920 சிறப்பு பேருந்துகளும் இயங்கவுள்ளது. மேலும், தீபாவளியையொட்டி ஆம்னி பேருந்துகளில் கட்டணம் ரூ.4000 வரையிலும் வசூல் செய்யப்படும் நிலையில் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். ஆம்னி பேருந்து கட்டணம் 30% வரை குறைக்க வேண்டும் என அரசு அறிவித்தும் பேருந்து கட்டணம் கூடுதலாக வசூல் செய்யப்பட்டு வருகிறது.