தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான சிறப்பு பேருந்து வசதி – களைகட்டும் தீபாவளி விடுமுறை!
தீபாவளிக்கான விடுமுறை நீட்டிக்கப்பட்டு இன்று பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பண்டிகை முடிந்து பலரும் தங்கள் இருப்பிடங்களுக்கு திரும்ப தொடங்கியுள்ளனர்.
சிறப்பு பேருந்துகள்:
தமிழக அரசு தொடர் விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில் பொதுமக்களின் போக்குவரத்திற்கு வசதியாக கூடுதலாக சிறப்பு பேருந்துகள் மற்றும் சிறப்பு ரயில்களை இயக்கி வருகிறது. நடப்பு ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு பேருந்து மற்றும் ரயில் முன்பதிவுகள் மூன்று மாதங்களுக்கு முன்பிருந்து தொடங்கியது. தமிழக அரசு தீபாவளி பண்டிகை நவம்பர் 12ம் தேதி ஆன ஞாயிற்றுக்கிழமை வந்த காரணத்தினால் நவம்பர் 13ம் தேதி திங்கட்கிழமையும் பொதுமக்கள் தங்கள் பயணத்தை மேற்கொள்வதற்கு வசதியாக விடுமுறையை அறிவித்தது.
TET தேர்வுக்கு தயாராகுறீர்களா? உங்களுக்கான அறிய வாய்ப்பு!!
நேற்று தீபாவளி பண்டிகை முடிந்த நிலையில் பெரும்பாலான மக்கள் மாலை நேரங்களில் இருந்து மீண்டும் தங்கள் இருப்பிடங்களுக்கு திரும்ப தொடங்கியுள்ளனர். இதில் குறிப்பாக சென்னைக்கு மட்டும் வழக்கமான பேருந்துகள் 2,100-ம் சிறப்பு பேருந்துகள் 3,160 இயக்கப்படுகிறது. இதே போல் மற்ற மாவட்டங்களுக்கு இடையே 3825 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.