தமிழக பொதுத்தேர்வு மாணவர்களுக்கான சிறப்பு ஏற்பாடு – 1098 உதவி எண் குறித்து அமைச்சர் விளக்கம்!
தமிழகத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ள நிலையில் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளில் ஏதேனும் குழப்பங்கள் இருப்பின் அதனை அறிந்துகொள்ள உதவி எண்ணையும் அமைச்சர் அன்பில் மகேஷ் வழங்கியுள்ளார்.
பொதுத்தேர்வு முடிவுகள்:
தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே கொரோனா பரவலின் காரணமாக மாணவர்களுக்கு பொதுத் தேர்வு எதுவும் நடத்தப்படாமல் அனைவரும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது. 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்குமே பொதுத்தேர்வு எதுவும் வைக்கப்படாமல் முந்தைய வகுப்பில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்ணை கொண்டு மாணவர் சேர்க்கை நடைபெற்றது. இந்த ஆண்டு 9 முதல் 12ஆம் வகுப்பு வரை பயின்ற மாணவர்கள் அனைவருக்குமே பொதுத் தேர்வு நடத்தப்பட்டது.
TN Job “FB
Group” Join Now
12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே 5-ஆம் தேதி முதல் பொதுத் தேர்வு துவங்கப்பட்டது மற்றும் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே 9-ஆம் தேதி முதல் பொதுத் தேர்வு துவங்கப்பட்டது. ஏற்கனவே பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூலை 17ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாவதாக இருந்தது. பின்னர், தேர்வு முடிவுகள் மாற்றியமைக்கப்பட்டு 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு காலை 9:30 மணிக்கும், பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு 12:00 மணிக்கும் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது.
தனது கணவரை விவாகரத்து செய்தாரா விஜய் டிவி பிரியங்கா? அவரே சொன்ன விளக்கம்! ரசிகர்கள் ஷாக்!
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை கிட்டத்தட்ட 9,12,620 பேர் எழுதியுள்ளனர். இதில் மாணவிகள் 4,52,499 பேரும், மாணவர்கள் 4,60,120 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவரும் பத்தாம் வகுப்புத் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார். மேலும், மொத்தமாக 10 ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்களில் 8,21,994 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு கூடிய விரைவிலேயே மறு தேர்விற்கு ஏற்பாடு செய்யப்படும் எனவும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். தேர்வு முடிவுகளில் ஏதேனும் குழப்பங்கள் இருப்பின் மாணவர்கள் 1098 என்கிற உதவி எண்ணை அழைக்கலாம் எனவும் அறிவித்துள்ளார்.
TNPSC Online Classes
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்