கொரோனா வைரஸை எதிர்க்கும் “SP1-77” ஆண்டிபாடி கண்டுபிடிப்பு – விரைவில் நடைமுறை!

0
கொரோனா வைரஸை எதிர்க்கும்
கொரோனா வைரஸை எதிர்க்கும் "SP1-77" ஆண்டிபாடி கண்டுபிடிப்பு - விரைவில் நடைமுறை!
கொரோனா வைரஸை எதிர்க்கும் “SP1-77” ஆண்டிபாடி கண்டுபிடிப்பு – விரைவில் நடைமுறை!

இந்தியா முழுவதும் கொரோனா பரவல் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இதற்கெதிராக பல்வேறு வகையான தடுப்பூசி மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கொரோனா வைரஸின் அனைத்து வெறியாண்டையும் எதிர்க்கும் வகையில் தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது.

SP1-77 ஆண்டிபாடி

உலக நாடுகள் முழுவதிலும் கொரோனா வைரஸ் பெரும் உயிர் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து தற்போது ஊரடங்கு கட்டுப்பாடுகள், தடுப்பூசி ஆகியவற்றின் காரணமாக கொரோனா பரவல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இதில் குறிப்பாக கொரோனா வைரஸை எதிர்த்து போராடும் ஒரே ஆயுதமாக கொரோனா தடுப்பூசி விளங்குகிறது. அதனால் இதனை உலக மக்கள் அனைவரும் கட்டாயமாக செலுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு வருகிறார்கள். அத்துடன் கொரோனா தடுப்பூசி குறித்த விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் நாளை (செப்.08) இந்த ஏரியாகளில் Power Cut – முழு தகவல் இதோ!

ஆனாலும் கொரோனா வைரஸ் பல்வேறு வகைகளில் உருமாற்றம் கண்டு முன்பை விட வேகமாக பரவும் தன்மை கொண்டதாக மாறி வருகிறது. அதனால் அனைத்து வெறியாண்டையும் (Variant) எதிர்க்கும் வகையில் தடுப்பூசி கண்டுபிடிக்க அனைத்து விஞ்ஞானிகளும் முயற்சித்து வருகின்றனர். இந்த வேளையில் பாஸ்டன் குழந்தைகள் மருத்துவமனை மற்றும் டியூக் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இணைந்து “SP1-77” எனப்படும் ஆன்டிபாடியை கண்டுபிடித்துள்ளனர். இந்த தடுப்பூசியானது கொரோனா வைரஸின் அனைத்து வெறியாண்டுடன் (Variant) எதிர்த்து போராடுவதாக இருக்கும் என்று தகவல்கள் கிடைத்துள்ளது.

பொதுவாக எலிகளுக்கு புதிதாக கண்டுபிடிக்கப்படும் மருந்துகள் செலுத்தப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்படும். ஏனெனில் எலிகளுக்கும் மனிதனுக்கும் நோயெதிர்ப்பு அமைப்பு ஒன்றாக உள்ளது. ஆனால் ஆன்டிபாடிக்கள் தயாரிப்பதில் சோதனை முறை மாறுபடும். ஆனாலும் “SP1-77” எனப்படும் ஆன்டிபாடி எலிகள் மீது செலுத்தி சோதனை மேற்கொண்டபோது ஆய்வில் எந்தவிதமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என உறுதியாக கூறமுடிவதில்லை என நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும் இந்த ஆய்வு ஆரம்ப கட்டம் என்பதால் இது தொடர்பாக மேலும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு விரைவில் நடைமுறைக்கு கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!