தமிழகத்தில் செப்.25 முதல் குறைய துவங்கும் தென்மேற்கு பருவமழை – வானிலை மையம் அறிவிப்பு!
தமிழகத்தில் செப். 25ம் தேதிக்கு பிறகு தென்மேற்கு பருவமழை படிப்படியாக குறைந்து வடகிழக்கு பருவமழை துவங்கும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.
பருவமழை:
தென் தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் தென் மேற்கு பருவமழை காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. மேலும், இந்த கனமழை அடுத்த ஒரு வாரத்திற்கு நீடிக்கும் எனவும் வானிலை மையம் அறிவித்துள்ளது. இரவும், பகலுமாக தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் ஓரளவுக்கு வெப்பம் தணிந்து தமிழகத்தில் குளிர்ச்சி நிலவுவதாக பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
Follow our Instagram for more Latest Updates
இந்நிலையில், செப்டம்பர் 25 ஆம் தேதி முதல் இந்தியாவில் படிப்படியாக தென் மேற்கு பருவமழை குறைய துவங்கும் என வானிலை மையம் புதிய அறிக்கையினை வெளியிட்டுள்ளது. மேலும், தென் மேற்கு பருவமழை முடிந்த பிறகு அக்டோபர் 3ம் வாரத்தில் இருந்து வடகிழக்கு பருவமழை துவங்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் செப்.23 ஆம் தேதி முதல் செப்.30 வரை 6 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை – வெளியான அறிவிப்பு!
மேலும், கடந்த சில நாட்களாக விடாது மழை பெய்து வந்த நிலையில் போதுமான காய்கறிகளின் விளைச்சல் இல்லாமலும், வெளி மாநிலங்களில் பயிர் சேதமும் ஏற்பட்டிருந்தது. இனி பெருமளவில் எந்தவித சேதமும் இருக்காது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.