ரயில் பயணிகள் கவனத்திற்கு – தெற்கு ரயில்வே எச்சரிக்கை அறிவிப்பு!

0
ரயில் பயணிகள் கவனத்திற்கு - தெற்கு ரயில்வே எச்சரிக்கை அறிவிப்பு!
ரயில் பயணிகள் கவனத்திற்கு - தெற்கு ரயில்வே எச்சரிக்கை அறிவிப்பு!
ரயில் பயணிகள் கவனத்திற்கு – தெற்கு ரயில்வே எச்சரிக்கை அறிவிப்பு!

ரயிலில் டிக்கெட் இல்லாமல் பயணம் மேற்கொள்பவர்கள், மேலும் குற்றங்கள் செய்பவர்களுக்கு எவ்வளவு அபராதம் மற்றும் சிறை தண்டனை குறித்த தகவல்களை தெற்கு ரயில்வே வெளியிட்டு உள்ளது.

எச்சரிக்கை அறிவிப்பு:

நாடு முழுவதும் கொரோனா தாக்கம் அதிகரித்து வந்ததால், பொதுமக்கள் பாதுகாப்புக்காக பேருந்து மற்றும் ரயில் சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. இருப்பினும் தற்போது நோய் தொற்று குறைந்து வருவதால் மீண்டும் ரயில் சேவைகள் தொடங்கி உள்ளது. இந்த நிலையில் ரயில் பயணிகளுக்கு எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை ரயில்வே நிர்வாகம் வெளியிட்டு உள்ளது. இந்த வகையில் ரயிலில் பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்கும் தினங்களில் நிறைய பேர் டிக்கெட் எடுக்காமல் பயணிக்கின்றன என்று தகவல் வெளியாகியது.

சினிமா நடிகைகளை விட அதிக சம்பளம் வாங்கும் விஜய் டிவி சீரியல் நடிகைகள் – ரசிகர்கள் ஷாக்!

இந்த தகவல் அடிப்படையில் சோதனை செய்யப்பட்டு டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்யும் பயணிகள் சிக்கினால் அவர்கள் மீது அபராதம், சிறை தண்டனை போன்ற கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இந்த வகையில் ரயில் பயணத்தில் செய்யும் சிறு தவறுகளுக்கு அபராதம், தண்டனை குறித்த முழு விவரத்தையும் தெற்கு ரயில்வே வெளியிட்டு உள்ளது.

தமிழக இல்லத்தரசிகளுக்கு 1000 ரூபாய் உரிமைத்தொகை – முக்கிய அறிவிப்பு வெளியீடு!

1. டிக்கெட் அல்லது பாஸ் இல்லாமல் பயணம் செய்பவர்களுக்கு ரயில்வே சட்டம் பிரிவு 138 இன் கீழ், பயணித்த தூரம் அல்லது ரயில் புறப்பட்ட நிலையத்திலிருந்து எவ்வளவு கட்டணமோ,அது வசூலிக்கப்படும். குறைந்தபட்சம் ரூ.250 ரூபாய். இவை இரண்டில் எது அதிகமோ அது வசூலிக்கப்படும்.

2. மோசடியான பயணம் வைத்திருப்பவர்களுக்கு ரயில்வே சட்டம் பிரிவு 137 இன் கீழ் 6 மாத சிறை தண்டனை. ரூ.1,000 அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும்.

3. அலாரம் சங்கிலியை இழுக்கும் செயலை செய்பவர்களுக்கு ரயில்வே சட்டம் பிரிவு 137 இன் கீழ் 6 மாத சிறை தண்டனை,ரூ.1,000 அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும்.

4.ஊனமுற்ற பயணிகளுக்காக ஒதுக்கப்பட்ட பெட்டியில் பயணம் செய்தால் ரயில்வே சட்டம் பிரிவு 155 (அ)இன் படி, 3 மாத சிறை அல்லது ரூ.500 அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும்.

5.அத்துமீறி நுழையும் பயணிகளுக்கு ரயில்வே சட்டம் பிரிவு 147 இன் கீழ் 6 மாத சிறை தண்டனை அல்லது ரூ.1,000 அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும்.

6.மேற்கூரையில் பயணம் செய்பவருக்கு,ரயில்வே சட்டம் பிரிவு 156 இன் கீழ் 3 மாத சிறை தண்டனை அல்லது 500 ரூபாய் அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும்.

மத்திய அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி (DA) உயர்வு? கணக்கீட்டு விவரங்கள் இதோ!

7.தொல்லை கொடுப்பது, குப்பை கொட்டுவது போன்ற செயலில் ஈடுபட்டால் ரயில்வே சட்டம் பிரிவு. 145 (b)இன் கீழ் முதல் குற்றத்திற்கு ரூ.100 அபராதம், 2வது மற்றும் தொடர்ந்து செய்தால் ரூ.250 அபராதமும் ஒரு மாதம் சிறை தண்டனையும் விதிக்கப்படும்.

8.பில் ஒட்டுதல் போன்ற செயலில் ஈடுபட்டால் ரயில்வே சட்டம் பிரிவு 166 (b)இன் கீழ் 6 மாத சிறை தண்டனை, 500 ரூபாய் அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும்.

9.விளம்பரப்படுத்துதல் போன்ற செயலில் ஈடுபடுபவருக்கு ரயில்வே சட்டம் பிரிவு 143 இன் கீழ் 3 ஆண்டுகள் சிறை.10,000 ரூபாய் அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும்.

10.அங்கீகரிக்கப்படாத விற்பனை செய்பவர்களுக்கு ரயில்வே சட்டம் பிரிவு 144 இன் கீழ் ஒரு வருடம் சிறை, அபராதம் குறைந்தது 1,000 ரூபாய். அதிகபட்சம் 2,000 ரூபாய் அல்லது இரண்டும் விதிக்கப்படும்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here