ரயில் பயணிகளின் கவனத்திற்கு – தெற்கு ரயில்வேயின் சூப்பர் அறிவிப்பு!

0
ரயில் பயணிகளின் கவனத்திற்கு - தெற்கு ரயில்வேயின் சூப்பர் அறிவிப்பு!
ரயில் பயணிகளின் கவனத்திற்கு - தெற்கு ரயில்வேயின் சூப்பர் அறிவிப்பு!
ரயில் பயணிகளின் கவனத்திற்கு – தெற்கு ரயில்வேயின் சூப்பர் அறிவிப்பு!

கொரோனா பெருந்தொற்று காலத்தில் பாதுகாப்பு காரணங்களுக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பயணிகள் ரயில் சேவை மீண்டும் துவங்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதனால் ரயில் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பயணிகள் ரயில் சேவை:

கடந்த 2020ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் கொரோனா தொற்று நோய் தமிழகத்தில் பரவ தொடங்கியது. இதனால் நோய் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தது. அனைத்து வகையான பொதுப்போக்குவரத்துகளும் தடை செய்யப்பட்டது. அரசு ஊழியர்கள், மருத்துவ மற்றும் தூய்மை பணியாளர்கள் பயணம் செய்வதற்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டது.

மத்திய அரசின் PM கிசான் திட்ட விவசாயிகளுக்கு ரூ.2000 – முழு விவரம் இதோ!

இவர்களின் பயணத்திற்காக குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டும் அரசு பேருந்துகள், மெட்ரோ, எலக்ட்ரிக் ரயில்கள் இயக்கப்பட்டது. மற்றபடி அனைத்து வித போக்குவரத்துகளும் முடக்கப்பட்டது. அதன் பிறகு, கொரோனா தொற்று பாதிப்புகள் குறைந்த பின்னர் ஊரடங்கு கட்டுப்பாடுகளில் மெல்ல தளர்வுகள் அளிக்கப்பட்டது. இதனால் பொதுப் போக்குவரத்து வாகனங்கள் இயக்கம் தொடங்கியது.

ஆனால் பயணிகள் ரயில் சேவை தடை செய்யப்பட்டு, முன்பதிவு ரயில்கள் மட்டுமே இயங்கியது. தற்போது அனைத்து வித நோய் கட்டுப்பாடுகளும் நீக்கப்பட்டு, இயல்பு நிலை திரும்பியுள்ளதால் பயணிகள் ரயில் சேவையை மீண்டும் தொடங்க உள்ளதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி செயல்பட உள்ள பயணிகள் ரயிலின் பட்டியலையும் வெளியிட்டுள்ளது. மேலும் இவை அனைத்தும் முன்பதிவில்லா விரைவு ரயில்களாக இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரயில்களின் பட்டியல்:

மே 30 – ஆம் தேதி முதல் மதுரையில் இருந்து காலை 06.35 மணிக்கு ராமேஸ்வரத்திற்கும், மறுமார்க்கத்தில் ராமேஸ்வரத்தில் இருந்து மாலை 06.05 மணிக்கு மதுரைக்கும் ரயில் இயக்கப்படுகிறது.

Exams Daily Mobile App Download

மே 23 – ஆம் தேதி முதல் மேட்டுப்பாளையத்தில் இருந்து காலை 10.55 மணிக்கு கோவைக்கும், மறுமார்க்கத்தில் மாலை 03.45 மணிக்கு கோவையில் இருந்து மேட்டுப்பாளையத்துக்கும் ரயில் சேவை தொடங்குகிறது.

திருச்செந்தூரில் இருந்து காலை 07.10 மணிக்கு நெல்லைக்கும், மறுமார்க்கத்தில் மாலை 06.45 மணிக்கு நெல்லையில் இருந்து திருச்செந்தூருக்கும் பயணிகள் ரயில் இயக்கப்படுகிறது.

மே 30 – ஆம் தேதி முதல் நெல்லையில் இருந்து மாலை 06.15 மணிக்கு செங்கோட்டைக்கும், செங்கோட்டையில் இருந்து காலை 06.40 மணிக்கு நெல்லைக்கு ரயில்கள் இயக்கப்படவுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here