தமிழகத்தில் ஜூலை 1 வரை சிறப்பு ரயில் சேவைகள் ரத்து – தெற்கு ரயில்வே அறிவிப்பு!

0
தமிழகத்தில் ஜூலை 1 வரை சிறப்பு ரயில் சேவைகள் ரத்து - தெற்கு ரயில்வே அறிவிப்பு!
தமிழகத்தில் ஜூலை 1 வரை சிறப்பு ரயில் சேவைகள் ரத்து - தெற்கு ரயில்வே அறிவிப்பு!
தமிழகத்தில் ஜூலை 1 வரை சிறப்பு ரயில் சேவைகள் ரத்து – தெற்கு ரயில்வே அறிவிப்பு!

தமிழகத்தில் கொரோனா அச்சம் காரணமாக ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் ரயில்களில் பயணிகள் கூட்டம் குறைந்து வருகிறது. இதனால் ஜூலை 1ம் தேதி வரை 25 சிறப்பு ரயில்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

சிறப்பு ரயில்:

தமிழகத்தில் ஒரு மாத காலத்திற்கும் மேலாக ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் இருந்து வருகிறது. இதனால் பேருந்து பொது போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. ஆனால் ரயில் போக்குவரத்து தொடர்ந்து இயங்க தமிழக அரசு அனுமதி வழங்கியது. இதை அடுத்து தமிழகத்தில் சிறப்பு ரயில்கள் தொடர்ந்து இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா அச்சம் காரணமாக ரயில்களில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து குறைவாக காணப்பட்டு வருகிறது.

தமிழக அரசு பணியாளர் தேர்வாணைய (TNPSC) காலிப்பணியிடங்கள் – அரசுக்கு கோரிக்கை!

மேலும் சில வழித்தடங்களில் ரயில்கள் காலி பெட்டிகளுடன் இயங்கி வருகிறது. இதுபோல் தொடர்ந்து செயல்பட்டால் ரயில்வே துறைக்கு கடும் நிதிச்சுமை ஏற்படும். இதனை கருத்தில் கொண்டு தெற்கு ரயில்வே ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் நிலவும் கொரோனா அச்சம் காரணமாக ஜூலை 1ம் தேதி வரை தற்காலிகமாக 25 சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்படவுள்ளதாக தெரிவித்தது. தற்போது ரத்து செய்யப்பட்ட ரயில்கள் குறித்த விவரம் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் ஒரே நாளில் 62,224 பேருக்கு கொரோனா தொற்று – 2,542 பேர் பலி!!

ரத்து செய்யப்படும் சிறப்பு ரயில்கள்:

  • சென்னை சென்ட்ரல் – ஏரோதுக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில் (02649) ஜூன் 17 முதல் ஜூலை 1 வரை ரத்து.
  • ஈரோடு – சென்னை சென்ட்ரலுக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில் (02650) ஜூன் 16 முதல் ஜூன் 30 வரை ரத்து.
  • சென்னை எழும்பூர் – திருச்சிராப்பள்ளிக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில் (02653) ஜூன் 17 முதல் ஜூலை 1 வரை ரத்து.
  • திருச்சிராப்பள்ளி -சென்னை எழும்பூருக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில் (02654) ஜூன் 16 முதல் ஜூன் 30 வரை ரத்து.
  • சென்னை எழும்பூர் – நாகர்கோவிலுக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில் (06063) ஜூன் 17, 24 ஆகிய தேதிகளில் ரத்து.
  • நாகர்கோவில் – சென்னை எழும்பூருக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில் (06064) ஜூன் 18, 25 ஆகிய தேதிகளில் ரத்து.
  • தாம்பரம் – நாகர்கோவிலுக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில் (06065) ஜூன் 16, 20, 21, 23, 27, 28, 30 ஆகிய தேதிகளில் ரத்து.
  • நாகர்கோவில் – தாம்பரத்திற்கு இயக்கப்படும் சிறப்பு ரயில் (06066) ஜூன் 17, 21, 22, 24, 28, 29 ஆகிய தேதிகளில் ரத்து.
  • சென்னை எழும்பூர் – மதுரைக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில் (06157) ஜூன் 18, 20, 25, 27 ஆகிய தேதிகளில் ரத்து.
  • மதுரை – சென்னை எழும்பூருக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில் (06158) ஜூன் 17, 19, 24, 26 ஆகிய தேதிகளில் ரத்து.
  • சென்னை எழும்பூர் – தஞ்சாவூர் (06865), சென்னை சென்ட்ரல் – மேட்டுப்பாளையம் (02671), சென்னை எழும்பூர் – ராமேஸ்வரம் சிறப்பு ரயில் (06851), சென்னை எழும்பூர் – மன்னார்குடி சிறப்பு ரயில் (06179) உள்பட 25 சிறப்பு ரயில்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!