தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு? 74 சிறப்பு ரயில்கள் ரத்து, முழு விபரம் இதோ!

0
தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு? 74 சிறப்பு ரயில்கள் ரத்து, முழு விபரம் இதோ!
தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு? 74 சிறப்பு ரயில்கள் ரத்து, முழு விபரம் இதோ!
தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு? 74 சிறப்பு ரயில்கள் ரத்து, முழு விபரம் இதோ!

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் இயங்கி வந்த 74 சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ரத்து செய்யப்பட்ட ரயில்களின் விவரங்களை இந்த பதிவில் காண்போம்.

சிறப்பு ரயில்கள் ரத்து:

தமிழகத்தில் கொரோனா தொற்றின் பரவல் நேற்று ஒரு நாளில் மட்டும் 24,898 ஆக பதிவாகியுள்ளது. தொற்று பரவலில் நேற்றைய பதிவு தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 20ம் தேதியில் இருந்து இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாள் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இருப்பினும் தொற்று கட்டுக்குள் வராத காரணத்தால் நேற்று முதல் மே 20 வரை புதிய கட்டுப்பாடுகள் தமிழகத்தில் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்படுகிறது.

TN Job “FB  Group” Join Now

இதனால் பகல் 12 மணி வரை மட்டுமே மளிகை, பலசரக்கு, இறைச்சி கடைகள் செயல்பட அனுமதியளிக்கப்பட்டுள்ளது. மற்ற கடைகள் அனைத்தும் திறப்பதற்கு அனுமதி இல்லை. மாநிலம் முழுவதும் பொதுப்போக்குவரத்திற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் செயல்பட்டு வந்த சிறப்பு ரயிகளில் பயணிகள் யாரும் கொரோனா அச்சம் காரணமாக பயணிப்பதில்லை. இதனால் ரயில்வே நிர்வாகம் தமிழகத்தில் செயல்பட்டு வந்த 74 சிறப்பு ரயில்களின் சேவையை ரத்து செய்துள்ளது.

ரத்து செய்யப்பட்ட சிறப்பு ரயில்களின் பட்டியல்:

 • எழும்பூர்-காரைக்குடி (ரயில் எண் 02605) சிறப்பு ரயில் (மே 8 முதல் 31ம் தேதி வரை) மற்றும் காரைக்குடி-எழும்பூர் (ரயில் எண் 02606) சிறப்பு ரயில் (மே 9 முதல் ஜூன் 1 வரை)
 • எழும்பூர்-மதுரை (ரயில் எண் 02613) மற்றும் மதுரை-எழும்பூர் (ரயில் எண் 02614)
 • எழும்பூர்-மதுரை (ரயில் எண் 02635) மற்றும் மதுரை-எழும்பூர் (ரயில் எண் 02636)
 • எழும்பூர்-திருச்சி(ரயில் எண் 02653) மற்றும் திருச்சி-எழும்பூர் (ரயில் எண் 02654)
 • எழும்பூர்-மதுரை (ரயில் எண் 06157) மற்றும் மதுரை-எழும்பூர் (ரயில் எண் 06158)
 • சென்னை சென்ட்ரல்-ஈரோடு (ரயில் எண் 02649) மற்றும் ஈரோடு-சென்ட்ரல் (ரயில் எண் 02650)
 • சென்ட்ரல்-கோவை (ரயில் எண் 02673) மற்றும் கோவை-சென்ட்ரல் (ரயில் எண் 02674)
 • சென்ட்ரல்-கோவை (ரயில் எண் 02679) மற்றும் கோவை- சென்ட்ரல் (ரயில் எண் 02680)
 • சென்ட்ரல்-கோவை (ரயில் எண் 02681) மற்றும் கோவை-சென்ட்ரல் ( ரயில் 02682)
 • சென்ட்ரல்-மதுரை (ரயில் எண் 06019) மற்றும் மதுரை-சென்ட்ரல்(ரயில் எண் 06020)
 • எழும்பூர்-நாகர்கோவில் இடையே இயக்கப்பட்ட (ரயில் எண் 06063) சிறப்பு ரயில் வரும் 13ம் தேதியில் இருந்து 27ம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.
 • நாகர்கோவில்-எழும்பூர் இடையே இயக்கப்பட்ட (ரயில் எண் 06064) சிறப்பு ரயில் 14ம் தேதி முதல் 28ம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.
 • தாம்பரம்-நாகர்கோவில் (ரயில் எண் 06191),
 • சென்ட்ரல்-ஜோலார்பேட்டை (ரயில் எண் 06089) சிறப்பு ரயில்கள் 8ம் தேதியில் இருந்து 31ம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.
 • நாகர்கோவில்-தாம்பரம் (ரயில் எண் 06192),
 • ஜோலார்பேட்டை-சென்ட்ரல் ( ரயில் எண் 06090),
 • தாம்பரம்-நாகர்கோவில் ( ரயில் எண் 06065) சிறப்பு ரயில்கள் 9ஆம் தேதி முதல் 31ம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.
 • நாகர்கோவில்-தாம்பரம் (ரயில் எண் 06066) சிறப்பு ரயில் 10ஆம் தேதி முதல் ஜூன் மாதம் 1ம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.
 • திருவனந்தபுரம்-சென்ட்ரல் (ரயில்எண் 02698),
 • சென்ட்ரல்-திருவனந்தபுரம் (ரயில் எண் 02695),
 • நெல்லை-பாலக்காடு(ரயில் எண் 06791),
 • திருச்சி-பாலக்காடு (ரயில் எண் 06843) சிறப்பு ரயில்கள் 8ஆம் தேதி முதல் 31ம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.
 • சென்ட்ரல்-திருவனந்தபுரம் (ரயில் எண் 02697),
 • திருவனந்தபுரம்- சென்ட்ரல்(ரயில் எண் 02696), பாலக்காடு-நெல்லை (ரயில் எண் 06792), பாலக்காடு-திருச்சி (ரயில் எண் 06844) சிறப்பு ரயில்கள் வருகிற 9ம் தேதி முதல் ஜூன் மாதம் 1ம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.
 • எழும்பூர்-புதுச்சேரி (ரயில் எண் 06115) சிறப்பு ரயில் 8ஆம் தேதியில் இருந்து 31ம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.
 • புதுச்சேரி-எழும்பூர் (ரயில் எண் 06116) சிறப்பு ரயில் 9ஆம் தேதியில் இருந்து ஜூன் 1ஆம் தேதி வரையிலும் ரத்து செய்யப்படுகிறது.
 • சென்ட்ரல்-கே.எஸ்.ஆர்.பெங்களூரு(ரயில் எண் 06075),
 • கே.எஸ்.ஆர்.பெங்களூரு (ரயில் எண் 06076), சென்ட்ரல்-கே.எஸ்.ஆர் பெங்களூரு( ரயில் எண் 06079), கே.எஸ்.ஆர். பெங்களூரு-சென்ட்ரல்(ரயில் எண் 06080) சிறப்பு ரயில்கள் வரும் 8ஆம் தேதியில் இருந்து 31ம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.
 • நாகர்கோவில்-மங்களூரு (ரயில் எண் 06606) சிறப்பு ரயில்கள் 9ஆம் தேதியில் இருந்து ஜூன் 1ம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.
 • மங்களூரு-சென்ட்ரல் (ரயில் எண் 06628),
 • மங்களூரு-நாகர்கோவில் (ரயில் எண் 06605) சிறப்பு ரயில்கள் 8ஆம் தேதியில் இருந்து 31ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.
 • திருவனந்தபுரம்-மங்களூரு (ரயில் எண் 06347),
 • எர்ணாகுளம்-கே.எஸ்.ஆர் பெங்களூரு (02678),
 • கொச்சுவேலி-மங்களூரு(06355) சிறப்பு ரயில்கள் வரும் 8-ம்தேதி முதல் 31ம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.
 • மங்களூரு-திருவனந்தபுரம் (06348),
 • கே.எஸ்.ஆர் பெங்களூரு-எர்ணாகுளம்(02677),
 • எர்ணாகுளம்-பனாஸ்வாடி(06161)
 • மங்களூரு-கொச்சுவேலி(06356) சிறப்பு ரயில்கள் 9ஆம் தேதி முதல் ஜூன் 1ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.
 • பனாஸ்வாடி-எர்ணாகுளம் (06162) சிறப்பு ரயில் 10ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.
 • சென்ட்ரல்-திருப்பதி (06095),
 • திருப்பதி-சென்ட்ரல் (06096) சிறப்பு ரயில்கள் வரும் 8ஆம் தேதி முதல் 31ம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.
 • சென்ட்ரல்-நிசாமுதீன் (06151) சிறப்பு ரயில் 15ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை
 • நிசாமுதீன் சென்ட்ரல் (06152) சிறப்பு ரயில் 17ஆம் தேதி முதல் 31ம் தேதி வரை
 • திருவனந்தபுரம்-நிசாமுதீன் (06167) சிறப்பு ரயில் 11ஆம் தேதி முதல் 25ம் தேதி வரை,
 • நிசாமுதீன்-திருவனந்தபுரம்(06168) சிறப்பு ரயில் 14ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரையிலும் ரத்து செய்யப்படுகிறது.
 • திருவனந்தபுரம்-எர்ணாகுளம் (06304),
 • ஆலப்புலா-கொல்லம்(06013),
 • கொல்லம்-ஆலப்புலா (06014),
 • எர்ணாகுளம்-ஆலப்புலா (06015),
 • ஆலப்புலா-எர்ணாகுளம் (06016),
 • சோரணூர்-எர்ணாகுளம் (06017),
 • எர்ணாகுளம்-சோரணூர் (06018),
 • சோரணூர்-கண்ணூர் (06023),
 • கண்ணூர்-சோரணூர் (06024),
 • சோரணூர்-திருவனந்தபுரம் (06301),
 • திருவனந்தபுரம்-சோரணூர் (06302) சிறப்பு ரயில்கள் வரும் 8ஆம் தேதியில் இருந்து 31ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.
 • எர்ணாகுளம்-திருவனந்தபுரம் (06303),
 • திருவனந்தபுரம்-கண்ணூர்(02083) சிறப்பு ரயில்கள் 9ஆம் தேதி முதல் ஜூன் 1ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.
 • கண்ணூர்-திருவனந்தபுரம் (02081) சிறப்பு ரயில் 10ம் தேதி முதல் ஜூன் 1ம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.

இதேபோல் முன்பதிவில்லாத 18 சிறப்பு ரயில் சேவைகள் தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

 • மேட்டுப்பாளையம் – கோவை இடையே இயக்கப்பட்ட (ரயில் எண் 06009),
 • அரக்கோணம்-ஜோலார்பேட்டை (06085),
 • ஜோலார்பேட்டை-அரக்கோணம் (06085),
 • விருத்தாசலம்-சேலம் (06121),
 • சேலம்-விருத்தாசலம் (06121),
 • திருச்சி-கரூர் (06123),
 • திருச்சி-காரைக்குடி (06125),
 • விழுப்புரம்-மதுரை (06867),
 • எழும்பூர்-புதுச்சேரி (06025),
 • புதுச்சேரி-எழும்பூர் (06026) ஆகிய முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் 8ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.
 • தாம்பரம்-விழுப்புரம் (06027),
 • காரைக்குடி-திருச்சி (06126),
 • கரூர்-திருச்சி (06124),
 • மதுரை-விழுப்புரம் (06868) சிறப்பு முன்பதிவில்லா ரயில்கள் 9ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.
 • விழுப்புரம்-தாம்பரம் (06028),
 • சேலம்-அரக்கோணம் (06088),
 • அரக்கோணம்-சேலம் (06087) இடையே இயக்கப்பட்ட முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் 10ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுறது.

Velaivaippu Seithigal 2021

For => Online Test Seriesகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளிக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்
To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here