தென்னிந்திய அரசுகள்

0

 தென்னிந்திய அரசுகள்

சாளுக்கியர்கள்,  இராஷ்டிரகூடர்கள்:

        பல்லவர்கள் தவிர, தக்காணத்தில் ஆட்சிபுரிந்த மேலைச் சாளுக்கியரும், இராஷ்டிரகூடர்களும் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தவர்கள். இவ்விருவர்களுக்கும் தெற்கே இரண்டு அரசியல் போட்டியாளர்கள் இருந்தனர் – பல்லவர்களும் சோழர்களும். மேலும் அவர்களது பண்பாட்டுப் பங்களிப்பும் இந்திய வரலாற்றில் குறிப்பிடத்தக்கதாகும்.

சாளுக்கியர்கள் (கி.பி. 543 – 755):

 • சுமார் இரண்டு நூற்றாண்டுகள் தக்காணத்தின் பெரும்பகுதியை ஆட்சி செய்தவர்கள் சாளுக்கியர்கள். பின்னர், இராஷ்டிரகூடர்களின் வலிமை பெருகியது.
 • மேலைச் சாளுக்கியரின் வழிவந்தவர்கள் வெங்கியின் கீழைச் சாளுக்கியர்களும், கல்யாணிச் சாளுக்கியர்களும். மேலைச்சாளுக்கிய மரபைத் தோற்றுவித்தவர் முதலாம் புலிகேசி.
 • வாதாபி அல்லது தற்காலத்திய பாதாமியை தலைநகராகக் கொண்டு அவர் ஒரு சிறிய அரசை தோற்றுவித்தார்.

இரண்டாம் புலிகேசி (கி.பி. 608 – 642):

 • சாளுக்கிய மரபின் முக்கிய ஆட்சியாளர் இரண்டாம் புலிகேசி. ஜஹோலே கல்வெட்டு அவரது ஆட்சிக் காலத்தைப் பற்றிய விவரங்களைக் கூறுகிறது.
 • புனவாசி கடம்பர்களையும் மைசூர் கங்கர்களையும் எதிர்த்துப் போரிட்டு தனது ஆதிக்கத்தை அவர் நிலைநிறுத்தினார்.
 • கங்க அரசர் துர்விநீதன் அவரது மேலாண்மையை ஏற்றுக்கொண்டு தனது மகளையும் இரண்டாம் புலிகேசிக்கு மணமுடித்துக் கொடுத்தார்.
 • நர்மதையாற்றங்கரையில் ஹர்ஷவர்த்தனரை முறியடித்தது இரண்டாம் புலிகேசியின் மற்றொரு மகத்தான சாதனையாகும். தென்னிந்தியாவைக் கைப்பற்ற வேண்டும் என்ற ஹர்ஷரின் எண்ணத்தை சிதைத்தவன் இரண்டாம் புலிகேசி.
 • பல்லவர்களுக்கெதிரான தனது முதல் படையெடுப்பில் அவர் வெற்றிபெற்றார். ஆனால், காஞ்சிக்கருகில் முதலாம் நரசிம்மவர்மனிடம் படுதோல்வியைத் தழுவினார்.
 • பின்னர், சாளுக்கிய தலைநகரம் வாதாபி பல்லவர்களால் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டது. இரண்டாம் புலிகேசியின் ஆட்சிக் காலத்தில் சீனப்பயணி யுவான்சுவாங் அவனது நாட்டிற்கும் வருகை புரிந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 • இரண்டாம் புலிகேசிக்குப்பின் ஆட்சிக்கு வந்தவர் விக்ரமாதித்தன்.
 • அவன் சாளுக்கிய நாட்டை மீண்டும் நிலைப்படுத்தி பல்லவர்களை முறியடித்ததோடு, காஞ்சியையும் கைப்பற்றினார்.
 • பல்லவர்களிடம் தனது தந்தை அடைந்த தோல்விக்கு விக்ரமாதித்தன் பழிதீர்த்துக் கொண்டான் சாளுக்கிய மரபின் கடைசி அரசர் இரண்டாம் கீர்த்திவர்மன்.
 • அவனை முறியடித்து இராஷ்டிரகூட அரசை நிறுவியவன் தந்தி துர்க்கன்.
 • சாளுக்கியரின் ஆட்சிமுறை, சமூக வாழ்க்கை
 • பல்லவர்கள், சோழர்கள் ஆட்சி முறைக்கு மாறாக, சாளுக்கிய ஆட்சிமுறையில் அதிகாரம் மையப்படுத்தப்ட்டே இருந்தது.
 • சாளுக்கியரின்கீழ் கிராம சுயாட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை. சாளுக்கியர்கள் சிறந்த கடற்படையைக் கொண்டிருந்தனர்.
 • இரண்டாம் புலிகேசியின் கடற்படையில் நூறு கப்பல்கள் இருந்தன. மேலும்ää நிரந்திரமான சிறு படையையுயும் அவர்கள் வைத்திந்தனர்.
 • பாதாமி சாளுக்கியர்கள் பிராமணீய இந்துக்கள், இருப்பினும் அவர்கள் பிற சமயத்தவரையும் மதித்து நடந்தனர்.
 • வேத சமய சடங்குகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. சாளுக்கிய மரபைத் தோற்றுவித்த முதலாம் புலிகேசி குதிரைவேள்வியை செய்தார்.
 • விஷ்ணு, சிவன் போன்ற கடவுளருக்கு ஏராளமான கோயில்கள் அவர்களது காலத்தில் கட்டப்பட்டன.
 • மேற்குத் தக்காணத்தில் புத்த சமயம் வீழ்ச்சியடைந்தது வந்தது என்று யுவான் சுவாங் தமது பயணக்குறிப்பில் கூறியுள்ளார்.
 • ஆனால், இப்பகுதியில் சமண சமயம் நிலையான வளர்ச்சியைப் பெற்று வந்தது.
 • இரண்டாம் புலிகேசியின் அவைப் புலவரும், ஐஹோலே கல்வெட்டைத் தொகுத்தவருமான ரவிகீர்த்தி ஒரு சமணர்.

கலை, கட்டிடக் கலை

 • சாளுக்கியர்கள் கலை வளர்ச்சிக்கு பெரிதும் பங்காற்றியுள்ளனர். கட்டுமானக் கோயில்களை கட்டுவதற்கு அவர்கள் வேசர கலைப்பாணியை பின்பற்றினர்.
 • இருப்பினும், இராஷ்டிரகூடர் மற்றும் ஹோய்சளர் ஆட்சிக் காலத்தில்தான் வேசர கலைப்பாணி அதன் உச்ச கட்டத்தை எட்டியது.
 • ஐஹோலே, பாதாமி, பட்டாடக்கல் ஆகிய இடங்களில் சாளுக்கியரின் கட்டுமானக் கோயில்களைக் காணலாம்.
 • சாளுக்கியர் காலத்தில் குடைவரைக் கோயில்களும் சிறப்பு பெற்றிருந்தன.
 • அஜந்தா, எல்லோரா, நாசிக் ஆகிய இடங்களில் சாளுக்கியரின் குடைவரைக் கோயில்களைக் காணலாம்.
 • புதாமி குகைக்கோயில் மற்றும் அஜந்தா குகைகளில் சாளுக்கியர் கால ஓவியங்களைக் காணமுடிகிறது.
 • இரண்டாம் புலிகேசி ஒரு பாரசீகத்தூதுக் குழுவிற்கு வரவேற்பு அளிப்பது போன்று அஜந்தா ஓவியத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளது.
 • சாளுக்கியர் கால கோயில்களை இரண்டு நிலைகளாகப் பிரிக்கலாம். ஐஹோலேää பாதாமி ஆகிய இடங்களிலுள்ள கோயில்கள் முதல்நிலை. ஐஹோலேவில் உள்ள எழுபது கோயில்களில் நான்கு மட்டும் சிறப்பாக குறிக்கப்பட வேண்டியவை –
 • லட்கான் கோயில் – சமதளக் கூரையுடன் கூடிய இக்கோயிலில்
 • தூண்களையுடைய மண்டபம் உள்ளது.
 • ஒரு புத்த சைத்தியத்தைப் போல தோற்றமளிக்கும் துர்க்கை கோயில்
 • ஹீச்சிமல்லி குடி கோயில்
 • மெகுதி என்ற இடத்திலுள்ள சமணக் கோணில்
 • பாதாமியில் உள்ள கோயில்களில் முகத்தீஸ்வரர் கோயிலும், மேலக்குட்டி சிவன் கோயிலும் அவற்றின் கட்டிடக் கலைக்கும் அழகிற்குப் பெயர் பெற்றவை.
 • ஒரேயிடத்திலுள்ள நான்கு குடைவரைக் கோயில்கள் அவற்றின் கலைநயமுள்ள வேலைப்பாட்டிற்கு எடுத்துக்காட்டு.
 • அவற்றின் சுவர்களும், தூண்கள் தாங்கும் மண்டபங்களும் கடவுளர் மற்றும் மனிதர்களின் அழகான சிற்பங்களைக் கொண்டு அழகூட்டப்பட்டுள்ளன.
 • இரண்டாவது நிலை, பட்டாடக்கல் என்ற இடத்தில் காணப்படும் கோயில்கள். இங்கு பத்து கோயில்கள் உள்ளன – நான்கு வடஇந்தியா கலைப்பாணியில் அமைந்துள்ளன.
 • எஞ்சிய ஆறு திராவிட கலைப்பாணியிலானவை. வட இந்திய கலைப்பாணியில் அமைக்கப்பட்டுள்ள பாபநாதர் கோயில் குறிப்பிடத்தக்கது.
 • திராவிடக் கலைப்பாணியில் அமைந்த சங்கமேஸ்வரர் கோயில் மற்றும் விருப்பாட்சர் ஆலயம் இரண்டும் புகழ் பெற்றவை.
 • காஞ்சி கைலாசநாதர் ஆலயத்தைப் போன்றே விருப்பாட்சர் ஆலயம் கட்டப்பட்டுள்ளது. இரண்டாம் விக்ரமாதித்தனின் அரசிகளில் ஒருவரால் இது கட்டுவிக்கப்பட்டது.
 • காஞ்சியிலிருந்து சிற்பிகள் வரவழைக்கபட்டு இக்கோயில் கட்டபட்டது என்று கருதப்படுகிறது.
Download TNPSC அரசியலமைப்பு பாடக்குறிப்புகள்

இராஷ்டிரகூடர்கள் (கி.பி. 755 – 975):

 • கன்னட இனத்தைச் சேர்ந்த இராஷ்டிரகூடர்களின் தாய்மொழி கன்னடமொழியாகும். இராஷ்டிரகூட மரபைத் தோற்றுவித்தவர் தந்தி துர்க்கர்.
 • கூர்ஜரர்களை முறியடித்து அவர்களிடமிருந்து மாளவத்தை தந்தி துர்க்கர் கைப்பற்றினார்.
 • பின்னர், இரண்டாம் கீர்த்தி வர்மனை முறியடித்து சாளுக்கிய நாட்டை அவர் கைப்பற்றினார். இவ்வாறு, இராஷ்டிர கூடர்கள் தக்காணத்தில் முதன்மை அரசை உருவாக்கினர்.
 • அடுத்து ஆட்சிக்கு வந்த முதலாம் கிருஷ்ணர் ஒரு பெரும் வெற்றி வீரர். கங்கர்களையும் வெங்கிச் சாளுக்கியரையும் அவர் முறியடித்தார்.
 • எல்லோராவில் பெரிய பாறையைக் குடைந்து ஒரே கல்லாலான கைலாவர் ஆலயத்தை அவர் அமைத்தார்.
 • இராஷ்டிராகூடர்களின் அடுத்;த சிறந்த அரசர் மூன்றாம் கோவிந்தர். வடஇந்திய அரசுகளுக்கெதிராக அவர் பல வெற்றிகளைப் பெற்றார்.
 • பின்னர் பதவிக்கு வந்த முதலாம் அமோகவர்ஷர் (கி.பி. 815- 880) அறுபத்தி நான்கு ஆண்டுகாலம் ஆட்சி புரிந்தார்.
 • அவரது காலத்தில் மாளவமும், கங்கவாடியும் சுதந்திர அரசுகளாயின. இருப்பினும், பண்பாட்டு வளர்ச்சிக்கு அவரது ஆட்சிக்காலம் சிறப்பு பெற்றது.
 • அவர் சமண சமயத்தை பின்பற்றினார். ஜீனசேனர் அவரது சமயகுரு. கற்றோரை ஆதரிக்கும் பண்புடையவராகவும் அவர் திகழ்ந்தார்.
 • கவிராஜ மார்க்கம் என்ற புகழ்வாய்ந்த கன்னட நூலை முதலாம் அமோகவர்ஷர் படைத்தார்.
 • இராஷ்டிரகூடர்களின் தலைநகரான மால்கெட் அல்லது மான்யகேதம் என்ற நகரையும் அவர் நிர்மாணித்தார்.
 • அமோகவர்ஷரின் வழித் தோன்றல்களில் குறிப்பிடத்தக்கவர் மூன்றாம் கிருஷ்ணர் (கி.பி.936 – 968). அவரது போர்வெற்றிக்ள குறிப்பிடத்தக்கவை.
 • சோழர்களுக்கெதிராக அவர் படையெடுத்து தக்கோலம் என்ற இடத்தில் சோழப்படைகளை முறியடித்தார்.
 • மேலும் தெற்கு நோக்கி முன்னேறிய அவர் தஞ்சாவூரைக் கைப்பற்றினார். ராமேஸ்வரம் வரை சென்ற அவர் அதனை சிறிது காலம் தம் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்.
 • தாம் கைப்பற்றிய பகுதிகளில் பல கோயில்களையும் அவர் கட்டுவித்தார். இராமேஸ்வரத்தில் கிருஷ்ணேஸ்வரர் ஆலயம் அவரால் கட்டப்பட்டது.
 • காஞ்சி உள்ளிட்ட தொண்டை மண்டலம் அவர் ஆட்சிக் காலம் முழுவதும் இராஷ்டிரகூடர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது. அவரது மறைவுக்குப் பிறகு இராஷ்டிரகூடர்கள் வீழ்ச்சியடைந்தனர்.

ஆட்சி முறை:

 • இராஷ்டிரகூட பேரரசு, ராஷ்டிரம் என்ற மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தது. இவற்றை ராஷ்டிரபதிகள் நிர்வகித்தனர்.
 • ராஷ்டிரம் ஒவ்வொன்றும் பல விஷயங்களாக (மாவட்டங்களாக) பிரிக்கப்பட்டன. மாவட்ட நிர்வாகத்திற்கு விஷயபதி பொறுப்பாவார்.
 • அடுத்த ஆட்சிப் பிரிவு புக்தி எனப்பட்டது. இதில் 50 முதல் 70 கிராமங்கள் இருந்தன. புக்தியின் ஆட்சியாளர் போகபதி எனப்பட்டார்.
 • இந்த அதிகாரிகள் நேரடியாக மத்திய அரசால் நியமிக்கப்பட்டனர். கிராம நிர்வாகம் கிராமத் தலைவரால் நடத்தப்பட்டது. கிராம நிர்வாகத்தில் கிராம சபைகள் பெரும்பங்கு வகித்தன.
TNPSC சைவம் & வைணவம் பாடக்குறிப்புகள் Download

சமூக பொருளாதார நிலைமைகள்:

 • இந்து சமயப் பிரிவுகளான சைவமும் வைணவமும் இராஷடிர கூடர்களின் ஆட்சியில் செழித்து வளர்ந்தன. இருப்பினும், சமண சமயமும் அரசர் மற்றும் உயர் அதிகாரிகள் ஆதரவைப் பெற்று வளர்ச்சி கண்டது. தக்காணத்தின் மக்கள் – தொகையில் மூன்றில் ஒரு பகுதியினர் சமணர்கள்.
 • கன்ஹேரி, ஷோலாபூர், தார்வார் போன்ற ஒரு சில இடங்களில் புத்தசமய குடியிருப்புகளும் தழைந்திருந்தன. பல்வேறு சமயங்களுக்கிடையே நல்லிணக்கம் நிலவியதுத் குறிப்பிடத்தக்கது.
 • தற்கால பீஜப்பூர் மாவட்டத்திலுள்ள சாலடோகி என்ற இடத்தில் ஒரு கல்லூரியும் இக்காலத்தில் செயல்பட்டது. இந்த கல்விக் கூட்டத்தைப் பற்றி ஒரு கல்வெட்டு விரிவான தகவல்களைத் தருகிறது.
 • செல்வந்தர்கள் அளித்த கொடை மற்றும் விழாக்களின் போதும் ஆகியவற்றின் உதவியோடு இக்கல்வி நிறுவனம் நடத்தப்பட்டது.
 • இராஷ்ராகூடர் ஆட்சிக் காலத்தில் பொருளாதாரமும் தழைத்திருந்தது. தக்காணத்திற்கும் அரோபியர்களுக்கும் இடையே வாணிபம் செழித்திருந்தது.
 • அவர்களோடு நட்புறவு கொண்ட இராஷ்டிராகூட அரசர்கள் வாணிப வளர்ச்சிக்கும் ஊக்கமளித்தனர்.

பண்பாட்டுப் பங்களிப்பு :

 • இராஷ்டிரகூடர்கள் வடமொழியை பெரிதும் ஆதரித்தனர். இராஷ்டிரகூட அரசவையில் பல அறிஞர்கள் இருந்தனர்.
 • நலிசம்பு என்ற நூலை திருவிக்ரமன் எழுதினர். மூன்றாம் கிருஷ்ணரது ஆட்சிக் காலத்தில் ஹளயுதா என்பவர் கவிரஹஸ்யம் என்ற நூலைப் படைத்தார்.
 • இராஷ்டிராகூடர்களின் அரவணைப்பினால் சமணசமய இலக்கியங்களும் வளர்ச்சி பெற்றன. சமணரான முதலாம் அமோகவர்ஷர் பல சமண அறிஞர்களை ஆதரித்தார்.
 • அவரது ஆசிரியரான ஜீனசேனர் பார்சுவநாதரின் வாழ்க்கை வரலாற்றை செய்யுள் நடையில் ‘பார்சவபூதயா’ என்ற தலைப்பில் எழுதினார்.
 • பல்வேறு சமண முனிவர்களின் வாழ்க்கை வரலாறுகளைத் தொகுத்து ஆதிபுராணம் என்ற தலைப்பில் குணபத்ரர் என்பவர் எழுதினர்.
 • அமோக விருத்தி என்ற இலக்கண நூலை சாகதாயனா என்பவர் படைத்தார். வீராச்சாரியார் என்ற அக்கால கணிதமேதை ‘கணிதசாரம்’ என்ற நூலை எழுதினார்.
 • இராஷ்டிரகூடர்களின் ஆட்சிக்காலத்தில் கன்னட இலக்கியமும் வளர்ச்சி கண்டது. அமோகவர்ஷர் இயற்றிய கவிராஜமார்க்கம் கன்னடமொழியில் எழுதப்பட்ட முதல் கவிதை நூலாகும். பம்பா என்பவர் கன்னடமொழிக் கவிஞர்களில் தலைசிறந்தவர்.
 • அவரது புகழ்பெற்ற நூல் ‘விக்ரமசேனவிஜயம்’. பொன்னா என்ற மற்றொரு கன்னடக் கவிஞர் ‘சாந்திபூரணா’ என்ற நூலை எழுதினார்.

கலை,  கட்டிடக் கலை:

 • இராஷ்டிரசுடர்களின் கலை, கட்டிடக் கலையை எல்லோரா மற்றும் எலிபான்டாவில் காணலாம். எல்லோராவில் உள்ள புகழ்பெற்ற கோயில் கைலாசர் கோயிலாகும்.
 • முதலாம் கிருஷ்ணர் காலத்தில் இக்கோயில் வடிக்கப்பட்டது. இருநூறு அடி நீளமும், நூறு அடி அகலம், உயரம் கொண்ட பிரமாண்டமான கல்லில் இது வடிக்கப்பட்டுள்ளது.
 • இக்கோயிலில் நான்கு பகுதிகள் உள்ளன – மூலக்கோயில், நுழைவாயில், நந்திமண்டபம், முகமண்டபம். 25 அடி உயரமுடைய மேடையின்மீது இக்கோயில் கம்பீரமாக நிற்கிறது.
 • மேடையின் முகப்பில் யானைகளும், சிங்கங்களும் மேடையை தாங்குவது போல செதுக்கப்பட்டுள்ளன.
 • மூன்றடுக்கு சிகரம் மாமல்லபுரம் ரதங்களை நினைவுபடுத்துகிறது. கோயிலுக்குள் பதினாறு சதுரத் தூண்கள் கொண்ட மண்டபம் உள்ளது.
 • அழகிய சிற்பங்களைக் கொண்ட கைலாசர் கோயில் உண்மையில் கட்டிடக்கலையின் பிரமாண்டம் எனலாம். துர்க்கை எருதுமுக அரக்கனை கொல்வது போன்ற சிற்பம் மகத்தானது.
 • ராவணன் கைலாச மலையை தூக்க முயற்சிப்பது போன்ற சிற்பம் குறிப்பிடத்தக்கது. சுவர்களில் இராமயணக் காட்சிகள் செதுக்கப்பட்டுள்ளன.
 • கைலாசர் கோயிலின் பொதுப் பண்ர் திராவிடகலைப் பாணியைச் சார்ந்தது.
 • பம்பாய்க்கு அருகிலுள்ள தீவு எலிபான்டா, முதலில் அது ஸ்ரீபுரி என்று அழைக்கப்பட்டது. பெரிய யானையின் சிற்பத்தை கண்ட போர்சுகீசியர்கள்.
 • அதற்கு எலிபான்டா என்ற பெயரிட்டு அழைத்தனர். அங்கு இராஷ்டிர கூடர்களின் கலை அதன் உச்ச கட்டத்தை எட்டியது எனலாம்.
 • எல்லோரா, எலிபான்டா சிற்பங்களுக்கிடையே ஒற்றுமையைக் காணமுடிகிறது. அவற்றை ஒரே குழுவைச் சேர்ந்த சிற்பிகள் உருவாக்கியிருக்க வேண்டும்.
 • கருவுறைக்குள் நுழையுமுன் உள்ள துவாரபாலகர் சிலை பிரமாண்ட வடிவிலானது. சுற்றுச் சுவர்களில் நடராஜர், கங்காதரர், அர்த்த நாரீஸ்வரர், சோமஸ்கந்தர் என்று சிவனின் பல வடிவங்கள் தீட்டப்பட்டுள்ளன. திருமூர்த்தி உருவம் மிகப்பெரியது.
 • ஆறு மீட்டர் உயரமுடையது. படைத்தல், காத்தல், அழித்தல் என்ற மூன்று தொழில்களையும் செய்யும் சிவனை அது பிரதிபலிப்பதாகக் கூறப்படுகிறது.

PDF Download

பண்டையக் கால இந்திய வரலாறு பாடக்குறிப்புகள்

WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்

Telegram Channel கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here