IND vs SA 2வது ஒருநாள் போட்டி: தென்னாப்பிரிக்காவுக்கு பதிலடி கொடுக்குமா இந்தியா? ரசிகர்கள் எதிர்பார்ப்பு!

0
IND vs SA 2வது ஒருநாள் போட்டி: தென்னாப்பிரிக்காவுக்கு பதிலடி கொடுக்குமா இந்தியா? ரசிகர்கள் எதிர்பார்ப்பு!
IND vs SA 2வது ஒருநாள் போட்டி: தென்னாப்பிரிக்காவுக்கு பதிலடி கொடுக்குமா இந்தியா? ரசிகர்கள் எதிர்பார்ப்பு!
IND vs SA 2வது ஒருநாள் போட்டி: தென்னாப்பிரிக்காவுக்கு பதிலடி கொடுக்குமா இந்தியா? ரசிகர்கள் எதிர்பார்ப்பு!

தென்னாபிரிக்கா, இந்திய அணிகள் மோதிய முதல் ஒரு நாள் போட்டியில் தென்னாபிரிக்கா அணி அபார வெற்றி பெற்றது. இதை தொடர்ந்து இன்று தொடங்கவிருக்கும் 2வது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி தென்னாப்பிரிக்காவுக்கு பதிலடி கொடுக்கும் என்று ரசிகர்களிடம் எதிர்பார்த்து கிளம்பியுள்ளது.

ரசிகர்கள் எதிர்பார்ப்பு:

கடந்த டிசம்பர் 26 ஆம் தேதி தொடங்கிய இந்தியா, தென் ஆப்பிரிக்கா இடையிலான டெஸ்ட் தொடரில் தென் ஆப்பிரிக்கா அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இதை தொடர்ந்து ஜனவரி 17 ஆம் தேதி நடைபெற்ற முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் 1-0 என தென்னாபிரிக்க அணி முன்னிலை வகிக்கிறது. எனவே இன்று நடைபெறும் 2வது போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே இந்தியா தொடரை கைப்பற்ற வாய்ப்பு உள்ளது.

திருப்பதி தரிசனம் செல்ல திட்டமிடுவோர் கவனத்திற்கு – பிப்.8 முதல் மீண்டும் முன்பதிவில்லா இருக்கை!

சமீபத்தில் இந்திய அணியின் ஒரு நாள் மற்றும் T20 போட்டிகளுக்கு ரோஹித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டார். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் ஹாம்ஸ்ட்ரிங் இஞ்சூரி காரணமாக ரோஹித் அணியில் இடம் பெறவில்லை. இதை தொடர்ந்து KL ராகுல் கேப்டனாக நியமிக்கப்பட்டு அணியை வழி நடத்தி வருகிறார். இந்நிலையில் முதல் ஒரு நாள் போட்டியில் ரோஹிட்க்கு பதில் ராகுல் ஓப்பனிங் செய்தார். முதல் போட்டியில் தொடக்கத்தில் தவான் மற்றும் கோஹ்லி சிறப்பாக விளையாடினார்கள். இந்திய அணி வெற்றி பெரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இருவரும் அவுட் ஆக மிடில் ஆர்டரில் வந்த பேட்ஸ்மேன்கள் தொடர்ந்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இதனால் இந்திய அணி தோல்வி நிலைக்கு தள்ளப்பட்டது.

ஜல்லிக்கட்டு அரங்கம், புதிய சிப்காட் தொழிற்பூங்கா – மாமதுரையாகும் ‘மதுரை’ நகரம்! முதல்வர் உரை!

இதை தொடர்ந்து இன்று பார்ல் மைதானத்தில் பிற்பகல் 2 மணிக்கு தொடங்கவிருக்கும் 2வது ஒரு நாள் போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் 11 யில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே டெஸ்ட் தொடரை கைபற்றிய தென் ஆப்பிரிக்க அணி ஒரு நாள் தொடரை வெல்வதிலும் தீவிரம் காட்டுகிறது. முதலாவது ஆட்டத்தில் கிடைத்த வெற்றி அந்த அணிக்கு கூடுதல் நம்பிக்கை அளித்துள்ளது. எனினும் 2வது போட்டியில் தென் ஆப்பிரிக்காவுக்கு தவறுகளை திருத்தி இந்திய அணி பதிலடி தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!