SIIMA 7 விருதுகளை வென்ற சூர்யாவின் ‘சூரரைப் போற்று’ திரைப்படம் – ரசிகர்கள் வாழ்த்து!

0
SIIMA 7 விருதுகளை வென்ற சூர்யாவின் 'சூரரைப் போற்று' திரைப்படம் - ரசிகர்கள் வாழ்த்து!
SIIMA 7 விருதுகளை வென்ற சூர்யாவின் 'சூரரைப் போற்று' திரைப்படம் - ரசிகர்கள் வாழ்த்து!
SIIMA 7 விருதுகளை வென்ற சூர்யாவின் ‘சூரரைப் போற்று’ திரைப்படம் – ரசிகர்கள் வாழ்த்து!

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் கடந்த ஆண்டு ஓடிடியில் வெளியான படம் ‘சூரரைப் போற்று”. இந்த படம் தற்போது சைமா 2020 விருது நிகழ்ச்சியில் 7 பிரிவுகளில் விருதுகளை வென்று அசத்தி உள்ளது. இதற்கு பல்வேறு தரப்புகளில் இருந்து வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

7 விருதுகள்:

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சூர்யா, அபர்ணா பாலமுரளி நடிப்பில் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியான ‘சூரரைப் போற்று’ படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. இந்தியாவில் முதல் பட்ஜெட் விமான பயணத்தை உருவாக்கிய ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்றை தழுவி எடுக்கப்பட்ட இந்த படத்தை சுதா கொங்கரா இயக்கியிருந்தார். ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்திருந்த இந்த படத்தை பல்வேறு திரையுலக பிரபலங்களும் பார்த்து பாராட்டினார்கள்.

முடிவுக்கு வரும் விஜய் டிவியின் ‘தேன்மொழி பிஏ’ சீரியல் – ரசிகர்கள் அதிர்ச்சி!

கடந்த ஆண்டு ஓடிடி தளத்தில் வெளியான படங்களில் அதிகம் பேரால் பார்க்கப்பட்ட தமிழ் படம் என்கிற பெருமையும் இந்த படத்திற்கு கிடைத்தது. மேலும் சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த இயக்குநர், சிறந்த இசையமைப்பாளர், சிறந்த கதாசிரியர் உள்ளிட்ட அனைத்துப் பிரிவுகளிலும் ஆஸ்கார் போட்டியில் களம் இறங்கியது. அண்மையில் மெல்போர்ன் திரைப்பட விழாவிலும் சிறந்த நடிகருக்கான விருதை சூர்யாவும் சிறந்த படத்துக்கான விருதை ‘சூரரைப் போற்று’ படம் பெற்றது.

அனுவின் திட்டங்களை முறியடிப்பேன், சவால் விடும் அர்ஜுன் – “ரோஜா” சீரியல் ப்ரோமோ!

இந்நிலையில் 2020 ஆம் ஆண்டிற்கான சினிமா விருதுகளில் சூரரைப் போற்று படம் 7 பிரிவுகளில் வென்றுள்ளது. இதனை 2டி என்டர்டைன்மென்ட் மகிழ்ச்சியுடன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. அதோடு சூரரைப் போற்று டீம் சைமா விருது வழங்கும் விழாவில் எடுத்துக் கொண்ட போட்டோக்களையும் பகிர்ந்துள்ளது. அதன் படி விருது பெற்றவர்கள் விவரம்,

  • சிறந்த நடிகர் – சூர்யா
  • சிறந்த படம் – சூரரைப் போற்று
  • சிறந்த டைரக்டர் – சுதா கொங்கரா
  • சிறந்த நடிகை – அபர்ணா பாலமுரளி
  • சிறந்த இசையமைப்பாளர் – ஜிவி.பிரகாஷ்
  • சிறந்த ஒளிப்பதிவாளர் – நிகித்பொம்மி
  • சிறந்த பின்னணி பாடகர் – ஹரிஷ் சிவராமகிருஷ்ணன்

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!