தியேட்டரில் வெளியாக உள்ள ‘சூரரைப் போற்று’ திரைப்படம்? ரசிகர்கள் ஆர்வம்!

0
தியேட்டரில் வெளியாக உள்ள 'சூரரைப் போற்று' திரைப்படம்? ரசிகர்கள் ஆர்வம்!
தியேட்டரில் வெளியாக உள்ள 'சூரரைப் போற்று' திரைப்படம்? ரசிகர்கள் ஆர்வம்!
தியேட்டரில் வெளியாக உள்ள ‘சூரரைப் போற்று’ திரைப்படம்? ரசிகர்கள் ஆர்வம்!

சூர்யா நடிப்பில் வெளியான ‘சூரரைப் போற்று’ திரைப்படத்தை திரையரங்குகளில் வெளியிட பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இது ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தி உள்ளது.

சூரரைப் போற்று:

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக திரையரங்குகள் பல மாதங்களாக மூடப்பட்டன. தற்போது தினசரி தொற்று உறுதி செய்யப்படுவோர் எண்ணிக்கை குறைந்து வருவதால் கடந்த திங்கட்கிழமை முதல் திரையரங்குகள் 50 சதவிகித பார்வையாளர்களுடன் இயங்க அனுமதி வழங்கப்பட்டது. இந்நிலையில் பல புதிய படங்கள் படப்பிடிப்பு முடிந்து வெளியிட தயாராக இருந்தாலும், திரையரங்குகள் திறக்கப்பட்டு சில நாட்கள் மட்டுமே ஆகின்றன. இதனால் மக்கள் எந்த அளவு தியேட்டர்களுக்கு செல்வார்கள் என்ற தயக்கத்துடன் உரிமையாளர்கள் உள்ளனர்.

ஹேமா, லட்சுமியுடன் சேர்ந்து வெண்பா வெளியிட்ட வீடியோ – குவியும் லைக்குகள்!!

எனவே ஏற்கனவே ஓடிடி தளங்களில் வெளியிடப்பட்டு வெற்றி பெற்ற படங்களை மீண்டும் திரையரங்குகளில் வெளியிட திட்டமிட்டு வருகின்றனர். அந்த வரிசையில் சூர்யா நடித்து அமேசானில் வெளியான சூரரைப் போற்று திரைப்படத்தை திரையரங்கில் வெளியிட திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த சுதா கொங்கரா இயக்கினார். சூர்யாவுக்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடித்தார். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்தார். இப்படம் அமேசான் பிரைமில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அத்துடன் இந்தி, தெலுங்கு, கன்னட, மலையாள பட நடிகர், நடிகைகள் உள்ளிட்ட பலரும் இப்படத்தைப் பாராட்டினர்.

இதனால் இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் ரீமேக் செய்ய தயாரிப்பாளர்களும், நடிகர்களும் ஆர்வமாக இருந்தனர். இந்தியில் நடிகர் ஷாகித் கபூர் இந்த படத்தை ரீமேக் செய்து நடிக்க விருப்பப்பட்டார். இப்போது இந்த படத்தின் இந்தி ரீமேக்கை சூர்யாவே தனது 2டி எண்டர்டெயின்மெண்ட் மூலமாக தயாரிக்க உள்ளாராம். அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்நிலையில் இந்த படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

TN Job “FB  Group” Join Now

அப்படி வெளியிடுவதால் கிடைக்கும் லாபத் தொகையை திரையரங்கு உரிமையாளர்களும், திரையரங்கு உரிமையாளர் சங்கமும் பகிர்ந்து கொள்ளலாம் என்று சூர்யாவின் 2டி எண்டெர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. எனவே இந்த பேச்சுவார்த்தையில் அதற்கான முடிவு எட்டப்பட்டால் வரும் வாரங்களிலேயே ‘சூரரைப் போற்று’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!