WhatsApp ல் உங்க அக்கவுண்ட்டை யாராவது பிளாக் செய்து உள்ளனரா? அறிந்து கொள்ள சில குறிப்புகள்!

0
WhatsApp ல் உங்க அக்கவுண்ட்டை யாராவது பிளாக் செய்து உள்ளனரா? அறிந்து கொள்ள சில குறிப்புகள்!
WhatsApp ல் உங்க அக்கவுண்ட்டை யாராவது பிளாக் செய்து உள்ளனரா? அறிந்து கொள்ள சில குறிப்புகள்!
WhatsApp ல் உங்க அக்கவுண்ட்டை யாராவது பிளாக் செய்து உள்ளனரா? அறிந்து கொள்ள சில குறிப்புகள்!

உங்கள் வாட்ஸ் அப் கணக்குகளை யரேனும் பிளாக் செய்திருந்தால் அவற்றை நாம் சில குறிப்புகள் மூலம் எளிதான முறையில் அறிந்து கொள்ள முடியும். இது குறித்து வாட்ஸ் அப் அதன் கேள்விகள் பக்கத்தில் (FAQ) பட்டியலிட்டுள்ளது.

பிளாக் கணக்கு

சிறந்த தகவல் தொடர்பு நிறுவனமான வாட்ஸ் அப் செயலி அதன் பயனர்களுக்கு பல நன்மைகளை அளித்து வருகிறது. அதாவது உலகின் எந்தவொரு இடத்தில் உள்ளவர்களையும் எந்தவொரு நேரத்திலேயும் நீங்கள் எளிதாக தொடர்பு கொள்ளலாம். இந்த செயலியில் செய்திகளை அனுப்புவது, பேசுவது, புகைப்படங்கள், வீடியோக்கள் உள்ளிட்டவற்றை அனுப்புவது உள்ளிட்ட பல சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த வரிசையில் வாட்ஸ் அப் கணக்குகளை முடக்கம் செய்வது போன்ற பயன்பாடுகளும் உள்ளது.

ரேஷன் கடைகளில் காலாவதியாகும் பொருட்களுக்கு அலுவலரே பொறுப்பு – சுற்றறிக்கை வெளியீடு!

அந்த வகையில் உங்கள் கணக்குகளை யாரேனும் ஒருவர் பிளாக் செய்திருந்தால், அதைக் கண்டுபிடிக்க பல வழிகள் உள்ளது. இந்த வழிகளை வாட்ஸ் அப் நிறுவனம் அதன் கேள்விகள் பக்கத்தில் (FAQ) பட்டியலிட்டுள்ளது. அதன் படி பயனர்களது வாட்ஸ் அப் கணக்குகள் பிளாக் செய்யப்பட்டுள்ளதா என்பதை அறிய சில வழிகளை வாட்ஸ் அப் பகிர்ந்துள்ளது. அந்த வகையில், வாட்ஸ் அப்பில் உங்களது கணக்குகள் பிளாக் செய்யப்பட்டிருந்தால், அந்த நபரது last seen செயல்பாடுகள் தெரியாது.

தொடர்ந்து உங்களது கணக்குகளை பிளாக் செய்திருக்கும் நபரது chat box ல் last seen ஐ நீங்கள் இனி பார்க்க முடியாவிட்டால், அவர்கள் உங்கள் கணக்கை பிளாக் செய்திருக்கலாம். இருப்பினும், last seen ஐ மறைக்கும் பயன்பாடுகள் வாட்ஸ் அப்பில் கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதை தொடர்ந்து அந்த நபரின் சுயவிவரங்கள் குறித்த எந்த அப்டேட்களையும் உங்களால் காண முடியாது. அந்த நபரது ப்ரொபைல் படம் உங்களுக்கு தெரியாது.

இதை தொடர்ந்து உங்கள் கணக்கை பிளாக் செய்திருப்பதாக நீங்கள் சந்தேகிக்கும் நபரது வாட்ஸ் அப் கணக்குக்கு செய்திகளை அனுப்ப வேண்டும். இந்த செய்திகள் பயனருக்கு சென்ற பின்னாக முதலாவது ஒரு டிக் மட்டுமே காணப்படும். தொடர்ந்து அந்த செய்திகள் அனுப்பப்பட்டதுக்கு பின்னாக இரண்டாவது டிக் வராவிட்டால், உங்கள் கணக்கு பிளாக் செய்திருக்கிறதென்று அர்த்தமாகும். இது தவிர வாட்ஸ் அப்பில் உங்கள் கணக்கை பிளாக் செய்திருப்பவர்களை அழைக்க முயற்சித்தாலும் தொடர்பு கொள்ள முடியாது.

TN Job “FB  Group” Join Now

இந்த அனைத்து செயல்பாடுகளும் உங்கள் கணக்குகளில் கண்டுபிடிக்கப்பட்டால், உங்கள் கணக்கு பிளாக் செய்திருப்பதாக அர்த்தம். வாட்ஸ் அப் செயலியில் நீங்கள் பிறரது கணக்குகளை தடுக்க, முதலாவது Settings குள் செல்லவும். பிறகு Account என்பதில் Privacy என்பதை தேர்வு செய்யவும். பிறகு Blocked என்பதில் Add New என்ற ஆப்ஷனில் பிளாக் செய்ய வேண்டிய நபரை தேர்ந்தெடுக்கவும். தற்போது வெளிவரவுள்ள ஜிபி வாட்ஸ் அப் பயன்பாட்டின் குளோன் பதிப்பை நீங்கள் பதிவிறக்கம் செய்தால், உங்கள் வாட்ஸ் அப் கணக்கை நிரந்தரமாக இழக்க நேரிடும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!