தமிழகத்தில் 8ம் வகுப்பு முடித்தவர்களுக்கு சமூக நலத்துறை வேலை – விண்ணப்பங்கள் வரவேற்பு!

0
தமிழகத்தில் 8ம் வகுப்பு முடித்தவர்களுக்கு சமூக நலத்துறை வேலை - விண்ணப்பங்கள் வரவேற்பு!
தமிழகத்தில் 8ம் வகுப்பு முடித்தவர்களுக்கு சமூக நலத்துறை வேலை - விண்ணப்பங்கள் வரவேற்பு!
தமிழகத்தில் 8ம் வகுப்பு முடித்தவர்களுக்கு சமூக நலத்துறை வேலை – விண்ணப்பங்கள் வரவேற்பு!

தமிழகத்தில் அரசு துறைகளில் உள்ள பல்வேறு காலிப்பணியிடங்கள் தற்போது நிரப்பப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு பென்ட்லண்ட் மருத்துவமனையில் இயங்கும் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் காலிப்பணியிடங்களை நிரப்ப உள்ளதாக தெரிவித்துள்ளது.

சமூக நலத்துறை வேலைவாய்ப்பு:

தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து அரசு அலுவலகங்களில் உள்ள காலிப்பணியிடங்களை உடடியாக நிரப்ப பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனை தொடர்ந்து வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு பென்ட்லேண்ட் மருத்துவமனையில் இயங்கும் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் வழக்கு உதவியாளர், ஓட்டுநர், பல்நோக்கு உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்கள் காலியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் தகுதியான நபர்களிடம் இருந்து வரவேற்கப்படுகிறது.

IND vs WI: இந்திய அணியில் 4 வீரர்களுக்கு கொரோனா உறுதி – ரசிகர்கள் அதிர்ச்சி!

இப்பணிக்கு 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் விண்ணப்பிக்கலாம். அத்துடன் ஓட்டுநர்/ காவலர் பணியிடத்திற்கு ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும். மேலும் வழக்கு பணியாளர் பணியிடத்துக்கு Master’s of Social Work, Counselling Psychology or Development Management ஆகியவற்றை படித்திருக்க வேண்டும். மேலும் இப்பணிக்கு நேர்முகத் தேர்வு முறை மூலமாக தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். இதற்கு பிப்ரவரி 12ம் தேதிக்குள் விண்ணப்பங்களை சமர்பித்து முடித்திருக்க வேண்டும்.

பிப்ரவரி 7ம் தேதி முதல் மார்ச் 7 வரை பள்ளிகளுக்கு விடுமுறை – அரசு அறிவிப்பு!

இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் https://cdn.s3waas.gov.in/s31651cf0d2f737d7adeab84d339dbabd3/uploads/2022/01/2022011968.pdf என்ற இணையதள முகவரியில் தரப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்ய வேண்டும். இந்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அதனை நகல் எடுத்து தேவையான ஆவணங்களுடன் இணைத்து மாவட்ட சமூக நல அலுவலகம், ’பி’ பிளாக், 4-வது தளம், மாவட்ட ஆட்சியரகம், வேலூர் – 09 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். மேலும் இது தொடர்பான கூடுதல் விவரங்களை பெற https://cdn.s3waas.gov.in/s31651cf0d2f737d7adeab84d339dbabd3/uploads/2022/01 2022011979.pdf என்ற லிங்க் கிளிக் செய்து பார்க்கலாம்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!