தமிழகத்தில் மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு – சமூக நலத்துறை திட்டம்! அமைச்சர் தகவல்!

0
தமிழகத்தில் மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு - சமூக நலத்துறை திட்டம்! அமைச்சர் தகவல்!
தமிழகத்தில் மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு - சமூக நலத்துறை திட்டம்! அமைச்சர் தகவல்!
தமிழகத்தில் மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு – சமூக நலத்துறை திட்டம்! அமைச்சர் தகவல்!

பெண்கள் அதிக அளவில் மார்பக புற்றுநோயால் சமீப காலங்களில் அதிகம் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் தமிழகத்தில் மக்களுக்கு மார்பக புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள சமூக நலத்துறை திட்டமிட்டுள்ளது.

புற்றுநோய்:

நாடு முழுவதும் ஏராளமான பெண்கள் மார்பகப் புற்று நோய்க்கு ஆளாகி வருகின்றனர். உலக அளவில் இந்தியாவில் மட்டும் அதிகப்படியான பெண்கள் மார்பகப் புற்றுநோய்க்கு ஆளாவதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. இந்த நோய் ஆரம்ப கட்டத்தில் எந்தவித அறிகுறிகளையும் காட்டாது. அதனால் 25 லிருந்து 30 வயதிற்கு உட்பட்ட பெண்கள் வருடத்திற்கு ஒரு முறை எம். ஆர். ஐ ஸ்கேன் கட்டாயம் செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

 

இந்த நோய் ரத்த உறவுகளில் யாருக்காவது மார்பகப் புற்றுநோய் இருத்தலோ, கதிரியக்க சிகிச்சைகள் எடுத்து கொண்டவர்கள், ஏற்கனவே புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கும் நபர்கள், மெனோபாஸ், மாசு நிறைந்த காற்றை தொடர்ந்து சுவாசிப்பவர்கள் போன்றவர்களுக்கு ஏற்பட வாய்ப்புள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கிறது. அதுமட்டுமல்ல அதிகப்படியாக மது அருந்துதல் மற்றும் புகைபிடித்தல் போன்றவைகளாலும் மார்பக புற்றுநோய் ஏற்படும். அதிகப்படியான கொழுப்பினால் ஏற்படும் அழற்சி கட்டிகளின் வளர்ச்சியை ஊக்குவித்து மார்பக புற்று நோய்க்கு வழிவகுக்கிறது.

அரசு பள்ளி மாணவர்களுக்கு இப்படி ஒரு திட்டமா? – மாநில அரசின் அறிவிப்பு!

Exams Daily Mobile App Download

இந்த புற்று நோயில் இருந்து பெண்கள் விடுபட குழந்தைக்கு இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக தாய்ப்பால் கொடுக்க வேண்டும். மேலும் மார்பக புற்றுநோய் அறிகுறி இருந்தால் மருத்துவரிடம் ஆலோசித்து உரிய சிகிச்சை கட்டாயம் பெற வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது. ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் முழுவதும் மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்தது. இந்த நிலையில் தமிழகத்தில் மக்களுக்கு மார்பக புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள சமூக நலத்துறை திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!