சென்னையில் புதியதாக இத்தனை பூங்காக்களா? கமிஷனர் ககன்தீப் சிங் பேடி தகவல்!!

0
சென்னையில் புதியதாக இத்தனை பூங்காக்களா? கமிஷனர் ககன்தீப் சிங் பேடி தகவல்!!
சென்னையில் புதியதாக இத்தனை பூங்காக்களா? கமிஷனர் ககன்தீப் சிங் பேடி தகவல்!!
சென்னையில் புதியதாக இத்தனை பூங்காக்களா? கமிஷனர் ககன்தீப் சிங் பேடி தகவல்!!

சென்னையின் சுற்றுச்சுழலை பாதுகாக்க பல்வேறு வகையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் இது தொடர்பான தகவல்களை தற்போது சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.

பூங்காக்கள்

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் சுற்றுச்சூழலை பாதுகாக்க தமிழக அரசு பல்வேறு வகையான நலத்திட்டங்களை செயற்படுத்தி வருகிறது. இதில் குறிப்பாக சென்னையில் சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், பொதுமக்கள் மகிழ்ச்சியாக தங்களின் விடுமுறை தினத்தை கொண்டாடவும் 738 பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பூங்காக்களை மாநகராட்சி முறையாக பராமரித்து வருகிறது. இதையடுத்து சிங்காரச் சென்னை 2.0 திட்டம் தற்போது நடைமுறையில் உள்ளது. இந்த திட்டத்தின் ரூ.16.19 கோடி மதிப்பில் சென்னையில் 42 பூங்காக்கள் அமைக்கப்பட உள்ளது.

இதனை தொடர்ந்து சென்னையில் ரூ. 4.50 கோடி மதிப்பில் 11 விளையாட்டு திடல்கள் அமைக்கவும் கோரிக்கை வைக்கப்பட்டது. கடந்த செப்டம்பர் 29ம் தேதி மேயர் பிரியா தலைமையில் மாமன்ற கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தின் முடிவில் ஒப்பந்ததாரர்களுக்கு பணி ஆணைகளை வழங்கினார். இதில் ராயபுரம்-1, திரு.வி.க. நகர் -3, திருவொற்றியூர்-2 , மாதவரம்-8, தண்டையார்பேட்டை-1, பெருங்குடி-1, சோழிங்கநல்லூர்-9, அம்பத்தூர்-7, வளசரவாக்கம்-7, அடையாறு-3 என மொத்தமாக 42 புதிய பூங்காக்கள் அமைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

12,000 ஊழியர்களை சத்தமில்லாமல் வேலையை விட்டு தூக்கிய பிரபல நிறுவனம் – அதிர்ச்சி தகவல்!

Exams Daily Mobile App Download

இதே போன்று விளையாட்டு திடல்கள் சென்னையில் பெருங்குடி-2, சோழிங்கநல்லுர்-2, திருவொற்றியூர்-5, ராயபுரம்-1, வளசரவாக்கம்-1 உள்ளிட்ட 11 விளையாட்டு திடல்கள் அமைக்கப்பட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளதாவது, மேற்கண்ட பூங்காக்கள் மற்றும் விளையாட்டு திடல்களில் பொதுமக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து தரப்படும். இதற்கான பணிகள் அனைத்தும் விரைவில் தொடங்கப்பட்டு முழுவீச்சில் நடைபெறும். அதன்பின்பு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!